மராட்டியம்
சுமார் 37 லட்சம் தமிழர்களை கொண்ட மூன்றாவது பெரிய இந்திய மாநிலங்களில் ஒன்று. இந்த மாநிலத்தின் தலைநகம் மும்பையின் உருவாக்கத்தில் தமிழர்கள் இரண்டு தலைமுறையை அற்பணித்து இருக்கிறார்கள். இன்றும் அற்பணித்துவருகிறார்கள். சுமார் 40% தமிழர்கள் மராட்டியத்தையே தாயகமாக ஏற்று கொண்டனர்.
இவர்களுக்கு தனது சொந்த ஊர் மறந்து இரண்டு தலைமுறைகள் கடந்து விட்டது. 10 %தமிழர்கள் தனது தாய்மொழியை மறந்து மராட்டியும் தெரியாமல் ஹிந்தியிலும் அரை குறையாகில் இன அடையாளம் மறந்து போய் நிற்கின்றனர். ஆனால் ஒரு அடையாளத்தை மட்டும் விடவில்லை அது தனக்கு பின்னால் இருக்கும் சாதீய அடையாளம்.
மராட்டிய மாநிலத்தில் வாழும் தமிழர்களுக்கு என்று ஒரு ஊடகம் இருந்தது இந்த நிலையில் ஒரு கண்ணடர் ஒருவரால் 1997ம் ஆண்டு மும்பை தமிழ் டைம்ஸ் என்று தினசரி ஒன்று ஆரம்பிக்க பட்டது. முடிந்தவரை எப்படியோ 10 ஆண்டுகளை வெற்றிகரமாக ஓட்டியது ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை திடிரென மிகபெரிய தினசரி இரண்டும் ஒரே நாளில் மும்பையில் தனது பதிப்பை துவங்க ஒரே வாரத்தில் மும்பை தமிழ் டைம்ஸ் இழுத்து மூடபட்டது இதற்கு முக்கிய காரணம் மும்பை தமிழ் டைம்ஸில் பணிபுரிந்த பத்திரிக்கை தோழர்களின் நற்குணங்கள், ஆசிரியர் முதல் பிழை திருத்துவோர் வரை அப்படியே பிரபல பத்திரிக்கைக்கு தாவினார்கள்.
அதன் விளைவுதான் மும்பை தமிழ்டைம்ஸ் இழுத்து மூடல். சரி புதிதாக வந்த ஜம்பவான்கள் என்ன செய்தார்கள் என்றால் அவருக்கு போட்டியாக இவரும் இவருக்கு போட்டியாக அவரும் ஆரம்ப காலத்தில் போட்டிபோட்டார்கள், இருவரின் கணக்குமே மும்பை தமிழன் லார்ட் லபக் தாஸ் என்ற நினைப்பில் இருந்தது, ஆனால் தமிழ் படிக்கும் தமிழன் ஓசியில் பேப்பர் பார்ப்பான், பணக்கார தமிழன் தமிழ் படிப்பதே தீண்டாமை என்று நினைத்து ஆரம்ப காலத்தில் இருந்தே ஆங்கிலம் படிக்கும் ஜாம்பவான்கள்
இறுதியில் இரண்டு பத்திரிக்கைகளுமே தமிழக செய்திகளை முழுவதும் போட்டு மும்பை செய்திகளை நேற்று வந்த ஆங்கில செய்தியை இன்று தமிழில். இந்த பத்திரிக்கைகள் எல்லாம் மும்பை தமிழர்களின் அடையாளங்களை கொண்டு வர முயன்றது ஆனால் என்ன செய்ய மும்பை தமிழர்களுக்கு அவ்வளவு அக்கரை இல்லை, அதனால் பத்திரிக்கைகளும் தங்களின் போக்கை மிதமாக்க வேண்டிய கட்டாயம் அப்படி இருந்தும் இந்த பதிரிக்கைகளில் அதிகம் லாபம் பெறுபவர்கள் சுய விளம்பரமும் தேடும் கணவான்களே தவிர மும்பைதமிழர்களுஇக்காக உண்மையிலேயே பாடுபடும் சிலர் மறைக்கபட்டும் தானே மறைத்துகொண்டும் வாழ்கின்றனர்.
இன்னும் மும்பை தமிழர்களின் உணர்வுகளை எடுத்து சொல்ல அவனை புரிந்து கொள்ள யாரும் வரவில்லை என்பதே இங்கு குறிப்பிடபடவேண்டியது.
மும்பை தமிழ் டைம்ஸின் வெற்றி மும்பை தமிழர்களின் உணர்வுகளை
அங்கு பணிபுரிந்த மும்பை தமிழர்கள் கொண்டுவந்தார்கள். ஆனால் மும்பை தமிழ் டைம்ஸின் கூடாரம் காலியான பிறகு எதிர் தரப்பில் சென்ற போது அங்கு சென்னையில் இருந்து வந்த மூத்த பத்திரிக்கையாளர்களின் ஆலோசனை மிகுந்தது,ஆரம்ப காலங்களில் இரண்டு ஜம்பவான் பத்திரிக்கைகளின் போட்டியே அதிகமானது மும்பை தமிழரின் தேவைகள் மெல்ல மெல்ல மறைந்து இன்று சுத்தமாக கானாமல் போனது இனி மீன்டும் ஒரு தங்களுக்கு என்று ஒரு பத்திரிக்கை காத்திருப்பு மேலும் மும்பை தமிழர்களிடம் அதிகமானதே தவிர தாகம் தீரவில்லை
மும்பைத் தமிழ் டைம்ஸ் நாளிதழை துவக்கியது திரு.வெங்கட் என்ற தமிழர். தமிழகத்தின் கடலூர் பகுதியினைச் சேர்ந்தவர். தற்போது செம்பூரில் வசித்து வருகிறார். வடாலாவில் பெரும் தொழிலதிபராக திகழ்ந்து வருகிறார். மும்பைவாழ் தமிழருக்காக, தமிழுக்காக சேவை செய்திட ஒரு தரமான பத்திரிகையை துவங்கி அவர் இழந்தது ஏராளம். சில ஆண்டுகளுக்கு பிறகே அது மராத்தியர் ஒருவருக்கு கைமாறியது. தமிழகத்தின் இரு பெரிய நாளிதழ்கள் மும்பைக்கு வந்த போதும் 4 மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடித்தது. சூழ்ச்சியும் துரோகமும்தான் அதற்கு மூடுவிழா நடத்தியது என்பதை தங்களுக்கு சொல்லிக் கொள்ள கடமை பட்டுள்ளேன் நண்பரே...
பதிலளிநீக்குமும்பை பித்தன்
biththanukku mumbaiyai bartrri onrum theriyadu. mumbai paamaran.
பதிலளிநீக்குஎன்ன சார் இப்படி சொல்லிவிட்டீர்கள் மும்பையில் தமிழர்களுக்கு பெரிய இழப்பு பித்தன், தன்னுடைய பணியில் இருந்து பின்வாங்கியது
பதிலளிநீக்கு