9 செப்., 2009

கட்சி தாவும் படலம் பார்ட் 2

 மும்பை செப்.09
     மராட்டிய மாநிலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கபட்டு விட்டதில் இருந்து அரசியல் களம் சூடாகி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸின் பரம்பரை புத்தியான வேறு கட்சியில் இருந்து ஆள் தூக்கும் படலம் ஜரூராக நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அகமத் நகர் சிவசேனாவை சேர்ந்த ஒரு சந்நியாசி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இந்த நிலையில் கடந்த வருடம் தான் முதல் மந்தியாக வருவோம் என கனவு காண்ட நாராயன் ரானே 
அது நிறைவேறாமல் போகவே சில நாட்கள் கோவித்து கொண்டு போனவர் மீண்டும் காங்கிரஸிற்கே வந்து சேர்ந்து விட்டார்.=இவர் முன்னாள் சிவசேனா ஆட்சியின் முதல் மந்திரியாக இருந்தவர்- என்னவோ தெரியவில்லை இவருக்கு முதல் மந்திரி பதவி மீது அப்படி  ஒரு பற்று -மக்களுக்கு சேவை செய்யனுப்பூ-  தேர்தலில் கருத்து கணிப்புகள் காங்கிரஸிற்கு ஆதரவாக இருப்பது போல் தெரிகிறது. அதனால் இப்போதில் இருந்தே தனது பலத்தை கூட்ட துவங்கி விட்டர். நாராயன் ரானே சிவசேனாவில் பிரபலமானவர்களை காங்கிரஸில் இழுத்து வந்து  தனக்கு ஆதரவாக மாற்ற துவங்கிவிட்டார். தேர்தல் முடிந்த உடன் தனக்கு முதல் மந்திரி பதவி கொடுக்காவிட்டால் தனது தரப்பில் இருந்து மிரட்டி பார்க்க இப்போதே தயாராகி வருகிறார். அவரது கனவு நிறைவேறுமா என்பது தேர்தலுக்கு பிறகுதான் தெரியவரும், தற்போது சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற நவநிர்மான் சேனாவுடனான போட்டியை எப்படி சமாளிப்பது என்ற ஆலோசனையில் சிவசேனா முழ்கி இருக்கிறது. ஒரு வேளை ராஜ் தாக்கரே தனது தரப்பில் கொஞ்சம் இளகி கொடுத்தால் மந்திராலயாவில் -தலைமை செயலகத்தில்- அடுத்த முறை காவி கொடி பறந்தாலும் பறக்கலாம்.  

 
கீழே உள்ள படங்கள் காங்கிரஸின் ஆள் பிடிக்கும் படலமும் , சூத்திரதாரி நாராயன் ரானேவும்,




   காங்கிரஸின் ஆள் பிடிக்கும் படலம் தொடர்கிறது. சில நாட்களுக்கு முன்பு சீட் தரவில்லை என்று சொல்லி ஒரு சாமியார் காங்கிரஸ¤க்கு வந்தது பற்றி அனைவரும் பார்த்து படித்திருப்பீர்கள். செவ்வாய் கிழமை சிவசேனாவின் தற்போதைய சட்ட மன்ற உறுப்பினர்கள் மானிக்ராவ் கோகடே, விநாயக் நிம்ஹன், ராஜெந்திர ராவுத் , இவர்கள் காங்கிரஸின் மும்பை ஆலுவலகங்களில் ஒன்றான தாதர் திலக்பவனில் முதல் மந்திரி அசோக் சவான் மற்றும் மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் மானிக்ராவ் தாக்கரே , தொழிற்சாலைத்துறை மந்திரி நாராயன் ராணேவிற்கு முன்பாக காங்கிரஸில் சேர்ந்த படம்

காங்கிரஸில் சேர்ந்த மூன்று சட்ட மன்ற உறுப்பினர்களும் நெற்று மாலை சட்டமன்ற தலைவர் பாபா சாகேப் குபேகரை சந்தித்து தங்களது ராஜினமா கடித்தை கொடுத்த போதூ எடுத்த படம் உடனிருப்பவர்கள் சட்ட மன்ற நிர்வாக அதிகாரி ஆனந் கலசே, மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் -கட்சி தாவியவர்- சாயாம் சாவந்த, மற்றும் கன்னையா லால் கிட்வானே ஆகியோர் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக