6 நவ., 2009

சூடு போட்ட பிறகு சுறுசுறுப்பான மும்பை போலீசார்

                                    மும்பை போலீஸ் தாராவி சிறுவனின் விசயத்தில் மட்டும் தாமதமாக ந்டவடிக்கை எடுத்தது என்று நினைக்க வேண்டாம், வருடக்கணக்கில் காணாமல்போன குழந்தையை மும்பை உயர் நீதி மன்றத்தின் திட்டு கிடைத்த உடன் 6 நாட்களுக்குள் கண்டுபிடித்து கொடுத்த தமாஸும் நடந்து இருக்கிறது.


                                மும்பை புறநகர் உல்லாஸ் நகரில் வசித்து வருபவர் பிரிதி சூக், 26 இவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றும் 5 வயது ஆண்குழந்தையுடன் வசித்து வருகிறார். கடந்த வருடம் குழந்தையை பார்கவேண்டும் மும்பை ஹாஜி அலில் பார்க்கிற்கு வா என்று அவரது  முன்னாள் கணவர் கூறியவுடன், கோர்ட்டின் உத்தரவின் படியும் குழந்தையை அழைத்து சென்றார். ஹாஜி அலி பார்க்கில் குழந்தையுடன் சிறிது நேரம்  பேசிக்கொண்டு இருப்பது போல் இருந்த அவரது முன்னாள் கணவர் திடிரென குழந்தையை தூக்கி கொண்டு காரில் சென்றுவிட்டார். சில விநாடிகளில் நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பிரிதி மஹாலட்சுமி போலீஸில் புகார் செய்தார், போலீசார் அந்த புகாரை பெற்றுகொள்ள மறுத்து கொஞ்ச நாள் குழந்தை அவரது அப்பாவிடமும் இருக்கட்டுமே என்று சமாதானம் பேச முயன்றனர்.










                          இதனை அடுத்து உல்லாஸ்நகர் போலீஸில் புகார் செய்தார். உல்லாஸ்நகர் போலீசார் முதலில் புகாரை ஏற்க மறுத்து சமாதானம் பேச முயன்றனர். ஆனால் பிரிதி தன் நிலையில் பிடிவாதமாக இருந்ததால், குழந்தை காணாமல் போனதாக எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். அதன் பிறகு தான் பிரச்சனை தொடங்கியது. கணவரும் அவர்களது உறவினர்களும் போனிலும் நேரிலும் மிரட்ட துவங்கினர். பிரிதி பல முறை இது குறித்து புகார் கூறியும் பலனில்லை. போலீசார் குழந்தை வெளிநாடு சென்று விட்டது என்றுவேறு சப்பை காரணம் சொல்லி இருக்கிறது. இந்த சம்பவத்தால் போலீசாரின் மீது நம்பிக்கை இழந்து மும்பை உயர் நீதி மன்றத்தை அனுகினார். பிரிதியின் புகாரை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் போலீஸ் உயரதிகாரியை நேராக கோர்ட்டிற்கு வரவழைத்து 11 மாதங்களாக குழந்தையை கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் குழந்தையின் தாயிடம் எங்களால் குழந்தையை கண்டுபிடிக்க முடியாது மன்னித்து விடுங்கள் என்று எழுதி கொடுக்க வேண்டியதுதானே என்று காட்டமாக உத்தரவிட சூடு வாங்கி கொண்ட போலீஸ் அடுத்த 7 வது நாளே குழந்தையை கண்டு பிடித்து கோர்ட்டின் மூலம் தாயாரிடம் ஒப்படைத்து.


PIC-மராட்டிய மாநில தலைமை காவல்த்துறை அதிகாரி எ என் ராய், மும்பை காவல்துறை ஆனையர் டி சிவானந்தம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக