5 செப்., 2009

10 மாதங்களுக்கு பிறகு தாயுடன் சேய் சேர்ந்தது

  மும்பை,செப்.05
  
10 மாதங்களுக்கு முன்பு தனது தந்தையால் கடத்தபட்ட சுஜால் ஜுங் பலத்த போராட்டங்களுக்கு பிறகு தனது தாயிடம் மீண்டும் சேர்ந்தார்.

  மும்பை புறநகரான உல்லாஸ் நகரை சேர்ந்தவர் பிரித்தி ஜுங், இவருக்கும் மும்பை சென்டரலில் வசிக்கும் பண்டி என்பவருக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் மும்பை சென்டரிலில் உள்ள வீட்டில் தங்கி இருந்தனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சுஜால் என பெயரிட்டு வளர்த்து வந்தனர். இந்த நிலையில் கணவரின் நடவடிக்கை சரியில்லை என்று கூறி பிரித்தி விவாகரத்து பெற்றார்.

கோர்ட் குழந்தை சுஜால் தாயிடம் வளரவேண்டும் என்று உத்தரவிட்டதற்கு இனங்க குழந்தை தாயிடம் வளர்ந்து வந்தது. கடந்த அக்டோபர் மாதம் குழந்தையை பார்க்கவேண்டும் என்று கூறி, பிரித்தியை சுஜாலுடம் மும்பையில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்தனர்.

பண்டியின் அழைப்பை ஏற்று குழந்தையை கொண்டு சென்றபோது பண்டி பிரீத்தியிடம் இருந்து குழந்தையை பிடிங்கி கொண்டு கடத்தி சென்று விட்டார். இதனை அடுத்து பிரீத்தி போலீசாரிடம் புகார் செய்தார். இந்த புகாரை பெற்றுகொண்ட போலீசார் அதன் மீது நடவடிக்கை எதும் எடுக்காமல் குழந்தையை தேடுகிறோம் தேடுகிறோம் என்று கூறி காலம் கடத்தி வந்தனர். இதை அடுத்து பிரீத்தி மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மும்பை போலீசாரின் மெத்தனமான போக்கிற்கு கண்டனம் தெரிவித்த கையுட மராட்டிய மாநில காவல்த்துறை ஆணையர்  விர்க் இந்த விடயத்தில் நேரிடையாக ஈடுபடவேண்டும் இல்லை என்றால் எங்களால் முடியாது என்று குழந்தையின் தாயிடம் கூறிவிடுங்கள் என கண்டிப்புடன் ஆணையிட்டது.

போலீசார் முதலில் குழந்தை வெளிநாடுகளுக்கு கடத்தபட்டது என்று கூறிவந்தனர். அதன் பிறகு குழந்தை சூரத்தில் உள்ளதாக இப்படி பல முறை பலவித யூகங்கள் போலீசார் தரப்பில் சொல்லபட்டது. கடந்த வாரம் மாநில போலீஸ் கமிசனரை நேரடியாக கோர்ட்டிற்கு வரவழத்தை கண்டித்தது. இந்த நிலையில் குழந்தை தனது தாயுடன் நேற்று சேர்ந்தது.

குழந்தையின் உறவினர் ஒருவர் போலீசார் எங்களை மிகவும் துண்புறுத்துகிறார்கள். அதனால் குழந்தையை நாங்கள் தாயிடமே கொடுத்து விட விரும்புகிறோம் என்று கூறி மும்பை சர்ச்கேட் ரெயில் நிலையத்தில் வைத்து சுஜால் தனது தாயிடன் ஒப்படைக்க பட்டான்.

குழந்தை தாயிடம் திரும்பியதை அடுத்து மராட்டியமாநில காவல் துறை ஆணையர் விர்க் கோர்ட்டில் குழந்தை தாயிடம் சென்று விட்டதாக கூறினார். இதனை அடுத்து கடந்த 4 மாதங்களாக நடந்து வந்த வழக்கு முடிவிற்கு வந்தது.
இந்த சம்பவத்தில் போலீசார் யார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக