26 நவ., 2009

மும்பை 26/11 என்ற எனது புத்தகத்தில் இருந்து (1)

  தர்காவிற்கு செல்ல இருந்த குடும்பம் தனது தந்தையை இழந்தது.
மும்பை குர்லாவை சேர்ந்த முகமது ஜேக்காப் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை நகரம். பிழைப்பதற்காக மும்பை வந்த இவர் வருமானவரித்துறை கண்சல்டாக இருந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் இவரது மூத்த சகோதரி, சகோதரியின் மகன் யாக்கோபு, தனது மனைவி ஒரு வயது குழந்தையுடன் சி.எஸ்.டி ரெயில் நிலையம் வந்தார்கள். இவர்கள் அன்று இரவு சென்னை மெயிலில் கர்னாடகா மாநிலத்தில் உள்ள குல்பர்கா தர்காவிற்கு செல்ல இருந்தனர். இவர்களது குழந்தை பிறந்த உடன் தர்காவிற்கு வருவதாக வேண்டிக் கொண்டனர். ரெயில் முன்பதிவு கிடைக்க பல நாட்களுக்கு முன்பே முயற்சி செய்தனர். ஆனால் முன்பதிவு கிடைக்காததால் உடன் டிக்கேட்டிலேயே பயணம் செய்ய முடிவு செய்தனர்.
இதனால் விரைவில் மும்பை சி.எஸ்.டி ரெயில் நிலையம் வந்து பயணிகள் அமரும் இடத்தில் காத்திருந்தனர். தனது தந்தை சகோதரி மற்றும் தனது மனைவி குழந்தைகளை அங்கு அமர வைத்து விட்டு வெளியில் சென்று சாப்பிட
பொருட்கள் வாங்கி வரலாம் என்று நினைத்து தனது மருமகனுடன் வெளியே சென்றார். வெளியில் சென்ற சிறிது நேரத்தில் ரெயில் நிலையத்தில் இருந்து பலர் அலறி அடித்து கொண்டு ஓடிவந்தனர். நாங்களும் ஏதோவிபரீதம் நடந்து விட்டது என்று நினைத்து அங்கு செல்ல முயன்றால் யாரும் எங்களை அங்கு விடவில்லை. எங்கு
பார்த்தலும் மரண ஓலம் எனது மனைவியும் சகோதரியும் நாங்கள் உட்கார வைத்த இடத்தில் இல்லை. அவர்கள் சில வினாடிகளுக்கு முன்பு தான் குழந்தையை எடுத்துக்கொன்டு அருகில் உள்ள பாத்ரூமிற்குள் நுழைந்தார்கள். அந்த நேரம் பார்த்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் எங்களது தந்தையின் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து கீழே விழுந்து கிடந்தார். இதை கண்டதும் எனது சகோதரியின் மகன் எனது தந்தையை காப்பாற்ற ஓடினான். இவனை கண்டதும் அங்கு நின்றுகொண்டிருந்த தீவிரவாதிகள் அவனையும் சுட்டனர். தீவிரவாதிகள் சுட்டதில் எனது சகோதரி மகனின் முதுகு தண்டுவடத்தில் குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் மும்பை ஜே.ஜே மருத்துவமனையில் சேர்க்கபட்டனர். எனது தந்தை மருத்துவமனையில் சேர்க்கபடும்
முன்பே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இவ்வாறு முகம்மது ஜோக்கப் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக