1 நவ., 2009

நவம்பர் மாத தமிழ் பிரஸ் இன்போ பிரபலம்(பிறந்த நாள் வாழ்த்துக்கள் மேடம்)

 ஐஸ்வர்யா ராய்

இன்று பிறந்த நாள் காணும் பிரபலமான பிரபலம்
1 நவம்பர் 1973 என்னை விட மூன்று வயது மூத்தவர்கள்
தென் இந்தியாவில் உள்ள மங்களூரை பூர்வீகமாக கொண் டவர்கள் பலர் சொல்வதை போல் இவர் வங்காளி அல்ல,
உலக அழகு பொருட்கள் போட்டியின் காரணமாக இவரை உலக அழகியாக தேந்தெடுத்து இந்தியாவிலும் லிப்ஸ்டிக் வகையாரா சதானங்களை இறக்கியதற்கு பயன்படுத்தபட்டார்.




உலக அழகியாக 1994-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கபட்டார்.
இவருடைய முதல் படம் தமிழில் வெளிவந்த இருவர் அதேவருடம் வெளியான அவுர் பியார் ஹோகயா இரண்டும் சரியாக ஓடவில்லை, அதன் பிறகு ஜீன்ஸ் தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்தியில் ஹம் தில் தேச்சுக்கே சனம் என்ற படம் இவரை இந்தி திரை உலகிற்கு வெற்றி நடிகையாக அறிமுகபடுத்தியது


இவரது சொந்த வாழ்க்கையை எடுத்து கொண்டால் உலகம் புரியாமல் கண்ணாடியை கூட வைரம் என்று நினைத்து சிலரை நட்பாக்கினார்கள் ஆனால் கண்ணாடி விரைவிலேயே தனது தண்மையை காண்பித்து விட்டது.
 இறுதியில் பாரம்பரிய திரைக்குடும்பமான அமிதாப்பின்  புதல்வன் அபிசேக்கிற்கு மனைவியானார்.
திருமனத்திற்கு முன்பு இருந்த அதே அழகு அதே புகழ் கொஞ்சம் கூட குறையவே இல்லை,


காரணம் எதையுமே கூலாக எடுத்துகொள்ளும் நல்ல பழக்கம், ஒளிவு மறைவு  இல்லாமல் பேசும்  குணம், முக்கியமாக நல்லவற்றை மனதில் கொண்டு தீயவற்றை தூர எரிந்து விடும் குணம், குடும்ப பெண்ணாக மாறிய பிறகும் தன்னுடைய குறும்பு தனத்தில் எந்த கூறையும் இல்லை




1999-ம் ஆண்டு எம் டிவியில் பணிபுரிந்து கொண்டு இருக்கும் ஐஸ்வர்யா அவர்களுடம்  பழக வாய்ப்பு கிடைத்தது. அலுவலகம் வரும் நேரமெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து பேசாவிட்டாலும் ஒரு புன்னகை சிந்திவிட்டு செல்வார்கள் அந்த புன்னகை போதும் நாகரீகம் தெரிந்தவர்கள்.
நட்பானவர்கள்
தற்போது ரஜினியுடன் யந்திரா முடிந்துவிட்டது டப்பிங் பிஸியில் இருக்கிறார்கள். பிறந்த நாளில் மும்பை வந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்
சந்திக்க நேரம் கிடைத்தால் நமது வாழ்த்துக்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
அதுவரை இந்த பாடலை கேளுங்கள் அவருக்கு திருமணம் முடிந்த உடன் பலர் இந்த பாட்டை மீண்டும் மீண்டும் கேட்டார்கள்
  நானும் தான்  ;)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக