3 நவ., 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சாருக் பாய்

 சாருக் கான் நவம்பர் 2 1965
இந்தி திரைஉலகின் சூப்பர் ஸாடாராக வேண்டுமா பாகிஸ்தானில் இருந்து வந்தவராக இருக்கவேண்டும். இந்த பார்முலாதான் இன்று பின்னனி பாடகர்களின் தேர்வில் உள்ளது. அமிதாப்பை தவிர அனைத்து சூப்பர்ஸ்டார்களும் (திலிப் குமார், சுனில் தத், தேவ் ஆனந்த இன்னும் சிலர்) பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் தான் அந்த வரிசையில் சாருகானும்
ஆப்கானிஸ்தானை சேர்ந்த பட்டான் வமிசம் வியாபார நோக்கில் பாகிஸ்தானில் உள்ள பெஷாவருக்கும் வந்தது, இந்திய பிரிவினையின் போது டில்லியில் உள்ள ராஜேந்திர நகருக்கு வந்து சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர் சருக் கான்
அம்மா லத்தீப் பாத்திமா அப்பா தாஜ் முகமது கான்,
இஸ்லாமியர்களின் தர்காவை வழிபடும் மதபிரிவை சேர்ந்தவர், ரகுமானும் இந்த மதபிரிவில் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்.

தூர்தர்சன் வளர்த்துவிட்ட பையன், இன்று கிங் காங்

மன்னத் என்ற கனவு மாளிகை, கௌரி கல்லூரியில் இருந்தே காதல் அதன் பிறகு திருமனம் இரண்டு குழந்தை ஆர்யான், சுஹானா
தீவானா முதல் படம் டெலிவிசன் தொடரில் நடித்த அனுபவத்தில் முதல் படத்திலேயே சிறந்த நடிகர் பிலிம்பேர் அவார்ட்,
அமிதாப்பை கைவிட்ட ரேகா இவரையும் ஆரம்ப காலத்தில் கண்வைத்தார் இதில் இருந்து தப்பிக்க கல்லூரி காதலி கௌரியிடன் அடைக்கலம் ஆகி கழுத்தில் மங்கல் சூத்ரா(இந்து முறைப்படி திருமணம் நடந்தது) அனிவித்து ரேகா ஆண்டி ஆசீர்வாதம் பண்ணுங்க என்று காலில் விழுந்ததால் தப்பித்தார்.
தில் வாலே துல்ஹனியா லேஜாயேங்கே இன்றும் ஓடிக்கொண்டு இருக்கும் படம் 14 வருடம் ஆகிவிட்டது. கின்னஸ் சாதனை கிடைக்குமா என்று தெரியவில்லை, இன்னும் அப்ளை செய்யவில்லை போலும் கண்டிப்பாக கொடுப்பார்கள் ஏனென்றால் இன்றும் காலை காட்சி(மட்டும்)க்கு கூட்டம் போய்க்கொண்டு இருக்கிறது.
லண்டன் டூஸ்ஸார்ட் மியூசியத்தில் இவருக்கு மெழுகு சிலை இருக்கிறது. லண்டன் பலகலைகழகம் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து இருக்கிறது. ஒரு டூயட் பாட்டுக்கு கூட வெளிநாடு செல்லும் பழக்கம் இவர் கொண்டு வந்தது தான் (இப்ப தெரியுதா ஏன் டாக்டர் பட்டம் கொடுத்தார்கள் என்று) அதிகம் லண்டன், ஸ்காட்லாந்து போன்ற இடங்கள், தென்னாப்பிரிக்காவில், வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில், கனடாவில் உணவகங்கள், மற்றும் அங்காடிகள் ,துபாயில் ரியல் எஸ்டேட் நிறுவனம் எல்லாம் இவர் பெயரில் ஓடுக்கிறது பிழைக்கதெரிந்தவர், நமது ஊரில் நோ இன் வெஸ்ட் மெண்ட் இந்தியாவில் காசு போட்ட எடுக்கமுடியாதாம்
ஒருவயது சாருக்
தனது தந்தையுடன்
ஆர்யான் சஹானா உடன்
ரேகா ஆண்டியின் மோகன பார்வையில் இருந்து தப்பித்து கௌரியின் மனோகரபுன்னகையில் விழுந்தார்.

மீசை முளைக்காத பாலகன்
 எப்போதும் போல ரசிகர்களுக்கு ஒரு டாட்டா



உங்களுக்காக சில சாருக் போட்டோஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக