7 நவ., 2009

முடிவுக்கு வந்த தெருக்கூத்து



மராட்டிய மாநிலத்தில் கடந்த 15 நாட்களாக நடந்து வந்த உனக்கு எத்தனை எனக்கு இத்தனை என்ற தெருக்கூத்து அரசியல் நாடகம் இன்று கவர்னரிடம் எம் எல் ஏக்கள் ஆதரவு கடிதம் கொடுத்தவுடன் முடிவிற்கு வந்தது. வெள்ளிகிழமை மாலை சரியாக 5:20 மணி அளவில் முதல் மந்திரி அசோக்சவான், துணைமுதல் மந்திரி சஜன் புஜ்பால், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் மாணிக்ராவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஆர் ஆர் பாட்டில் மற்றும் மும்பை பிரதேச காங் தலைவர் கிருபா சங்கர் சிங் மற்றும் பெரிய தலைவர்கள் புடைசூழ கவர்னர் மாளிகைக்கு சென்றனர். கவர்னர் மாளிகையில் கவர்னர் எஸ் சீ சமீரை சந்தித்து கூட்டனி எம் எல் ஏக்களில் 144 உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கும் கடிதத்தை முதல் மந்திரி அசோக் சவான் வழங்கினார்.  கவர்னரை சந்தித்துவிட்டு வெளியே வந்த முதல் மந்திரி அசோக்சவான் மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டனிக்கு அழைப்புவிடுமாறு கூறினோம். கூட்டனியின் 144 எம் எல் ஏக்கள் மற்றும் சுயோட்சைகளின் ஆதரவு கடிதங்களை கவர்னரிடம் தந்து இருக்கிறோம் எங்களுக்கு 170 எம் எல் ஏக்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
நாளை மாலை ஆட்சி கட்டிலில் அமர்வோம் என்றார்.





 தேசியவாத காங்கிரஸிற்கு உள்த்துறை மந்திரி பதவி சென்று உள்ளது என தெரிகிறது. நிதி அர்பன் டிவிலோப்மெண்ட் சாலை மேம்பாட்டு போன்ற முக்கியதுறைகளும் தேசியவாத காங்கிரஸ் பெற்று உள்ளதாக தெரிகிறது. இன்று மாலை டில்லி சென்ற அசோக்சவான் 2009 புதிய பார்முலாவை உறுவாக்கினோம் என்று கூறினார். ஆனால் மும்பையில் சற்று நேரத்திற்கு முன்பு பேசிய சஜன் புஜ்பால் 1999 பார்முலேவே பின்பற்ற பட்டுள்ளது என்றும் 23-20 என்பது அவர்கள் சொல்கிறார்கள். இருப்பினும் நாங்கள் கேட்ட துறைகள் எங்களுக்கு கிடைத்துவிட்டது என்றார்.
இது மராட்டியத்தின் வளர்ச்சியில் எங்கள் பங்கை அதிகரிக்கவே அன்றி எதிர்கட்சியினர் சொல்வது போல் தனிப்பட்ட முறையில் ஆதாயம் பெறுவதற்காக இல்லை என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக