6 செப்., 2009

மும்பையில் மழை: சுவர் இடிந்து ஒருவர் பலி


மும்பை,செப்.06
 மும்பையில் கடந்த சில நாட்களாக மழையின் தாக்கம் கடுமையாக இருக்கிறது.
நெற்று பெய்த மழையில் மும்பை புறநகர் முலுண்டில் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் யோகேந்திர பிரசாத் பிரஜாபதி, மற்றும் ராஜெந்திர யாதாவ் என்ற இரண்டு பேர் படுகாயமடைந்தன. இதில் ராஜேந்திர யாதவ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.
நகரபகுதியில், 12.4 சதவீத மழை விகிதமும், கிழக்கு புறநகர் பகுதியில் 17.5 சதவித மழையும், மேற்கு புறநகர் பகுதிகளில் 12.3 சதவீத மழை விகிதமும் பதிவாகி உள்ளது.

நகரின் மழையின் காரணமாக ஏரிகளில் நீர்மட்டம் மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. இருப்பினும் இன்னும் சில ஏரிகள் நிறையே வேண்டி இருக்கிறது. இன்னும் மழை முடிய சில வாரங்களே உள்ள நிலையில் இந்த மழை நீடிக்கும் என்றால், மும்பை நகருக்கு வரும் வருடங்களில் தண்ணீருக்கு பஞ்சமிருக்காது.

  இது குறித்து மாநகராட்சி இணை ஆணையர் அனில் டிங்கிகர் கூறும் போது
செயற்கை முறை மழை தீட்டம் மும்பை மாநகராட்சியின் பரிசீலனையில் உள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் தந்த திட்டத்தை ஆராய்ந்து வருகிறோம். வரும் வருடங்களில் மழை போய்க்கும் போது செயற்கை திட்டங்களை கொண்டுவர யோசனை செய்துள்ளோம் என்றார். நகரத்திற்கு வழங்கபடும் குடிநீரில் தற்போதைய உள்ள நிலையே நீடிக்கும் இன்னும் சில வாரங்கள் சென்ற பிறகுதான் நகர குடிநீர் வழங்கும் சதவீதத்தை அதிகரிப்பது பற்றி யோசனை செய்வோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக