மும்பை மாநகரின் உயிரோட்டத்திற்கு புறநகர் ரெயில் மற்றும் உள்ளூர் பேருந்து இரண்டும் முக்கிய காரணியாக அமைகின்றன. மும்பை மாநகர பேருந்து நிர்வாகம் மும்பை மாநகராட்சியின் கீழ் இயங்மும் மும்பை மாநகர் மின்சார விநியோகம் மற்றும் போக்குவரத்து கழகமாகும். (இதை தான் சுறுக்கமாக Bombay electric sublay and transport) BEST இதன் வருடாந்திர பட்ஜெட் உலகின் முக்கிய பேருந்து கழக பட்ஜெட்டுகளில் ஒன்றாகும். சுமார் 100 கோடிபெருமான பட்ஜெட் அமுலாக்கும் நிறுவனமான பெஸ்ட் 2010 ஆண்டிற்கான பட்ஜெட்டை நெற்று வெளியிட்டது. பேரூந்து கட்டண உயர்வு இல்லை, இது இந்த பட்ஜெட்டின் ஹைலைட்டாகும், மேலும் மும்பை தூரப்புறநகரான தகிசரில் இருந்து சர்ச் கேட்வரை எக்ஸ்பிரஸ் பஸ் அறிமுக படுத்தி இருக்கிறது. அடிக்கடி நடக்கும் ரெயில் விபத்து மற்றும் தீவிரவாத தாக்குதல் போன்ற காரணங்களால் பெஸ்ட் பஸ்ஸிற்கு சுமார் 8 புதிய பயணிகள் கிடைத்து இருக்கின்றனர். கடந்த வருடம் மட்டும் 60க்கும் மேற்பட்ட புதிய வழித்தடங்கள் விடப்பட்டு இருக்கின்றன. 80 கோடிக்கான பட்ஜெட் அறிக்கையை வெளியிட்டு பேசிய பெஸ்ட் கமிசனர் கோபர்கடே பெஸ்ட் பஸ்களின் தரம் மற்றும் சேவையால் பயணிகளின் வரத்து அதிகமாகி இருக்கிறது. 2005-ற் முன்பு இருந்த மந்தமான நிலை மாறி கடந்த 3 வருடமாக பெஸ்ட் லாபகரமாக மாறிவுள்ளது இதன் காரனமாக பயணிகளுக்கு பல வசதிகள் செய்து கொடுத்து இருக்கிறோம். மோனோ ரயில் மற்றும், மெட்ரோ ரெயில் வந்தால் பெஸ்ட் சேவை பாதிக்கபடுமா என்ற கேள்விக்கு “ மோனோ ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் சேவை துவங்கினால் அதன் ஆரம்ப இடத்தில் இருந்து பல பேருந்துகள் விடவும் எங்களிடம் திட்டம் இருக்கிறது. இதன் மூலம் இரண்டு நிறுவனங்களுமே நல்ல பயன்பெறும் என்றார். மேலும் பெஸ்ட் பஸ்களுக்கான சிறப்பு வழித்தடம் நெடுங்சாலைகளில் அமைக்கப்படுவது குறித்து அவர் பேசுகையில் இதன் மூலம் தூரித சேவை, டிராபிக்கில் சிக்காமல் செல்வது, மற்றும் விபத்து போன்றவற்றை தவிர்க்க முடியும், என்றார்.
கனடாவில் உள்ளது போல் நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய பேருந்து அடுத்த வருடத்தில் இருந்து விடப்படும் என்றும் குறைந்த தூரம் செல்லக்கூடிய இந்த பேரூந்து விரைவில் சோதனை ஓட்டம் விடப்டும் என்றும் இந்த பேரூந்தை தனியார் நிர்வாகிப்பார்கள் என்றும் கூறினார். நகரில் பல இடங்களில் மின்சாரம் திருட்டு அதிகரித்து இருப்பதாகவும் இதை கட்டுபடுத்த மூன்று சிறப்பு குழுக்கள் அமைக்கபடும் என்று கூறினார்.
கடந்த 4 வருடமாக பெஸ்ட் பேருந்துகளில் விலை ஏற்றபடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடதக்கது.
மேலதிக தகவலுக்கு பெஸ்ட்டின் இணையதளத்தை பார்வையிடவும் http://www.bestundertaking.com
தமிழ் பிரஸ் இன்போ கார்பரேட் விங்
TPI-Mumbai
09029512535

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக