MUMBRA DEVI TEMBLE
கல்வா மும்பரா கவுசா தானே வை தாண்டியதும் வரும் சிறு ரெயில் நிலையங்கள் இந்த இன்று இந்த இரண்டு மூன்று பெரிய பகுதிகளுமே மராட்டிய மாநில தேர்தலில் முக்கிய பார்வையாக தெரிகிறது.
ஆம் ஒரு நாளில் 3 அல்லது நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம் இங்கு இருக்கிறது. (டி.பி.ஐ மும்பை அலுவலகமும்) இந்த நேரங்களில் மட்டுமே இயங்குகிறது.
இந்த மூன்று சிறு நகரங்களிலும் சுமார் 1 கோடி மக்களுக்கு மேல் குடியிருக்கின்றனர். தானே மாநகராட்சியின் கீழ் வரும் இந்த சிறுநகரங்களுக்கு தானே மாநகராட்சி நிர்வாகம் தான் மின்சாரம் விநியோகம் செய்கிறது. நவிமும்பை ஐரோலியில் இருந்து இந்த நகரங்களுக்கு மின்சாரம் வருகிறது.
பொதுவாக மின்சாரம் செல்வதென்றால் ஒரு வரை முறை இருக்கும் அதாவது காலை 10 மணிக்கு மின்சாரம் செல்லும் பிறகு 1 மணிக்கு வரும் என்று ஏதாவது வரைமுறை இருந்தால் சரி ஆனால் இந்த சிறு நகரங்களுக்கு என்று ஒரு வரமுறையும் இல்லை, எப்போது வரும் மின்சாரம் என்று தெரியாது அதே நேரத்தில் வந்த மின்சாரம் அடுத்த நிமிடத்தில் சென்று விடும், இரவு பகல் என்று எந்த நேரமும் கிடையாது.
விசேட நாட்களில் கூட தயவு தாட்சனம் கிடையாது. ரம்ஜான் விழாவின் போது காலையில் 10 மணிக்கு சென்ற மின்சாரம் மாலை 7 மணிக்கு வந்தது. வந்த மின்சாரம் 10 நிமிடம் கழித்து சுமார் 10 முறை வர போக என பலரது கம்யூட்டர், டிவி, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை பதம் பார்த்து விட்டு 8 மணி போல் சென்ற மின்சார நள்ளிரவு 11 மணிக்கு வந்தது.
கடந்த 7 வருடங்களாக இங்கு ஒரு தொழிற்சாலை இயங்க முடிவதில்லை பள்ளிகளில் வெளிச்சம் இல்லாமல் மங்கிய விளக்கு ஒளியில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள். இதற்கு நிர்வாகத்தின் பதிலோ யாரும் சரியாக மின்சார கட்டணம் கட்டுவதில்லை சட்ட விரோத கட்டிடங்கள் திருட்டு மின்சாரம் என்கிறது. நிர்வாகத்தின் கடமை யார் கட்டணம் கட்டவில்லை அவர்களது மின்சாரத்தை வெட்டி விடுங்கள், திருட்டு மின்சாரம் சட்டவிரோத கட்டிடம் என்றால் அவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுங்கள் ஒட்டு மொத்த மக்களும் என்ன பாவம் செய்தார்கள்.
சிலர் கூறும் காரணங்கள் மும்பரா கவுசா பகுதியில் சுமார் 90% இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர். இஸ்லாமியர்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இப்படி செய்கின்றனர் என்றும் கூறுகின்றனர். (இந்து விழாக்களில் மின்சாரம் போவது குறைவாக இருக்கும் காரணத்தால்) இது ஏற்புடையதாக இல்லை. முக்கியமாக மும்பரா கவுசா பகுதியில் மின்சாரம் கொண்டு வரும் உயர் அழுத்த கம்பிகள் அடிக்கடி பழுது பட்டு விடுவதாக ஒரு சால்சாப்பு, சுமார் 7 வருடமாக இதற்கு தீர்வு காணவில்லையா?
இந்த முறை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஜித்தேந்திர ஆவ்டே நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார்.

நேற்று மும்பராவில் பிரச்சாரத்திற்கு வந்திருந்த போது அவர் வரும் நேரம் மட்டும் மின்சாரம் இருந்தது. பொதுவாக 3 மணிக்கு செல்லும் மின்சாரம் 7 அல்லது 8 மணிக்கு வரும் ஆனால் நேற்று மின்சாரம் போகவே இல்லை, அதே நேரத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்து சென்ற பிறகு இரவு 8 மணிக்கு சென்ற மின்சாரம் 10 மணீக்கு வந்தது. அதுவும் நிமிடத்திற்கு ஒருமுறை கண் சிமிட்டி விட்டு 11 மணிக்கு வந்த மின்சாரம் உடனே சென்று விட்டது. அதன் பிறகு இரவு 2 மணிக்கு வந்து இன்று காலை 4 மணிக்கு சென்று விட்டது. அதன் பிறகு சரியாக 6 மணிக்கு வந்த மின்சாரம் எப்போது போவேன் என்று சொல்லாமல் மிரட்டுக்கிறது.
இது குறித்து தே வா கட்சி /காங்கிரஸ் சார்பில் போட்டி யிடும் ஷித்தேந்திர ஆவடே விடம் கேட்ட போது அவர் கூறியது எனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க விடுங்கள் நான் மந்திராலயாவில் இந்த பிரச்சனையை எடுத்து செல்கிறேன் என்றார்.
பத்திரிக்கைக்கு பேட்டி அளிக்கிறோம் என்ற பொறுப்பு கூட இல்லாமல்அசால்ட்டாக பதில் அளிக்கும் இவர் மந்திராலயா சென்று உண்மையிலேயே மின்சாரம் குறித்து பேசுவாரா அல்லது மிண்டும் ஒரு ஐந்து வருடம் இருளில் ஆதிவாசி நகரமாக மாறுமா என்று தெரியவில்லை.
ஜித்தேதிரா அவாட் சில வருடங்களுக்கு முன்பு அகமதாபாத்தில் போலி என்கவுண்டரில் சுட்டு கொல்லபட்ட இர்ஷாத்தின் குடும்பத்தாருக்கு லட்சங்களை கொடுத்து மும்பரா வாசிகளின் இதயத்தில் இடம் பிடித்தார் இது மட்டும் போதுமா கரண்ட் வேனுங்க ஜித்தேந்திர் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக