மும்பை அருகில் உள்ள தானே ரெயில் நிலையத்திற்கு அருகில் கல்யானில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டு இருந்த ரெயிலின் மீது பாலம் இடிந்து விழுந்த து. இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்து தானே சிவாஜி மருத்துவமனையில் அனுமதிக பட்டு இருக்கின்றனர்.
கல்யானில் இருந்து காலை அலுவலகம் செல்லும் நேரத்தில் மக்கள் கூட்டதினால் நிறம்பி இருந்த மின்சார ரெயில் தானே ரெயில் நிலையத்தை விட்டு முல்லுண்ட் நோக்கி கிளம்பியது, தானே முல்லுண்டு ரெயில் நிலையங்களுக்கு இடையில் வரும் கோபரி என்ற இட தில் இருந்த ரெயில் பாலம் ஒன்று சென்று கொண்டு இருந்த ரெயில் மீது விழுந்து உடைந்து விழுந்த்து. ரெயிலின் முன் பகுதியில் விழுந்த்தால் உயிரிழப்பு அதிகம் இல்லை, முன்னால் இருந்த பொருட்கள் கொண்டு செல்லும் பெட்டியில் இருந்த 7 பேர் காயமடைந்தனர். மின்சார ரெயிலின் மோட்டர் மேன் இன்னும் வெளியே எடுக்கபடவில்லை, அவருக்கு ஆக்ஜிசன் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் தந்து கொண்டு இருக்கின்றனர். தானேவில் இருந்து குர்லா செல்லும் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யபட்டு இருக்கிறது. குர்லாவில் இருந்து ரெயில்கள் சி எஸ் டி நோக்கி சென்று கொண்டு இருக்கிறது, ஹார்பர் ரெயில் வழித்தடமும் இயங்குகிறது
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக