14 அக்., 2009

மீண்டும் ஒரு சனநாயகதவறு






மும்பை,அக்.14

மராட்டிய மாநிலத்தில் தேர்தல் அறிவித்த நாள் முதல் எங்கு ஒரே திருவிழா மயம் கட்சிகள் சலுகை அறிவித்தன. செய்தவற்றை மீண்டும் மீண்டும்  மேடை போட்டு பறையெழுப்பின. எதிரணியினர் இவர்கள் செய்யாதவற்றை தேடிகண்டு பிடித்து தாங்கள் செய்து தருவதாக உறுதியெழுப்பினர். எப்படி பார்த்தாலும் கட்சிகளுக்கு  தேவை பொது சனத்தின் ஒட்டுக்கள் பொது சனம் அழுத்தும் பட்டனின் வலிமையில் தான் புதிய அரசு பொறுப்பேற்க முடியும், நல்ல வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்க முடியும் நல்லாட்சி அமைய வாய்ப்புகள் அமையும். நல்லாட்சி அமைய நல்ல வேட்பாளர் களை தேர்தெடுப்பது யார் கடமை நமது கடமை, பாமரர்களை விட படித்தவர்களுக்கு இந்த பொறுப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் தெரிந்து இருந்தே மீண்டும் ஒரு முறை சனநாயக தவறு இழைத்து இருக்கிறார்கள். பணக்கார வர்க்கத்தினர். இன்று நாடு சந்திக்கும் பிரச்சனைகள், 47% இளைஞர்கள் வேலையின்மை(இந்தியா முழுவதும் அரசு, பொது வாரியங்களில் 33 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது) FFRC Survey 2007 சமீபத்தில் விளையாட்டு துறையில் மட்டும் 60000 இடங்கள் இருப்பதை விளையாட்டு வாரியமே தன்னுடைய அறிக்கையில் கூறியது நினைவிருக்கலாம்.

விலைவாசி உயர்வு:- நிர்வாக சிக்கல் மற்றும் தாமதமான நடவடிக்கை மற்றும் மொத்த வியாபாரிகளின் சிறப்பு கவணிப்பு? காரணமாக பதுக்கல், வரி ஏய்ப்பு, சரக்குகள் பரிமாற்றத்தின் போது கையூட்டு , எடுத்துகாட்டு:- குசராத்தில் இருந்து ரூ4 கோடி மதிப்பில் உணவு தானியங்கள் நாட்டின் பிறபகுதிகளுக்கு செல்கிறது என்றால் முதலில் அதன் எடை குறைத்து மதிப்பிடப்படுகிறது, 5 டன் என்றால் வெறும் 3 டன் என்று இன்வாய்ஸ் செய்யபடும். இது எப்படி நடைபெறுகிறது.
முதலில் நிறுவனத்தில் இருந்து சரக்கு வாகனம் வெளியேறும் போது முதலாளிகள் எடையில் செய்யும் தில்லுமுல்லு, நகர எல்லையில் சிறப்பு கவனிப்பு, மாநிலங்களுக்கு இடையில் சிறப்புகவனிப்பு இறுதியில் வந்து இறங்கும் போது கூட சிறப்பு கவனிப்பு இதனால் 4 கோடி மதிப்பு கொண்ட உணவு தானியங்கள் வெறும் 2 அரை கோடி கணக்கு காட்ட பட்டு மொத்த வணிகஸ்தலங்களை வந்து அடைகிறது. இங்கே இருக்கும் அந்த நிறுவனத்தில் பினாமிகள் கணக்கில் காட்டபட்ட வற்றை பெயருக்காக தந்துவிட்டு மற்றதை பதுக்கிவிடுவார்கள். அந்த பதுக்கல்கள்  முழுவதும் விலைவாசி உயர்விற்கு காரணகர்த்தாவாக இருக்கிறது. இது நாடுமுழுவதும் நடந்துவருகிறது.

விவசாயிகள் பிரச்சனை:- மேலைநாட்டு ரசாயண உரங்கள் மற்றும் காலத்திற்கு ஒத்துவராத விதைகளின் மூலம் மராட்டியம், ஆந்திரம் மற்றும் கர்நாடகா மாநில விவசாயிகளை வாழ்வை அடியோடு புரட்டி போட்டுவிட்டது. 2000- நன்றாக விளைச்சல் தந்த மண் இன்று ரசாயண உரம் இல்லாமல் தரை மலர மறுக்கிறது. காரணம் ரசாயன உரம் தந்த விஷத்தன்மை ரசாயண உரம் எப்படி இங்கு வந்தது என்றால் அரசியல் வாதிகளின் சுயநலம் வாங்குவதை வாங்கிவிட்டு சந்தையை திறந்தார்கள். அதைத்தான் வாங்கவேண்டும் என்ற ஒரு கட்டாயத்தில் விவசாயிகள் திணிக்கபட்டார்கள் விளைவு இன்றுவரை நாடுமுழுவதும் சுமார் 60000 கோடி விவசாய பொருட்களில் நட்டம், 13 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இனி புல் பூண்டு கூட வளரமுடியாமல் பாலையாகிபோனது, நிலத்தடி நீர் விஷமானது , வற்றி போனது,
இதன் காரணமாக இன்றுவரை மராட்டியத்தில் மட்டும் 13 407 விவசாயிகள் தற்கொலை, சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் நேரடியாக பாதிக்கபட்டது,

மேலே சொன்னவை சில உதாரணங்கள் மட்டுமே இன்றும் பல உதாரணங்களை நாம் கண்டு கொண்டு வருகிறோம். உதாரணங்களை கணக்கிட்டுகொண்டே இருப்பது தான் நமது பணியா இவற்றை களைவதும் நமது பணிதானே ஆனால் அதை நாம் முன்னெடுக்கிறோமா. மேலே சொன்ன அனைத்திற்கும் காரணம் அரசியல் வாதிகள் செய்யும் தில்லுமுல்லுதனம் என்று தெளிவாக தெரிகின்றது. அரசியல் வாதிகளை பதவி என்னும் அலங்காரம் செய்து அரசு மனமேடைக்கு அனுப்புவதும் நாம் தான் என்பதும் தெரிகிறது. இப்படி தெரிந்தும் நாம் ஏன் நல்லவர்களை தேர்தெடுக்க மறுத்துவிடுகிறோம். சோம்பேரித்தனம் நமது ஒரு நாளைய சோம்பேரித்தனம் நாட்டின் எதிர்காலத்தையே பாதிக்கிறது என்பது தெரிந்தும் மீண்டும் நாம் செய்யும் இமாலய தவறு.

நேற்றும் இந்த தவறு மீண்டும் பிரதிபலித்தது. மராட்டியத்தில் 60 % வாக்கு பதிவு, முக்கியமாக படித்தவர்கள் அதிகம் வசிக்கும் மும்பையில் வெறும் 50 % வாக்குபதிவு, அதாவது பணக்காரவர்க்கங்கள் 30 % வீடுகளை விட்டு வெளியே வரவில்லை, அதே நேரத்தில் மாலை 3 மணிக்கு பிறகு வோட்டு போட வெளிவரதயங்கிய சனங்கள் தீபாவளி சாப்பிங்கிற்கு குடும்பத்துடன் கிளம்பியது இவர்களின் சுயநலத்தை அப்பட்டமாக காட்டியது.எலும்பு துண்டுகளை காட்டி ஏமாற்றி  தனக்கு சிறப்பு கவனிப்பு கவனித்த வேட்பாளருக்கு தனது நன்றிகடனை பாமரன் செலுத்திவிடுகிறான். ஆம் மும்பையில் படித்தவர்கள் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நாள் முழுவதும் காற்றாடிக்கிடங்ந்தது. இம்முறை பல தொண்டு நிறுவனங்கள் இளைஞர் இளைஞிகளை வீடு வீடுகளுக்கு சென்று ஓட்டளிக்க வரும்படி வேண்டுக்கொள் விடுக்க நியமித்து இருந்தது. ஆனால் இவர்களுக்கு பணக்கார காலணியில் நுழைய கூட சொசைட்டியிடம் அணுமதி இல்லை என்பதும் இவர்கள் சென்ற சில வீடுகளின் திட்டுக்களுடன் விரட்டிய அணுபவமும் பல இளைஞர் இளைஞிகளுக்கு உண்டு. தெரிந்தே மீண்டும் செய்த  சனநாயக தவற்றினால் மீண்டும் ஐந்துவருடம் வேதனையில்   விழப்போகும் இந்தியா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக