25 நவ., 2009

மும்பையில் மரவன் புலவு சச்சிதானந்தம் ஐயாவுடன்



 மும்பை,24.
   ஜெரிமெரி தமிழ் சங்கத்தின் சார்பாக தாராவி புத்தக அறிமுக விழாவிற்கு பிரபலங்களை அழைப்பதிலும் அதற்காக ஆயத்த பணிகளில் ஒரு புறம் இருக்க மராட்டிய அரசின் சிறப்பு டெஃபன்ஸ் பீராஸிக்க்யூட்டர் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் வழக்கறிஞர் (தமிழர்தான்)திரு சுகுமாரன் ஐயா அவர்கள் வெள்ளிக்கிழமை இரவு என்னிடன் போனில் மரவன் புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள் மும்பை வருகை புரிந்துள்ளார். சயானின் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருப்பதாகவும் உங்களை சந்திக்க வேண்டும் என்றும் கூறினார்.
 சாயானின் கடந்த வெள்ளி அன்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மின்னஞ்சல்களில் அறிமுகமாகி இருந்த போதும் நேரில் சந்தித்தது இல்லை. அதே நேரத்தில் புகைப்படம் கூட பார்த்தது இல்லை, ஆனால் அவரது காந்தாளகம் புத்தக நிலையத்தில் இருந்து அவர் எழுதிய பல புத்தகங்களை அள்ளிகொண்டு சென்று இருக்கிறேன். அவரது புத்தகத்தில் உள்ள சிறப்புகள் சிறிய புத்தகமாக இருந்தாலும் அதிக தகவல்கள் இருக்கும் மக்களிடன் போய் சேரும் தன்மை இது போன்ற புத்தகத்திற்கு உண்டு, கிழக்கு பத்ரி சார் அவர்களும் இதே பாணியை கடைபிடித்து தான் வெற்றி பெறுகிறார் என்பது எனது கணிப்பு.
 ஈழத்தமிழர்களுக்காக அவ்வப்போது குரல் கொடுத்து வரும் சிவசேனாவின் தலைவர் பாலாசாகிப் தாக்கரேவை சந்திக்க வந்திருப்பதாக கூறினார். ஆனால் அவர் வந்திருந்த சமயம், சிவசேனாவினர் ஐ.பி.என் லோக்மத் என்ற செய்தி நிறுவனத்தை அடித்து நெருக்கி இருந்தனர். சச்சின் டெண்டுல்கர் என்ற கிரிக்கேட் வீரருடனும் சில வார்த்தை போரில் இருந்ததால், தாக்கரேவின் இல்லம் கொஞ்சம் பரபரப்பாகவே இருந்தது.வெள்ளிக்கிழமை மாலை சந்திக்க நேரம் கேட்டு சென்ற போது திங்கள் அன்று பார்க்கலாம் என்று தாக்கரே வின் உதவியாளர் ரவி மாத்ரே கூறிஇருந்தார். சனிக்கிழமை அவருடன் உலக தமிழ் மாநாட்டில் மும்பை பற்றி தகவல் புத்தகம் வெளியிடவேண்டும் என்றும் அதற்கான சில ஆவனங்களை எழுதி தருமாறும் அது குறித்து ஆலோசனை நடத்தினோம்.
ஞாயிறு அன்று தாராவி புத்தக அறிமுக விழா ஜெரிமெரி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. அன்று பகலில் இருந்தே நான் பிரமுகர்களை அழைக்கவும் அதற்காக என்னையும் தயார் படுத்தி கொண்டு இருந்தேன். மாலை மும்பை மலாட் பகுதியில் வெறு ஒரு நிகழ்ச்சியை முடித்து விட்டு இரவு 9 மணி அளவில் உலக தமிழர் பேரமைப்பு தலைமை செயளாலர் திரு பத்மநாபன் ஐயா அவர்களுடன் விழாவிற்கு வருகை தந்திருந்தார். விழாவிற்கு வந்த தாராவி பற்றியும் தான் அறிந்த தகவல்களையும் ஈழத்தமிழர்கள் மற்றும் தாராவி தமிழர்கள் பற்றியும் ஒப்புமை ஒன்றை குறிப்பிட்டு இருந்தார். இரவு நிகழ்ச்சி முடிந்த பிறகு மறுநாள் திங்கள் அன்று பாலா சாகிப்தாக்கரேவை சந்திக்க வேண்டியது பற்றியும் அதற்காக ஏற்பாடுகள் பற்றியும் பேசிவிட்டு விடைபெற்றேன்.
திங்கள் அன்று மீண்டும் காலையில் அவரை சந்தித்து பாலாசாகிப் வீட்டிற்கு விரைந்தோம், இன்னும் அவரது வீடு பரபரப்பான சூழலில் தான் காணபட்டது. வீட்டிற்கு சென்ற பிறகு காவலாளிகளிடம் போராடவேண்டி இருந்தது. மீட்டிங் என்று எங்களை உள்ளே விடவே இல்லை, ஆனால் இறுதியாக தெரிந்தது பெரியவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அண்ணன் எழுந்திரிப்பார் திண்ணை எப்போ காலியாகும் என்ற நிலையில் முதலாம் நிலை தலைவர்கள், இரண்டாம் நிலை தலைவர்கள் போட்டியில் கட்சி நிலை இருந்தது. பெரியவரை சந்திக்கமுடியாது என்ற நிலை வந்த பிறகு உத்தவ் தாக்கரேவை சந்திக்க முயற்சி செய்தேன், ஆனால் ராஜ் தாக்கரே போன்று எந்த வேகம் காட்டாதா உத்தவ் நாங்கள் அனுப்பிய கடித்தை பார்த்து விட்டு தற்போதைய அரசியல் சூழலில் இது பற்றி ஒன்றும் செய்யமுடியாது என்று நிராசையுடன் பதில் சொல்லிவிட்டார். வெறுவழியில்லாமல்  கடிதமாவது அவர்களது கைகளில் போய் சேர்ந்ததே என்ற நிம்மதியில் காலாநகரை விட்டு வெளியே வந்தோம், மாட்டுங்கா லேபர் கேம்பில் மதிய உணவு உண்டுவிட்டு, இரண்டு பேரையும் அழைத்து கொண்டு சாகித்திய அகதாமி சென்றேன்.
சாகித்திய அகடாமியில் பணிபுரிந்து வரும் தமிழரான ராஜி அம்மா அவர்களுக்கு இருவரையும் அறிமுக படுத்தி வைத்தேன். இலக்கியம் மற்றும் பல விடயங்கள் முக்கியமாக சச்சிதானந்தம் ஐயா அவர்கள் பன்னிரு திருமறைகள் மொழிமாற்றம் பற்றி கணணியில் ராஜி மேடத்திற்கு விவரித்து கொண்டு இருந்தார். தன்னுடைய பணியிலும் பொறுமையாக சுமார் அரை மணிநேரம் பொருமையாக விளக்கத்தை கேட்டுகொண்டு இருந்தார். மராட்டி மொழிமாற்றம் பற்றி பேசிவிட்டு மேலும் சில புத்தகங்கள் வாங்க மும்பை சி எஸ் டி புறப்பட்டோம், செல்லும் போது ரெயிலில் புறப்படலாம் என்று நினைத்த போது நேரம் ஆகிவிடும் என்பதால் மகிழூந்தில் புறப்பட்டோம் பேர்தான் மகிழூந்து ஆனால் மகிழ்ச்சியாக செல்லமுடியாது. முதலில் பெரியவர்கள் வண்டியில் உள்ளே அமர்வதற்கே சிறு போராட்டம் நடத்த வேண்டும், அதன் பிறகு கால்களை முழுவதுமாக நீட்ட முடியாது, இன்னும் பல இருப்பிலும் அது கருப்பு மஞ்சள் மகிழூந்து , சி எஸ் டியில் பல புத்தகடைகள் ஏறி இறங்கியதும்,சி எஸ் டி வந்து சேர்ந்து கட்டிட அமைப்பும், அந்த கட்டிடத்தை கட்டிய 18-ம் நூற்றாண்டின் தமிழர்களின் திறமை பற்றியும் மதுரைமீனாட்சி அம்மன் கோவிலில் காணப்பட்ட கலை நுணுக்கத்தை காண்பித்து அங்கிருந்த மாடல் வி.டி(சி.எஸ்.டி) பில்டிங்கையும் (1850-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து வந்த எஞ்சீனியர் ஒருவர் செய்த மாடல்)அவரிடம் காண்பித்தேன்.

இறுதியாக பத்மநாபன் ஐயா அவர்களின் விருப்பபடி இந்தியாவின் தலைவாயில் (கேட் வே ஆப் இந்தியா) பார்க்க சென்றோம் அங்கிருந்து நினைவு பதிப்பிற்காக புகைப்படம் எடுத்து கொண்டு வந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடங்கள் போன்றவற்றை பார்வையிட்டு வந்தோம். நேரம் சரியாக 6:30 இரவு 8:30 மணிக்கு தாதாரில் இருந்து விரைவு தொடர்வண்டியில் சென்னை திரும்ப வேண்டும் அந்த நேரத்தில் டாக்ஸி எதுவும் கிடைக்கவில்லை, நேரம் ஆக ஆக எனக்கு பதட்டம் அதிகம் ஆகி கொண்டே போனது எங்கே வண்டி தவறவிட்டுவிடுவோமோ என்ற பதட்டம் இருக்க சச்சிதானந்தம் ஐயாவோ நிதானமாக ரெயிலில் தேவைப்படும் உணவு (நானும் தாஜ், கிராண்ட் ஹையாத், லெ மரிடைன்,தாரா போன்ற ஓட்டல்களிலுல் பிரிட்டீஸ் பெட்ரோலியத்தில் பணிபுரிந்த போதும் சரி பத்திரிக்கை துறையில் பல விழாக்களின் போதும் சென்று இருக்கிறேன், ஆனால் ஐயா வாங்கிய உணவு வகையை முதல் முதலாக கேள்விபட்டதும் மட்டுமில்லாமல் முதல் முதலாக பார்க்கவும் செய்தேன் ஹமாஸ் ஃபலாஃபலாஸ் இந்திய உணவு என்று ஐயா சொன்னார்கள் ஆனால் எனக்கு என்னவோ அது இத்தாலிய உணவு வகையோ என்று குழம்பி இருந்தேன்) வாங்கி கொண்டு அதன் கொலபாவில் உள்ள உணவுவகம் ஒன்றில் நாங்கள் மூவரும் சாப்பிட்டு விட்டு புறப்பட்டோம்
அதன் பிறகு நடந்தவைகள் எல்லாம் நிமிடம் தவறினாலும் தாதரில் தொடர்வண்டி தவறவிடுவோம், சரியக 7:20 வரை கொலாபாவில் எங்களுக்கு டாக்ஸி கிடைக்கவில்லை, அந்த நேரம் பார்த்து தமிழர் ஒருவர் தனது வணிடியில் எங்களை அழைத்து சி.எஸ்.டி நிலையம் விட்டு விட வேக வேகமாக ஓட்டமும் நடையுமாக சி.எஸ்.டி வந்து சேர்ந்தோம், எங்களது அவசரம் ஒரு புறம் இருந்தாலும் அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு மும்பை தனது அவசரத்தில் இயங்கி கொண்டு இருந்தது. வினாடிகள் கூட எங்களுக்கு தாமதமாக கூடாது, நெருக்கடியில் புறநகர் தொடர்  வண்டியில் ஏறினால் தாதரில் இறங்க முடியாது, நான் இறங்கி விடுவேன் ஆனால் பெரியவர்களான இரண்டு பேரும் நேராக தானா கொண்டு செல்லபடுவார்கள், அதனால் நிதானமாக யோசித்து ஊனமுற்றோருக்காக ஒதுக்கபட்ட பெட்டியில் ஏறி அமர்ந்துகொண்டோம். மும்பையில் பத்திரிக்கையாளர்கள் அவசரத்திற்கு புறநகர் தொடர்வண்டியில் மட்டும் பயணம் செய்யலாம் என்ற ஒரு விதி முறை இருக்கிறது,இதில் என்ன வென்றால் மூன்று பேருமே பத்திரிக்கையாளர்கள் தான், நான் மராட்டிய அரசு , பத்மநாபன் ஐயா அவர்கள் தமிழக , சச்சிதானந்தம் ஐயா அவர்கள் ஈழத்து பத்திரிக்கையாளர்கள், அதனால் நீண்டவரிசையில் டிக்கேட் வாங்காமல் விரைவு வண்டியில் அமர்ந்துவிட்டோம், வண்டியில் அமர்ந்த போது நேரம் சரியாக 7:50 புறநகர் வண்டி கிளம்பிய சில விநாடிகளில் சிக்னலில் நின்றுவிட மனதில் அச்சம் குடியேற துவங்கியது, ஆதன் பிறகு ரெயில் சரியாக 8:03 தாதர் நிலையம் நின்றது, ரெயில் நிலையத்தில் நாடோடி, கனேசன், அவரது நன்பர்கள், செந்தில் அவரது துனைவியாருடனும் குழந்தையுடனும் வழியனுப்ப வருகை தந்திருந்தார்.
அவர்களை தொடர்வண்டியில் அமர்த்திய உடன் எனக்கு மனதில் நிம்மதி குடிகொண்டது. சில நிமிட பேச்சுகளுக்கு பிறகு ரெயில் புறப்பட்டது.  இந்த முதியவர்களை இறுதிநேரத்தில் நிறைய நடக்கவிட்டு விட்டேன் என்ற ஒரு பழி இன்னும் எனது மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. ரெயில் வராமல் டாக்ஸியில் வந்திருந்தால் தாதருக்கு 9 மணிக்குதான் வந்திருப்போம். மறுநாள் மீண்டும் வழக்கம் போல் எனது பணியை துவங்கினேன் ஆனால் முன்பை விட நிறைய பொறுப்புகள் நிறைந்த ஒரு தமிழனாக

1 கருத்து:

  1. அருமையான நிகழ் விவரணை. படிக்கும்பொழுதே எனக்குள் பதற்றம் தொற்றிக்கொண்டது. தங்கள் உதவிகளுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு