25 நவ., 2009

தாராவி புத்தகவெளியீட்டு விழா




மும்பை தாக்குதலில் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியில் கடந்த ஆண்டு எனது நினைவுகளை எனது அனுபவங்களை மரவன் புலவு சச்சிதானந்தம் மற்றும் பத்மநாபன் ஐயாவிடன் பகிர்ந்துகொண்டபோது




   மும்பையில் ஞாயிறு அன்று நடந்த தாராவி புத்தகவெளியீட்டு விழா

  மும்பை ஜெரிமெரி தமிழ் சங்கத்தின் சார்பாக சரவணா ராஜேந்திரன் எழுதிய தாராவி என்ற புத்தக அறிமுக விழா ஞாயிறு அன்று மாலை 7 மணிக்கு நடைபெற்றது. விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை மாநகராட்சி விருது பெற்ற தமிழறிஞர் ஐயா சின்னசாமி அவர்கள் பாட விழா விமர்சையாக துவங்கியது

         ஜெரிமேரி தமிழ் சங்கத்தின் செயளாளர் திரு. வ.இரா.தமிழ் நேசன் விழாவிற்கு கலந்துகொள்ள வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.

தலைமை ஏற்று பேசிய ஜெரிமெரி தமிழ் சங்க முன்னாள் தலைவர் திரு.பொ வெங்கடாசலம் தாராவி புத்தகம் பற்றிய பேசிய போது “ தாராவி புத்தகம் தாராவி பற்றியது மட்டுமல்ல மும்பையில் உள்ள அனைத்து வறுமை நிலையில் வாழும் மக்களின் பிரதிபலிப்பு. தாராவி புத்தகத்தில் உள்ளது போலவே மும்பையில் உள்ள பெரும்பாலான குடிசைபகுதிகளின் நிலை இருக்கிறது.

            சிறுவயதில் மும்பையில் இருந்து வரும் பலர்  ஊரில் கழிக்கும்  குறுகிய நாட்களிலும்  பகட்டுத்தனமாக ஒரு நாடக வாழ்க்கை வாழ்ந்து கிராமத்து மக்களை மும்பை என்பது சுவர்க்கம் போல் படம் காட்டுவார்கள். ஆனால் மும்பை வந்த பிறகு இது சுவர்க்கம் அல்ல நரகம் என்று தெரியும், தாராவியை பெறுத்த வரை தமிழர்கள் அதிகம் வாழ்ந்தாலும் அனைத்து பிராந்திய மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள தொழிற்கூடங்களில் அயராது உழைத்து வந்த வருமானத்தில் அழகான மும்பையை உறுவாக்கினார்கள். இவர்களின் உழைப்பில் முதலாளிகளின் வாழ்க்கை தரம் உயர்ந்தது. பலவருட போராட்ட வாழ்க்கையில் இந்த மக்களின் வாழ்க்கைதரம் இன்னும் உயரவில்லை,

             தாராவியை பற்றிய இந்த புத்தகம் நல்ல முன்னோட்டமாக இருந்தாலும் இன்னும் பல தகவல்கள் தரவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்” இவ்வாறு திரு.பெ.வெங்கடாசலம் அவர்கள் கூறினார்கள்.



                தாராவி புத்தகத்திற்கு ஆய்வுறை வழங்கி பேசிய தாராவியின் மூத்தவழக்கரிஞரும் முன்னாள் ஆசிரியரும், போல்ட் இந்தியா பத்திரிக்கையின் ஆசிரியருமாகிய திரு இரா.ராஜமணி அவர்கள் பேசியபோது தாராவியை பற்றி பல அருமையாக கருத்துக்களை அவருடைய அனுபவங்கள் மூலமாக பகிர்ந்து கொண்டார்கள்.

                 தாராவிக்கும் தமிழுக்கும் மிக நீண்ட கால தொடர்பு உண்டு என்பதை சரவணா ராஜேந்திரன் பல வரலாற்று சான்றிதழ்களுடன் விளக்கி இருக்கிறார். இருப்பினும் இந்த புத்தத்தில் மும்பை வாழ் தமிழர்களை கலை களஞ்சியன்களை பதிவு செய்யதவறிவிட்டார். இருந்த போதிலும் இந்த புத்தகம் தாராவி தமிழர்களுக்கு ஒரு சிறந்த முன்னுரையாக எடுத்து கொள்ளாம். வி.கே மேனன் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டி இட்டார். அவரை எதிர்த்து சிவசேனா முதல் முதலாக போட்டி இட்டது.

               சிவ சேனாவின் வேட்பாளர் அந்த தேர்தலில் இழந்தார். தோல்வி அடைந்தார். வி.கே மேனன் தனது வெற்றிக்கும் மக்களுக்கு நன்றி சொல்ல தாராவி பகுதிக்கு வருகை புரிந்தார். அந்த நேரத்தில் முதல் முதலாக தாராவியில் உள்ள பல வாடிகளுக்கு அவர் செனறு பார்வை இடுகிறார். அந்த சிறு இடத்தில் பல நபர்கள் தங்கி இருப்பதையும் மனிதர்கள் வாழ வழியில்லாத ஒரு குறுகிய இடத்தில் 4,5 நபர்கள் வசிப்பதையும் அவர்கள் சந்தோசமாக இருப்பதையும் கண்டு வியந்து போனார். இந்த தாராவி தமிழர்களின் வாழ்க்கையை கண்டும் அவர்கள் சிறிய அறையில் அடுக்கு அடுக்கு படுக்கையில் படுத்து உறங்குவதை வைத்துதான் ரெயில்வேயில் சைடு பெர்த் டிசைன் செய்யபட்டது.

                                   மும்பை வி.டி ரெயில் நிலையத்தில்  படுக்கை வசதி கொண்ட முதல் ரெயில் பாம்பே-சிக்கந்திரா பாத் எக்ஸ்பிரஸ் விடப்பட்ட போது ரெயில்வேத்துறை அமைச்சர் இதை கூறினார். இந்திய ரெயில்களில் பெர்த் வசதி லண்டனையோ அல்லது வேறு எந்த நாட்டின் தொழில் நுட்பத்தை கண்டோ செய்யவில்லை, முழுக்க முழுக்க தாராவி தமிழரின் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டுதான் பெர்த் வசதி உருவாக்கபட்டு இருக்கிறது.

                         மும்பையில் பல பகுதிகளில் முக்கியமாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கணபதி சிலைகள் வைப்பது பிரச்சனைக்குறியதாக இருந்தது.இந்த தடைகளை எதிர்த்து தாராவி கிராஸ் ரோட்டில் கணேசர் கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். கணசர் ஊர்வலத்திற்கு பல பிரச்சனைகள் வந்தபோது நட்புனர்வுடன் அந்த பிரச்சனைகளை அனுகி இருதரப்பினருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் கணேசன் ஊர்வலம் நடத்தியவர்கள் தாராவி தமிழர்கள், பாபர் மசூதி இடிக்கபட்டபோதும் அதன் தாக்கத்தால் மத கலவரம் நடந்த போதும் தமிழகத்தில் அமைதி விளைந்தது போல் தாராவியிலும் அமைதிகாத்து சமூக நல்லிலக்கத்திற்கு தாராவி தமிழர்கள் உதாரணமாக அமைந்திருந்தனர் இவ்வாறு வழக்கறிஞர் இராசாமனி கூறினார்.

                                தாராவியில் முதல் தமிழ் பள்ளி ஆரம்பிக்கும் பொழுது அதனை பதிவு செய்த பெருமை ஐயா ராசாமணி அவர்களையே சாரும்.இவர் தாராவி பற்றிய 50 பதிவுகளை கட்டுரைகளாக தொகுத்து வைத்திருப்பதாகவும் அந்த தொகுப்புகளை புத்தகங்களாக கொண்டு வரும் ஆவலையும் கூறி இருந்தார். விரைவில் தாராவி 2 என்ற புத்தகம் வெளிவரவேண்டும் இதில் மேலும் பல தகவல்கள் இருக்கவேண்டும் என்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தார்.



                                        மற்றுமொரு ஆய்வாளர் கவிஞர் ஆ ஜெய காண்டீபன் பேசிய போது” தாராவி புத்தகம் தமிழர்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டிருந்தார், ஒரு சில எழுத்து பிழைகளை தவிர்த்து விட்டு பார்க்கும் போது இது எதிர்கால தமிழர்களின் வாழ்க்கையில்  சிறந்த ஆவனமாக கருதபடும் என்றார். தாராவியில் உள்ள பல தமிழர்கள் தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொண்டு வாழ்ந்து வருகின்றனர். தற்போது தாராவி மேம்பாடு அடைந்த வருகிறது. தாராவியை சுற்றிலும் உள்ள போக்குவரத்துவசதிகளை பற்றி அவர் குறிப்பிட்டு இருந்தார். பூகோள ரீதியாக சுற்றிலும் எளிதில் போக்குவரத்து வசதிகளை கொண்டதாக இருந்தாலும் தாராவியிலும் ஒரு ரெயில் நிலையம் வரவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.



               விழாவில் பேசிய மும்பை மாநகராட்சி பத்திரிக்கையாளர் சங்க தலைவர் திரு விஸ்னு சோனாவானே பேசியபோது  “எனக்கு தமிழ் எழுதவும் பேசவும் தெரியாது இங்கு  பேசிய பலர் என்ன பேசினார்கள் என்று தெரியாவிட்டாலும் தாராவி பற்றிய பல உண்மைகளை நாங்களும் பத்திரிக்கையாளர் என்ற முறையில் கண்டு உணர்ந்து வருகிறோம். அரசுகள் தாராவியை ஏழ்மை நிறைந்த குடிசைப்பகுதியாகவே உலகிற்கு காட்டி வருகிறது. குடிசைகள் இருக்கும் வரை அரசுகளுக்கு இதை காட்டியே உலக வங்கியிடம் வளர்ச்சி என்ற பெயரில் பணம் வாங்கி கொண்டு இருக்கவேண்டும். தாராவி தமிழர்களின் வாழ்க்கை இன்று பல வசதிகள் நிறைந்தாக இருந்தாலும், சாதாரணமாக இருக்கவேண்டிய வசதிகள் கூட தாராவியில் இல்லை, முக்கியமாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்ட சுகாதார வசதிகள், வாழ்விடங்களுக்கு ஏற்ற ஆரம்ப கட்ட வசதிகள் கூட இல்லாத நிலையில் நூற்றாண்டுகளாக வாழ்ந்துகொண்டு வருகிறார்கள்.

                 தற்போது பல வசதிகள் பெருகிவிட்டாலும் அந்த குறுகிய பகுதியிலேயே மக்கள் வசித்து வருகின்றனர். அரசு செக்டார் திட்டம் என்ற பெயரில் மக்களை கடந்த சில வருடமாக அலைக்கழித்து வருகிறது. சர்வே என்ற பெயரில் ஒரு திட்டம் தீட்டுகிறார்கள். அதன் பிறகு அவர்களே தங்களின் திட்டங்களை திறும்ப பெற்றுகொண்டு மீண்டும் ஒரு சர்வே எடுக்கிறார்கள்,

                   தாராவியில் உள்ள படித்த பெண்கள் அனைவரும் இனைந்து வாழும் உரிமைகளை முழுமையாக பெற போராடவேண்டும், இன்று நமக்கு கிடைத்தது அவ்வளவுதான் என்று நாம் நினைத்து கொண்டிருக்கும் வகையில் அரசுகள் நமக்கு கிடைக்ககூடிய பல வசதிகளை திசைதிருப்பிவிடுகிறது. இதனால் யார் யாரோ பலன் அடைகிறார்கள். பெண்களினால் மாற்றங்களை கொண்டு வர முடியும் பெண்கள் தங்களின் வலிமைகளை வெளிப்படுத்த வேண்டும் மராட்டிய பெண்களை போல் தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை துணிச்சலுடன் எதிர்த்து தங்களது உரிமைகளை பிறர் தங்களுக்கு முன்னாலேயே அனுபவித்துவருவதை ஒரு காலும் விட்டு விடக்கூடாது.

                தாராவி தமிழர்கள் தங்களுடைய கூட்டு புழுவாழ்க்கையை உடைத்து பிறமக்களுடன் கலக்க வேண்டும் தங்களது பறிக்கபடும் உரிமைகள் பற்றி உலகிற்கு எடுத்துகாட்டவேண்டிய பணி உங்களுக்கு இருக்கிறது. மும்பை பல கலாச்சாரத்தை தன்னுள் எடுத்து கொண்டு இருக்கிறது. இங்கு ஒருவருக்கு துண்பம் என்றால் பலர் ஒன்று சேர்ந்து நிலையை மாற்ற முயற்சிப்பார்கள், முதலில் நாம் நிலையை பற்றி தனக்கு அருகில் உள்ளவர்களுக்காகவாது தெரிவிக்க வேண்டும் அதை விட்டு விட்டு தங்களுக்குள்ளேயே விவாதித்துகொண்டு விளம்பர பிரியர்களின் வலையில் விழுந்து அவர்களின் பிரிவினைபேச்சுக்கு உட்பட்டு தங்களுக்கு உள்ளேயே பிரிவினைகளை ஏற்படுத்தி வாழ்ந்துவருவதாலேயே இதுவரை தாராவியில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் வரவில்லை அப்படியே வந்தாலும் அது தமிழர்கள் அல்லாதா பிற மொழியினர் வசிக்கும்  தாராவி குடியிறுப்புகளில் என்பதையும் இங்கே குறிப்பிடுகிறேன் என மும்பை மாநராட்சி பத்திரிக்கையாளர் சங்க தலைவர் விஷ்னு சோனாவானே குறிப்பிட்டு இருந்தார்.



                முன்னிலை வகித்து பேசிய இணை தலைமை ஆட்சியாளர் திரு. சம்போதி பேசியதாவது “ தேவையில்லாத பகுதிகளை செழுமைபடுத்தி அவற்றில் குடியிருப்புகளை அமைத்து வசிப்பது தாராவி தமிழர்களின் சிறப்பியல்புகளாகும் ஆனால் பெரிய பெரிய பில்டர்கள் நன்னீர் குளங்களை எல்லாம் மண்மேடாக்கி அங்கு பிளாடுகளை போட்டு விற்பனை செய்துவருகின்றனர். இவற்றை அரசு கண்டு கொள்வதில்லை, மாறாக இவர்களின் திட்டங்களுக்கு எந்த ஒரு எதிர்விவாதமும் இல்லாமல் அனுமதி அளிப்பதும், ஏழைமக்களின் வீடுகளை வருடத்திற்கு ஒருமுறை இடித்து விரட்டுவதும் தேர்தல் வரும் போது அவர்களுக்கு வீடுகள் கட்டிதருவேன்  என்று ஆசை வார்த்தை கூறி அவர்களை ஏமாற்றுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. தாராவி மட்டுமல்ல மும்பை முழுவதுமே இதே போன்று ஒரு நிலை ஏற்பட்டுவருகிறது. இதை நாம் மாற்றி அமைக்க வேண்டும் நம் உரிமைகளை வாக்கு சீட்டின் மூலம் வெளிப்படுத்த வேண்டும், இந்த நாட்டில் வாழும்  மக்கள் அனைவரும் ஒரு குடியரசு தலைவருக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளையும்  பெற்று வாழ வழிவகை உள்ளது.

              அதனால் தான் முதல் குடிமகன் என்று கூட நாம் ஜனாதிபதியை குறிப்பிடுகின்றோம். முதல் குடிமகன் என்றாலும் கடைசி குடிமகன் என்றாலும் உரிமைகள் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும், இங்கு அப்படி நடைபெறுவதில்லை, அதிகாரம் உள்ளவர்கள் அதிகாரம் இல்லாவர்களிடம் இருந்து பிடிங்கி வாழ்கின்றனர். இதை எதிர்த்து கேட்க துணிச்சல் இருந்தும் யாருக்கே நமக்கு கிடைத்து போதும் என்ற நிலையில் வாழ்கின்றனர். இவ்வாறு சம்போதி அவர்கள் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

                 இதனை அடுத்து பேசிய மும்பை பெண்கவிஞர் புதிய மாதவி அவர்கள் தாராவி பற்றிய தன்னுடைய எண்ணபாட்டை வெளிப்படுத்தி இருந்தார். அவர் கூறியதாவது “தாராவி என்னுடைய தாய் வீடு நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் தாராவியில் தான் அரசு வங்கியில் அதிகாரியாக பணியாற்றிய போதும் யாரும் என்னிடம் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டால் நான் தைரியமாக நான் தாராவியில் இருக்கிறேன் என்று அப்போதே கூறி வந்தேன், தாராவி காந்தி கண்ட இந்தியாவின் நகரங்களில் மும்பையில் பல இடங்களில் பெண்கள் நடமாட முடியாது பாதுகாப்பற்ற தன்மை உண்டு ஆனால் தாராவியில் இரவு 12 மணிக்குகூட ஒரு பெண் அவசரதேவைக்கு கடைவீதிக்கு சென்றுவரமுடியும் அந்த அளவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் தாராவி, தாராவியில் பெண்களுக்கு எதிரான வண்கொடுமைகள் பற்றி அவ்வளவாக கேள்வி பட்டதே இல்லை, வீடுகளுக்குள் ஏற்படும் பிரச்சனைகள் பல பத்திரிக்கைவாயிலாக அறிந்துகொண்ட போதும் இன்றுவரை தாராவியில் பொது இடத்தில் பெண்களுக்கு பிரச்சனைகள் வந்ததில்லை.

                    தாராவியில் எந்த இரு மத , சாதியினரும் ஒன்று கூடி கைகோர்த்து செல்வதை காணலாம், எனக்கு முன்பு பேசிய வக்கீல் ராசாமணி அவர்கள் கூறியது போல் தான் தாராவி தமிழர்களின் சமூக நல்லுரவு இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது” எனது தனது பேச்சில் குறிப்பிட்டு இருந்தார்இதனை அடுத்து பேசிய கே ஆர் மணி அவர்கள் தாராவியில் தமிழர்கள் குறித்து பல தகவல்களை ஐயா ராசாமணி அவர்களின் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்தது, இவரின் பதிவுகளை விரைவில் புத்தகமாக கொண்டு வரவேண்டும் என்று தனது எண்ணப்பாட்டை வெளிப்படுத்தினார்.

  விழாவின் இறுதி நேரத்தில் மரவன் புலவு க சச்சிதானந்தம் ஐயா அவர்கள் வருகை தந்து சிறப்பித்திருந்தார்.

இறுதி நேரமாகையால் அவரும் அவருடன் வந்திருந்த ஐயா உலகதமிழர்பேரவை செயளாளர் பத்மநாபன் அவர்களுன் அதிகம் உரைநிகழ்த்த முடியவில்லை


ஏற்புரையின் போது நூலாசிரியர் சரவணா ராஜேந்திரன் கூறியதாவது “ மதுரையில் பள்ளி இறுதியாண்டுகள் படித்துவிட்டு கல்லூரிபடிப்பிற்காக மும்பை வந்தேன். மும்பையில் இந்தி மற்றும் மராட்டி மொழி புதிதாக தெரிந்தாலும் உள்ளத்தில் உற்சாகமேற்று பயின்றதன் காரணமாக மராட்டி மொழியில் கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் ஆண்டே நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தேன். இந்த உற்சாக மராட்டிய மொழியில் உள்ள பல செய்திகளை தமிழில் மொழி பெயர்க்கும் ஆவலை என்னிடம் சேர்த்தது.கல்லூரி வாழ்க்கை  முடிந்ததும் மும்பை தமிழ் டைம்ஸில் கட்டுரைகள் எழுதிவந்ததேன். 1999-முதல் இணையங்களில் எழுதும் பழக்கம் ஏற்பட்டது, தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதிவந்த போது பல பெரியவர்களின் நட்புறவு கிடைத்தது. அப்படி கிடைத்த நட்பின் காரணமாக திரு மணி அவர்களின் அறிமுகம், நான் அலுவல் காரணமாக வட நாடு சென்றபோதஎனக்கு கிடைத்த ஒரு பாடத்தின் மூலம் இமயத்தில் உள்ள அமர்நாத் என்ற குகை பனிலிங்க கோவிலுக்கு செல்லும் ஆர்வம் மிகுந்தது . மண்ணில் இருந்து வின் நோக்கிய அந்த அற்புதமான திகில் மிகுந்த ஆன்மீக பயணம் பல ஆண்டுகளாக கட்டுரைகள் எழுதி வந்த எனக்கு ஒரு பயண புத்தகம் எழுதும் ஆர்வத்தை தூண்டியது. திரு மணி அவர்களின் மூலம் கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனர் பத்ரிசார் அவர்களின் நட்பு கிடைத்தும் எனது அமர்நாத் யாத்திரை புத்தக வடிவம் பெற்றது.



2008-ம் ஆண்டு அமர் நாத் யாத்திரை புத்தக வடிவில் வந்தது. இந்த இடைவெளியில் நான்  வருடங்களாக பணிபுரிந்து வந்த பிரிட்டீஸ் பெட்ரோலியம் நிறுவன பணியை துறந்து முழுநேர பத்திரிக்கையாளனாக மாறினேன். இந்த நிலையில் தான் மும்பை தாக்குதல் நடைபெற அந்த தாக்குதல் முழு புத்தகமாக கொண்டுவரும் எண்ணத்திற்கு பத்ரி சார் அவர்கள் வழிவகுத்தார், கிழக்குபதிப்பததின் தலைமை நூலாசிரியரும் பிரபல எழுத்தாளருமான திரு.பா ராகவன் சார் அவர்களின் உதவியுடன், பத்திரிக்கைகளை வாரபத்திரிக்கைகளில் பல அரசியல் கட்டுரைகள் , அரசியல் தலைப்பில் பல நூல்கள் எழுதிய திரு முத்துகுமார் அவர்களின் ஆலோசனையின் பேரில் பல தலைப்புகளில் புத்தகங்கள் எழுதிகொண்டு இருக்கிறேன். அந்த சங்கிலி தொடரில் ஆரம்ப நூல்கள் தான் சிவசேனா, உங்கள் கைகளில் தவழும் தாராவி. எழுத எழுந்த ஆர்வம் பல ஆயிரம் கிலோ மீட்டர் கடந்தும் ஒரு குட்டிதமிழகமாக மாறியதுதான். இதுவரை தாராவி பற்றி பல கட்டுரைகள் வந்தாலும் முழுவடிவமாக அதை பற்றி ஒரு பதிவு வெளியானதில்லை, இந்த குறையை தீர்த்துவைக்கும் நோக்கத்தில் வெளியானதுதான் இந்த தாராவி, தராவி பற்றி எழுதும் போது தாராவி மட்டுமல்ல நெல்லை, பூனா, போன்ற நகரங்களுக்கு சென்று தாராவி பற்றிய பல தகவல்களை திரட்டி எழுதி அதை முழுவடிவம் கொடுத்து எழுதியது மட்டுமல்லாமால் ஆதாரமாக மாநகர ஆவனங்கள், மற்றும் வரலாற்று புத்தகங்கள் வாயிலாக கொண்டு சேர்த்து கோர்வையாக எழுதியத்தான் இந்த தாராவி புத்தகம். புத்தகத்தை பற்றி பலர் குறிப்பிடும் போது எனது உள்ளம் நிறைவடைகிறது. இன்னும் பல தகவல்களை சேர்த்து விரைவில் தாராவி இரண்டு என்ற புத்தகம் வெளியிடுவேன் என்று கூறிகொண்டு இந்த புத்தக அறிமுக விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்த ஜெரிமேரி தமிழ் சங்க செயலாளர் திரு தமிழ் நேசன் அவர்களுக்கும், வருகை தந்த மரவன் புலவு சச்சிதானந்தம் அவர்களுக்கும், உலகதமிழர் பேரவை செயளாளர் திரு பத்மநாபன் ஐயா அவர்களுக்கும், ஜெரிமேரி தமிழ் சங்க நன்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை கூறிக்கொண்டு எனது பேச்சை முடிக்கிறேன். நன்றி வணக்கம்



                விழாவிற்கு ஜெரிமேரி சங்க தலைவர் வின்செண்ட் பால், தாராவி குறும்பட தயாரிப்பாளர் மதியழகன் சுப்பையா, ஜெரிமெரி தமிழ் சங்க தலைவர் கோ.சினிவாசகம், துணைத்தலைவர் இல முருகன், கவிஞர் கிங்பெல்,முன்னாள் செயலாளர் ஜெரிமேரி தமிழ்சங்கம் திரு ஓ.எம் காதார், தமிழ் காப்போம் இயக்க செயலாளர் இறை.ச.ராஜேந்திரன், கவிஞர் வழக்கறிஞர் பூலாங்குளம் ஜே.சுகுமாரன், ஜெரிமேரி தமிழ் சங்க முன்னாள் தலைவர் எஸ் லட்சுமனன், தமிழ் காப்போம் இயக்க பொருளாளர் திரு ப அந்தோணி , தமிழ் காப்போம் துணைசெயலாளர் திரு பால்வண்ணன் மற்றும் தமிழ் அறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் லக்‌ஷ்மி புத்திரன்,மூத்த பத்திரிக்கையாளர் சந்திரகாந்த் மகாதேவ் லிங்காயத், பத்திரிக்கையாளர் ஆசிப் அலி  பத்திரிக்கை அன்பர்கள்  பெரும் திரளாக வந்திருந்து தாராவி நூல் அறிமுகவிழாவில் கலந்துகொண்டனர்.






உலக தமிழர் பேரவை செயளாளர் திரு பத்மநாபன் அவர்களுடன் மும்பை மாநகராட்சி பத்திரிக்கையாளர் சங்கதலைவர் விஷ்னு சோனாவானே

   மும்பை மாவட்ட இணை ஆட்சியாளர் திரு சம்போதி காக்டே அவர்களுடன் மரவன் புலவு சச்சிதானந்தம்
   மொழி தெரியாவிட்டாலும் எனது அழைப்பை ஏற்று நிகழ்ச்சிக்கு ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் வாழ்த்துரை வழங்கிய மும்பை மாநகராட்சி பத்திரிக்கையாளர் சங்க தலவர் திரு விஷ்னு சோனாவானே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக