பட்டத்து மகாரானியுடன்
மும்பை பிரதேசகாங்கிரஸ் தலைவர் கிருபா சங்கர் சிங் பிறந்தநாள் பரிசாக அசோக்சவானுக்கு ரூ ஒரு லட்சத்து பதினோராயிரத்து நூற்று பதினின்று வழங்குகிறார்.
மராட்டிய மாநில அரசின் முதல் மந்திரியாக இரண்டு முறை இருந்தவரும், நிதி அமைச்சராக, உள்த்துறை அமைச்சராக பதவி வகித்தவருமான திரு சங்கர் ராவ் சவானின் இரண்டாவது புதல்வர் அசோக் சவான். 1958-ம் ஆண்டு அக்டொபர் 28 ல் மத்திய மராட்டியத்தில் உள்ள நன்னேட்டில் பிறந்தார்.
காங்கிரசின் பரம்பரை குடும்ப அரசியலில் சங்கர் ராவ் சவானும் விதிவிலகல்ல தனது இரண்டு புதல்வர்களையுமே அரசியலில் நுழைய செய்தவர் மூத்த புதல்வர் அரசியில் பாடம் சரிவரவில்லை என்று அயல் நாடு சென்று விட அசோக் சவான் உறுதியாக அரசியலில் ஆர்வம் காட்டினார். ஆரம்ப காலங்களில் அசோக்சவானுக்கு படித்து விட்டு உத்தியோகம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் . இதன் காரணமாக பூனா பல்கலை கழகத்தில் Msc முடித்து விட்டு லண்டனில் MBA பட்டம் பெற்றார். தனது குடும்பத்தில் யாராவது அரசியலில் வரவேண்டும் என்ற தந்தையின் ஆசையை நிறைவேற்ற அரசியலில் இறங்கினார். தனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப கட்டமே டில்லியில் இருந்து துவங்கியது. இந்திய அரசியலில் வெகுசிலர்தான் தமிழகத்தை தவிர ஆரம்பத்திலேயே டில்லி செல்லும் பாக்கியம் பெற்றவர்கள் அதில் அசோக் சவானும் ஒருவர் 88/89 தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக நன்னேட் தொகுதியில் இருந்து தேந்தெடுக்கபட்டார். சவானின் டில்லி அரசியலின் போது இவரது தந்தை மத்திய அரசில் மந்திரியாக இருந்தார். தனது டில்லி வாழ்க்கையை முடித்து கொண்டு மராட்டிய மக்களுக்கு சேவை செய்ய மீண்டும் மராட்டிய எம் எல் சி ஆனார். அதன் பிறகு அசோக்சவானின் அரசியல் வாழ்க்கை ரெயில் நிற்கவே இல்லை, காங்கிரஸின் தீவிர உறுப்பினராக இருந்த அசோக் சவான் சரத்பவார் சோனியா காந்தியின் தலைமைய ஏற்க மறுத்து தனிக்கட்சி ஆரம்பிக்கும் போது அதில் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பல தலைவர்கள் இனைந்தனர். மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ் காணாமல் போகும் நிலை ஏற்பட்டது. சரத்பவார் அசோக்சவானின் அரசியல் குருவாகவும் கருதபட்டவர். இருந்த போதும் பாரம்பரிய காங்கிரஸ் வாதியான அசோக்சவான் காங்கிரஸிலேயே இருந்தார். அசோக்சவான், விலாஸ்ராவ் தேஷ்முக் போன்றோர் காங்கிரஸை விட்டு பிரியாததால் காங்கிரஸ் மராட்டியத்தில் உயிர் பெற்றது. இதற்கு நன்றிகடனாக 1999-ம் மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் வென்ற அசோக்சவானுக்கு மந்திரி பதவி காத்து இருந்தது. நகர்புர வளர்ச்சி துறை, போக்குவரத்து, சக்தி மற்றும் வருவாய்த்துறை போன்ற பல முக்கியதுறைகள் அசோக்சவானுக்கு வழங்க பட்டது. விலாஸ் ராவ் தேஷ்முக் முதல் மந்திரியானார். இடையில் ஏற்பட்ட உட்கட்சி பூசலில் காரணமாக விலாஸ்ராவ் தேஷ்முக் முதல் அமைச்சர் பதவில் இருந்து விலகி சுஷில் குமார் ஷிண்டே அந்த முதல் மந்திரியாக பதவி யேற்றார். 2004-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் காங்கிரஸ் அமோக வெற்றி பெற சுஷ்ல் குமார் ஷிண்டே மத்திய காபினெட் அமைச்சராகி டில்லி செல்ல மீண்டும் விலாஸ்ராவ் தேஷ்முக் முதல் மந்திரியாக பதவியெற்றார்.
மராட்டிய மாநில அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. கோங்கான புலி என வர்ணிக்கபட்ட தீவிர சிவசேனிக்கான நாராயன் ரானே திடிரென சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரஸில் சேர கோங்கான பகுதியில் காங்கிரஸ் வளர வேண்டும் என்றால் இவர் காங்கிரஸுக்கு தேவை என்ற நிலையில் நாராயண் ரானே கட்சியில் முக்கியத்துவம் கிடைத்தது. அசோக் சவான் கவனிக்கபடாத நபராகி போனார். பொருமை காத்து காங்கிரஸின் சாதாரன தொண்டன் போலவே வலம் வந்தார். 2004-ம் ஆண்டு புதிய மந்திரி சபையிலும் மந்திரி பதவி காத்து இருந்தது, தொழில்துறை போக்குவரத்து போன்ற துறையில் திறமை காட்டினார். 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி தீவிரவாத தாக்குதல் அசோக்சவானின் வாழ்க்கையில் முதல் மந்திரி பதவிக்கு வழிவகுத்தது. மந்திரியாக இருந்து தொண்டராக வாழ்க்கையை முடித்துவிடுவார் என்று பலரால் எதிர்பார்க்க பட்ட அசோக் சவான் தீவிரவாத தாக்குதலால் விலாஸ் ராவ் தேஷ் முக் பதவி விலக அந்த இடத்திற்கு வர நாராயண் ரானே போட்டி இட்டார்.
ஆனால் விலாஸ் ராவ் தேஷ்முக் சிவசேனாவில் இருந்து பதவிக்காக வந்த ஒருவருக்கு முதல் மந்திரி பதவியை கொடுப்பதை விட காங்கிரஸுக்காக பாரம்பரியாமாக உழைத்த அசோக் சவானுக்கு கொடுப்பது என முடிவு செய்தார். டில்லியில் தனது தரப்பு வாதத்தை வைத்து அதில் வெற்றியும் கண்டார். இதனால் கோபமுற்ற நாராயன் ரானே காங்கிரஸில் இருந்து விலகி புதிய கட்சி ஆரம்பிப்பதாக மிரட்டி பார்த்தார். ஆனால் சில சிக்கல்களில் காரணமாக அவர் காங்கிரஸிலேயே மீண்டும் வந்து அசோக்சவானின் தலைமையினாலான மந்திரி சபையில் வருவாய்த்துறை மந்திரியாக பொறுப்பேற்றார்.
அசோக் சவானின் பதவிகாலம் வெறும் 6 மாதம் என்பது அனைவருக்கும் தெரியும் அதனால் 6 மாததிற்கு பிறகு நடக்கும் தேர்தலில் கோங்கனின் 22 எம் எல் ஏக்களின் மூலமாக நாம் முதல் மந்திரி பதவிக்கு வரலாம் என கோங்கான புலி(நாராயன் ரானே) தனது பாய்ச்சலுக்காக பதுங்கியது. அமைதியான அதே நேரத்தில் புத்திசாலித்தனமான அசோக்சவான் இந்த குறுகிய காலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவேண்டும், வரும் தேர்தலில் நாராயன் ரானே விடம் முதல் மந்திரி பதவி சென்றுவிடக்கூடாது, மக்களின் ஆதரவை பெறவேண்டும், முக்கியமாக கோங்கான பகுதியில் நாராயன் ரானே வின் வளர்ச்சியை கட்டு படுத்தவேண்டும் என பல சிக்கல்களுக்கு இடையில் தேர்தலை சந்திதார்.
குறுகிய காலத்தில் காங்கிரஸை மாராட்டிய மக்களிடம் கொண்டு சென்றார். விளைவு 47 வருடங்களுக்கு பிறகு காங்கிரஸ் மாநிலத்தின் முதல் கட்சியாக உறுவெடுத்தது. அதே நேரத்தில் நாராயன் ரானே வின் ஆதரவாளர்களில் பாதி பேர் தேர்தலில் தோல்வியுற்றுனர். நாராயன் ரானேவின் பல் பிடுங்கபட்டது. தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தனக்கு முதல் மந்திரி பதவி காத்து இருக்கிறது என்று கனவில் இருந்த நாராயன் ரானே வின் ஆதரவாளர்களில் 22 நபர்களில் வெறும் 7 பேர்தான் வெற்றி பெற்றனர். அசோக் சவானின் அரசியல் ராஜதந்திர திறமை இந்த இடத்தில் வெளிப்பட்டது.
நாராயன் ரானே தனது தோல்வியை ஒத்துகொண்டு முதல் மந்திரி போட்டியில் இருந்து விலகி விட்டார். விலாஸ் ராவ் தேஷ்முக் டில்லியில் காபினெட் பதவி பெற்றுவிட்டதால் அசோக்சவான் எந்த போட்டியும் இன்றி முதல் மந்திரி பதவிக்கு தேர்தெடுக்கபட்டார். மராட்டிய அரசியலில் தானும் ஒரு ராஜ தந்திரி என்று நிருபித்த அசோக் சவான் நெற்று தனது பிறந்த நாளை முதல் மந்திரி இல்லமான வர்ஷாவில் கொண்டாடினார். தனது பிறந்தநாள் அன்று முதல் மந்திரி பதவியேறலாம் என்ற கனவு கூட்டனி கட்சியின் இழுபறி காரணமாக தற்போது நாட்கள் தள்ளிசென்று கொண்டு இருக்கிறது