30 அக்., 2009

மும்பை தாராவியில் ஐந்து வயது தமிழ் சிறுவனிடம் தகாத உறவில் ஈடுபட்ட மராட்டிய வாலிபர் கைது





மும்பை,அக்டொபர்.29
  முபையில் உள்ள தாராவியில் காரைக்குடியை சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்று வசித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அந்த குடும்பத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் வீட்டிற்கு வந்து வாந்தி எடுத்து உள்ளான்.  அவனது தாயார் சிறுவனிடம் விசாரித்த போது அந்த பகுதியை சேர்ந்த 21 வயது பாட்டிலியா என்ற மராட்டிய பையன் அவனை ஓரின சேர்க்கைக்கு உட்படுத்தியதாக குறிப்பிட்டு அழுது இருக்கிறான். சிறுவன் கூறிய தகவலை தனது கனவனுக்கு தாராவியில் வசிக்கும் தனது சகோதரனிடமும் சிறுவனுக்கு நடந்தகொடுமை பற்றி கூறி இருக்கிறார். இதனை அடுத்து தாராவியில் உள்ள சாகு நகர் காவல் நிலையத்தில் மராட்டிய வாலிபன் மீது புகார் கொடுக்க பட்டது.
செவ்வாய் கிழமை காலை 11 மணிஅளவில் கொடுக்கபட்ட புகாரை சரியாக விசாரிக்காமல் அந்த மராட்டிய வாலிபனை பிடித்து வந்து சிறிது நேரம் மிரட்டி விட்டு சிறுவனின் தந்தையிடமும், மாமாவிடமும் போலீசார் சமாதானம் பேச முயன்றனர். சிறுவனுக்கு நடந்த கொடுமைக்கு காரனமானவனை தண்டிக்க வேண்டும் என்று உறுதியாக இருந்ததால் போலீசார் சிறுவனின் வீட்டாரை மிரட்டியும் பார்த்தனர்,


இதனிடையேமீடியாக்கள் சிறுவனுக்கு நடந்த கொடுமை பற்றி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தகவல் அறிய முற்பட்டதும்,செய்தி மீடியாவிற்கு சென்று விட்டது என்ற காரணத்தால் இரவு 11 மணிக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யபட்டது. இரவு முழுவதும் சிறுவனையும் அவனது தந்தையையும் குற்றவாளிகள் போல் காவல் நிலையத்திலேயே அடைத்து வைத்து விட்டு நேற்று மதியம் சிறுவனை போலீஸ் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.
இரவு முழுவதும் புகார் கொடுத்த சிறுவனையும் அவனது தந்தையையும் ஏன் காவல் நிலையத்தில் வைத்திருந்தீர்கள் என்று கேட்டதற்கு தாராவி சாகு நகர் போலீசாரிடம் இருந்து மழுப்பலான பதிலே கிடைத்தது. இதனிடையே சிறுவனை ஓரினசேர்க்கைக்கு உட்படுத்திய மராட்டிய வாலிபன் அந்த பகுதியில் பெண்கள் குளிக்கும் போது மறைந்திருந்து பார்ப்பாதாக பல முறை இது குறித்து அவனை கண்டித்தாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
குற்றவாளியின் தந்தையும் அந்த பகுதியில் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு பல முறை சிறை சென்றவர் என்பதும் குறிப்பிடதக்கது.  இதே போன்று மும்பை கப்பரேடில் உள்ள கடற்கரை பகுதியில் விளையாடி கொண்டு இருந்த 6 வயது சிறுவன் அந்த பகுதியில் வசிக்கும் இரண்டு பேர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாக வந்த புகாரை அடுத்து மரைன் டிரைவ் போலீசார் அந்த இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர். சிறுவனை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு மும்பை டோங்கிரியில் உள்ள சிறுவர்கள் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக