6 நவ., 2009

சனிக்கிழமை நல்ல முக்கூர்த்தம் இழுபறி முடிவிற்கு வந்தது





            முழுமையான வெற்றி யாரிடமும் ஆதரவு கொடு என்று தொங்கவேண்டிய அவசியம் இல்லை, ஒன்றாக இனைந்து 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த கூட்டனி ஆனால் மந்திரி பதவிகளில் இந்த முறை நீயா நானா, ஆரம்பித்து வைத்தவர் வேறு யாரும் அல்ல மாநில முதல் மந்திரி, டில்லியில் அசோக்சவான் மராட்டிய மாநில முதல் மந்திரி என அறிவிக்கபட்டது, அவர் பத்திரிக்கையாளர்களிடன் கொடுத்த பேட்டியில் ” இம்முறை நாங் கள் அதிக இடத்தில் வெற்றி பெற்றுவிட்டோம், அதனால் எங்களுக்கு உள்த்துறை மற்றும் சில முக்கியமான மந்திரி பதவிகளை எடுத்துகொள்வோம் என ஸ்டேட்மெண்ட் விட விடயம் சூடு பிடித்து, டில்லியில் கொடுத்த இந்த பேட்டியின் எதிர்வினை மும்பையில் துணைமுதல் மந்திரி தேர்தெடுக்கும் போது தெரிந்தது, உள்த்துறை தேசியவாத காங்கிரஸ் 10 வருடங்களாக தன்னிடம் வைத்துள்ளது. இரண்டு முறை காங்கிரசை விட அதிக இடம் கிடைத்தும் முதல் மந்திரி பதவியை விட்டு கொடுத்த தேசிய வாத காங்கிரஸ் முதல் மந்திரியின் இந்த பேச்சால் கோபமுற்றது, விளைவு 15 நாட்களாக இன்னும் ஆட்சியில் அமர முடியவில்லை. காங்கிரஸ் தேசியவாத காங்கிரசின் குடுமி பிடி சண்டையில் தோல்வியில் துவண்டு இருந்து ஜய ஜய கோஷ்டிகளும்(காவிகளுக்கு) உற்சாகத்தை அளித்துவிட்டது. தங்களுடைய கடமையை லேட்டாக புரிந்து கொண்ட காவிகள்(சிவசேனா-பாரதிய ஜனதா) நேற்று மாநில கவர்னர் எஸ்.சி சமீரை சந்தித்து மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும் என்று முறையிட்டது. இது எதிர்கட்சிகளின் கடமையும் கூட் எதிர்கட்சிகளின் கோரிக்கையை பரிசீலித்த கவர்னர் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் இரண்டிற்கும் 48 மணிநேர கெடு கொடுத்து அதற்கு ஆட்சி அமைக்க முன்வராவிட்டால் சட்ட ரீதியாக அனுகப்படும் என்று அறிக்கை விடுத்ததும். இரண்டு கட்சிகளும் தாமதமாக உணர்ந்து கொண்டது இரண்டு கட்சிகளும் இன்னும் தங்களுக்குள் சமாதானமாகவில்லை இருப்பினும் நிலமை கைமீறி செல்கிறது. பிரபுல் பாட்டீல் நாங்கள் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்று அறிக்கைவிட்டார். 1999 பார்முலாவே பின்பற்றபடும் என்று அறிக்கைவிட்டார்.  சனிக்கிழமை காலை 11 மணி அளவில் விதான் பவனில் பதவி ஏற்புவிழா நடைபெறும் என்று தெரிகிறது. இந்த நிலையில் டில்லியில் இன்னும் விவாதம் முடிவடைந்ததாக தெரியவில்லை பிரபா ராவ், விலாஸ்ராவ் தேஷ்முக், நாராயன் ரானே மற்றும் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோருடன்  சோனியா காந்தி ஏ கே அண்டோனி ஆலோசனை நடத்தினார். தேசிய வாத காங்கிரசார் பிடிவாதத்தை குறைப்பதாக தெரியவில்லை நிலமை மீறி போவதை கண்ட சோனியா தேசியவாத காங்கிரசார் கேட்கும் மந்திரி பதவியில் இரண்டை விட்டு கொடுத்து இருக்கிறார். நகர்புற மற்றும் கிராம வளர்ச்சித்துறை, மற்றும் நெடுஞ்சாலைத்துறை போன்றவைகள் தேசியவாத காங்கிரசிடமே இருக்கபோகிறது. உள்ததுறை மட்டும் காங்கிரசார் வசம் இருக்கபோவதாக தெரிகிறது, நேற்று மும்பை வந்த அசோக்சவானும் இதை உறுதி படுத்தியது போல் தெரிகிறது, இந்த நிலையில் காங்கிரசில் மந்திரி பதவிக்கு காத்திருந்த சிலரை சமாதான படுத்த வேண்டி இருப்பதால் காங்கிரஸ் மந்திரிகள் இரண்டு பாகமாக பங்கேற்பார்கள் என்றும் தேசியவாத காங்கிரசார் ஒரே நேரத்தில் பதவி ஏற்பார்கள் என்றும் தகவல் வருகிறது. இன்று(வ்ள்ளி)மாலை  5 மணி அளவில் அசோக்சவான் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க கடிதம் வழங்குவார். இருந்த போது டில்லி நிலமை இன்னும்  சீராகவில்லை என்றே தெரிகிறது. வரும் நாட்களில் தேசிய வாதகாங்கிரசிற்குள்ளும் காங்கிரஸிற்குள்ளும் புகைச்சல் வரும் என்றே தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக