24 அக்., 2009

மும்பை ரெயில் விபத்தால் குடும்பங்கள் ரெயில் நிலையத்தில்



மும்பையில் வெள்ளிக்கிழமை நடந்த புறநகர் ரெயில் விபத்தில் அனைத்து தொடர் வண்டி சேவைகளும் ரத்தானது. காலை 10.45 மணிக்கு இந்த விபத்து நடந்தது. இதற்கு முன்பே கல்யான், டோம்பிவிலி, டிட்வால, அசன்காவ், அமர்நாத், போன்ற பெரிய புறநகர் பகுதிகளில் இருந்தும் அதனை சுற்றிய பகுதிகளில் இருந்தும் சுமார் 13 லட்சம் மக்கள் அங்கிருந்து மற்றும் பல பகுதிகளில் இருந்தும் மும்பை, தாதர் போன்ற அலுவலகங்கள் நிறைந்த பகுதிகளுக்கு சென்றுவிட்டனர், இந்த நேரத்தில் விபத்து நடந்து விட்டது. விபத்து நடந்த பகுதி மும்பையை தென்மாநிலங்களுடன் இனைக்கும் முக்கியமான பகுதி விபத்து நடந்த இடம் 6 வழித்தடங்கள் அமைந்த பகுதி இரண்டு வேக வழித்தடங்கள் , இரண்டு மித வழித்தடங்கள் மற்றும் இரண்டு துணைவழித்தடங்கள் இருந்த பகுதி இதனால் மும்பை தானே முழுவதுமே ரெயில் வழித்டத்தில் தொடர்பு அறுந்து போய் விட்டது.
நெற்று மாலை பல அலுவலகங்கள் மதிய உணவு இடைவேளைக்கு பிறகே விடுமுறை விட்டுவிட்டனர். சில  அலுவலகங்கள் மட்டும் தானே வரை வேன் மற்றும் பஸ்கள் விட்டு இருந்தனர். ஆனால் பல அலுவலக பணியாளர்கள் ரெயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்து இருந்தனர்.
இதில் பெண்களும் அதிகம் சி எஸ் டி ரெயில் நிலையத்தில் பல அலுவல பணியாளர்கள் நேற்று இரவு முழுவதும் காத்து இருந்தனர். மும்பை புறநகர் கல்யாணில் இருக்கும் அக்‌ஷதா காந்தி தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் தினமும் காலை 8 .45 மணி கல்யாண் சி.எஸ் டி வேக ரெயிலில் பணிக்கு சென்று விட்டு மாலை 5 .40 சி.எஸ்.டி யில் இருந்து புறப்படும் பெண்களுக்கான சிறப்பு ரெயிலில் கல்யாண் வருவார் இவரது கணவர் தாதரில் உள்ள துணிக்கடை ஒன்றில் கணக்களராக பணியாற்றி வருகிறார். இருவருமே காலையில் வேலைக்கு புறப்பட்டு மாலையில் வீடு திரும்புவார்கள். இவர்களுக்கு 8 வயதில் ஆண்குழந்தை ஒன்றும் 12 வயதில் பெண்குழந்தையும் இருக்கிறது. காலையில் பள்ளிக்கு சென்றவுடன் இவர்கள் பணிக்கு புறப்பட்டு விடுவார்கள். மாலை வரை குழந்தைகள் தனியாக வீட்டில் இருக்கும் , நேற்று நடந்த சம்பவத்தினால் இருவருவே சரியான நேரத்தில் வீடு திரும்ப முடியவில்லை, தன் வீட்டில் அருகில் உள்ள வர்களிடம் போனில் பேசி தங்களுடைய குழந்தைகளை அவர்கள் வீட்டில் இரவு தங்கவைக்க சொல்லி விட்டனர். இரவு முழுவதும் இருவரும் தாதர் ரெயில் நிலையத்தில் தங்கி விட்டு இன்று காலை (சனி) 7:40 மணிக்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் கல்யான் வந்து சேர்ந்தனர். இது அக்‌ஷதா மற்றும் அவரது கணவருக்கு மட்டுமே நடந்த நிகழ்ச்சி அல்ல இவர்களை போல் பலர் இதே போன்ற நேற்று குழந்தைகள் தனியாக வீட்டில் இரவு முழுவதும் தூங்காமல் ரெயில் நிலையங்களில் கழித்தனர். தாங்களுக்கு பிஸ்கட்டுகள் தண்ணீர் போத்தல்கள் பகிர்ந்து கொண்டும் சிலர் குழுக்களாக அமர்ந்து அரட்டை அடித்து கொண்டும் இரவை கழித்தனர்.
இன்று வார விடுமுறை மற்றும் புறநகர் ரெயில் ஓட்டம் இப்பொழுதுவரை ஒரு மணிநேர தாமதமாகத்தான் சென்று கொண்டு இருக்கிறது இதனால் இன்று ரெயில்களில் கூட்டம் மிகவும் குறைவாக காணப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக