பன்வேல் மற்றும், பூனே நகரங்களில் ராகுலின் பிரச்சார கூட்டம், (எடுபடுமா ஸ்டார் கம்பைன்)
பீதியை கிளப்பும் கருத்துகணிப்புகள்,
மும்பை,அக்.9மராட்டிய மாநில தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே மீதம் இருக்கின்றன. இந்த நிலையில் மராட்டியத்தின் முக்கிய நகரங்களான ,மும்பை, தானே, புனே, நாசிக் போன்றவற்றில் மக்களிடம் எடுத்த கருத்து கணிப்பில் குழப்பமான முடிவையே தந்து இருக்கின்றன.
மூன்றாவது கூட்டனி:-தேர்தல் அறிவித்த பொழுது பெரும் சக்தியாக உருவெடுக்கும் என்று எதிர்பார்த்த ஆர்,பி.ஐ(ரிபப்ளிக்கன் பார்டி ஆப் இந்தியா) இடையில் கவாய் பிரிவு காங்கிரஸ¤டனும், பிரகாஷ் அம்பேதகார் காவி கூட்டனியுடன் இனக்கமான பிறகு ஆ.பி.ஐ கூட்டனி செல்லாத காசாகிவிடும் என்ற நினைப்பில் இருந்த இரண்டு பெரும் கூட்டனியுமே இருந்தது. ஆனால் பெருநகரங்களில் பெரும்பாலான இஸ்லாமியர்களின் நம்பிக்கை கட்சியான சமாஜ்வாடி, கம்யூனிஸ்ட், மற்றும் இதர விவசாய கட்சிகளுடன் கூட்டனியை தொடர்ந்து ஆர்.பி.ஐ கொண்டு சென்றதால், இஸ்லாமிய ஓட்டுக்கள், மற்றும் கிராம புரங்களில் சிறுநகரங்களில் பெரும்பாலான தலித் ஓட்டுக்கள் அனைத்தும் மூன்றாவது கூட்டனிக்கு கிடைக்கும் என்று முடிவுகள் வந்து இருக்கின்றது.
காங்கிரஸ் தேசியவாத மற்றும் ஆர்.பி.ஐ கவாய் கூட்டனி:- மும்பை , தானே, நாசிக், மற்றும் பூனே நகரங்களை பொருத்த வரையில் பெரும் பாலும் தொழிற்சாலைகளை நம்பி வாழ்க்கை இருப்பதால் அவ்வப்போது ஏறி இறங்கு விலைவாசி இவர்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கிறது. அதனால் ஆளும் கட்சியின் மீது தற்போது ஏறிவரும் விலைவாசி பிரச்சனையில் கோபம் திரும்பலாம் என்ற நிலையில் ஆளும் கட்சிக்கும் 30 % மேற்பட்ட வாக்குகள் குறைய வாய்ப்பு இருக்கிறது. சேனியா ராகுல் என பலர் பிரச்சாரத்திற்கு வந்தும் நிலமை முன்னேற்றம் அடையவில்லை என்பதுதான் ஆளும் கட்சி கூட்டனியின் கலக்கத்திற்கு முக்கிய காரணம்.
சிவ சேனா பா.ஜா.க கூட்டனி:-
காவி கூட்டனியின் கூடாரமும் கலக்கத்தில் தான் உள்ளது மண்ணின் மைந்தர் பிரச்சனை என்ற படகில் சவாரி, இந்துத்துவா என்ற பழைய பல்லவி மக்களிடம் எடுபடவில்லை, புதிதாக தேர்தல் பிரச்சாரத்தில் காவி கூட்டனியால் மக்களிடம் ஒன்றும் சொல்ல முடியவில்லை, விலைவாசியை கட்டுபடுத்த உறுதியான கோரிக்கை அல்லது திட்டங்கள் எதுவும் கொடுக்க முடியவில்லை. இதனால் நடுத்தர வர்க்கம்(தேர்தலின் வெற்றி தோல்விகளுக்கு முக்கிய காரணி) காவி கட்சியின் மீது அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. தீவிரவாத பிரச்சனை நாடாளுமன்ற தேர்தலிலேயே பிசுபிசுத்து போனது. அதாவது மும்பையில் ஒரு தொகுதியில் கூட காவி கூட்டணி வெற்றி பெறமுடியவில்லை.
நவநிர்மான் கட்சிக்கு ஏதாவது கிடைக்குமா என்று பார்த்தால் அவர்களே எதிர்பார்த்த 10 சீட்டில் இரண்டு கூட கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இளைஞர்கள் ஆரம்ப கட்டத்தில் அதிக அளவில் ஆர்வம் காட்டினாலும் இந்த கட்சியை தேர்ந்து எடுக்கும் அளவிற்கு ஆதரவு குறைவாகவே காணப்படுகிறது.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவும் நகரங்களில் உள்ள சேரி பகுதியில் (அதிக வோட்டு பதிவு விழும் இடங்கள்) அதிகமாக இருப்பது போல் தெரிகிறது.
எப்போழுதும் போல் மராட்டியத்தின் உள் பகுதிகளில் சுயேட்சைகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. முக்கியமாக விதர்பா, பகுதியில் விவசாயிகளின் தற்கொலை பிரச்சனைகளால் அரசியல் கட்சிகள் பல சிறு நகரங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல தயக்கம் காட்ட இந்த தயக்கம் சுயட்சை வேட்பாளர்களுக்கு புதிய உற்ச்சாகத்தை தந்து இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக