மத நம்பிக்கை இந்த முறை மராட்டியத்தில் மிகவும் விமர்சனதிற்கு உள்ளானது.தாக்கரே அண்ட் கம்பேனி தேர்தலில் தோல்வி அடைந்த உடன் அதற்கான காரணம் தேடி கமுக்கமாக குடும்பத்து பெண்கள் பவானி மற்றும் கோலாப்பூர் லட்சுமி அம்மன் கோவிலுக்கு சென்று வந்தனர்.
கார்த்திகா பௌர்ணமி என்ற காரணம் காட்டி துணை முதல் மந்திரியாக பதவி ஏற்க இருக்கின்ற சஜன் புஜ்பால் மனைவி, குழந்தைகள், புதிதாக எம் எல் ஏவான மகன் எல்லோரும் சேர்ந்து விட்டல் ருக்மனி கோவிலுக்கு சென்று பூசை புணஸ்காரம் செய்து வந்தனர்.

எல்லாவற்றையும் விட புதிதாக தோன்றிய நவநிர்மான் கட்சி தலைவரோ மராட்டியத்தில் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படும் எக்விராகோவிலுக்கு அனைத்து எம் எல் ஏக்களையும் அழைத்து சென்று அவர்களிடம் கட்சி மாறமாட்டேன், சம்பாதித்தில் பாதியை கட்சிக்கு கொடுப்பேன், தலைமைக்கு துரோகம் செய்யமாட்டேன் என்று சத்திய ஸ்டேட்மெண்ட் வாங்கி விட்டு திரும்பி இருக்கிறார். இந்த கோவிலுக்கு சென்று சத்தியம் செய்தவர்கள் 3 நாட்களுக்கு வெளிஆட்களை சந்திக்க மாட்டார்கள், இதற்கு ஏற்றார்போல் 13 எம் எல் ஏக்களும் மூன்று நாட்களாக வீட்டைவிட்டு வெளியே வராமால் நேற்று தான் மெதுவாக வெளிவந்தனர்.மும்பைமாகிம் நவநிர்மான் தொகுதி எம் எல் ஏ ஒரு விழாவில் கலந்து கொண்டார்.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தார் போல் மாநில முதல் மந்திரி செய்த செயல் இந்திய மட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சந்த் துக்காராம் போன்ற ஒடுக்கபட்ட மக்களுக்காகவே தங்களை அற்பணித்து மக்கள்வழியிலேயே சென்று அவர்கள் பின்பற்றிய மதத்தின் மூலமே சமூக விடுதலையை ஏற்படுத்தி கொடுத்தனர்.
துக்காராம் வழியில் வந்த பலர் அவரது கொள்கைகளில் ஈர்க்கபட்டு மக்களுக்காக பணியாற்றினர். அவர்களை
மராட்டியர்கள் இன்றும் கடவுள்களைவிட உயர்வான இடங்களில் வைத்துள்ளனர். மக்களுக்காக பாடுபட்ட மகான்கள் பிறந்த மாநிலத்தில் ஹைபை(பணக்கார) பாபா என்று அழைக்கபடும் சாயிபாபா என்ற ஒரு தனிமனிதருக்கு மாநில முதல் மந்திரி அசோக் சவான் முக்கியத்துவம் வழங்கியுள்ளார்.முதல் மந்திரி வீட்டிற்கு மட்டும் சுமார் 7000 போலீசார்(யார் வந்தாலும் சரி மீடியா வரவே கூடாதாம்) தனியாக ஒவ்வொரு மீடியாவிற்கும் இது சொந்த நிகழ்ச்சி அதனால் மீடியாக்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டாம் என்று போன் போட்டு ரெக்யூஸ்ட் வேறு விட்டு இருக்கிறார். (இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர்களது உரிமையை முழுமையாக அனுபவிக்கும் சுதந்திரம் உண்டு. ஒரு உதாரணம் அயல் நாட்டு பணங்களில் உதாரணனாக உலகின் சாட்டாம்பிள்ளையான அமேரிக்க டாலரில் கூட கடவுளின் பெயரால் நான் இந்த பணத்தை மக்கள் பயன் படுத்த உத்தரவிடுகிறேன் என்றுதான் எழுதி இருக்கும் ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல நம்மக்கு முழுஉரிமையும் எப்படி தருகிறார்கள் நான் உத்தரவிடுகிறேன் யார் நாம் தான் நமது பணத்தை பயண்படுத்த முழு உரிமையை எடுத்து கொள்கிறோம் ஏன் என்றால் நாம் ஓட்டளித்து அரசை தேந்தெடுக்கிறோம் அந்த அரசு நியமித்த அதிகாரி நமது பெயரால் பதவி ஏற்கிறார். நமக்கு உரிமை அளிக்கிறார்).
அசோக் சவான் செய்தது என்ன பாபாவை அழைத்துவந்து மாராட்டிய அரசு (மக்கள்) எங்களுக்காக பணியாற்றுங்கள்

என்று தங்க கொடுத்த வீட்டில் பாபாவை அழைத்து வந்து பூசை புணர்ஸ்கரம் செய்து இருக்கிறார். தேவையில்லாத இந்த காரியம் இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆட்சி அமைப்பதில் தாமதம் செய்து வரும் நிலையில் தோல்வியினால் அழுது கொண்டு இருந்த எதிர்கட்சி அலுவலகங்கள் தற்போது புத்தாடை போர்த்தி மீடியாக்களின் படையெடுப்பில் களித்து இருக்கிறது. இந்து கட்சி என்றும் காவி கட்சி என்றும் அழைக்கபடும் சிவசேனா-பாரதிய ஜனதா கட்சிகூட முதல் மந்திரியின் இந்த செய்கையை கடுமையாக விமர்சித்திருக்கிறது. அரசு வீட்டில் ஏன் பாபா வரவேண்டும் இது மக்களுக்கு காட்டும் தவறான வழியல்லவா ஒரு மாநில முதல் மந்திரி மன்னன் வழியே மக்கள் என்ற ஒரு தத்துவம் மீண்டும் உயிர்பெறுமல்லவா இது சனநாயக நாடா அல்லது சோனியா என்னும் மகாராணிக்கு கப்பம் கட்டும் சிற்றூர் அரசர் அசோக்சவான் ஆட்சி செய்யும் நாடா, பாபா என்றாவது ஓட்டு போட்டு இருக்கிறாரா? அட அவர் மாநிலத்தில் கூட அவர் ஓட்டளித்தது கிடையாது. தேர்தல் காலங்களில் சொந்த விமானத்தில் ஏறி அயல் நாடுசென்று விடுகிறார்.
சமீபத்தில் ஜார்ஜ் புஜ் சொன்னது போன்று (இந்தியா ஒரு சிறந்த நாடு, இந்தியாவில் உள்ள பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம், போன்றவை என்னை மிகவும் ஆச்சர்ய படவைக்கின்றன, இது ஒரு அமைதியான சமூதாயம் உருவாக நல்ல காரணிகள் ஆனால் எங்கேயோ சிலரின் ஆதிக்கம் தலையிடப்படுவதால் முழுமையான (சிஸ்டம்)நடைமுறையே பாதிக்கபடுகிறது) எவ்வளவு பெரிய உண்மை ஒரு அமேரிக்கன் இத்தனை வருடங்களுக்கு பிறகு நமது உரிமையை நமக்கு சொல்லிவிட்டு போய் இருக்கிறான். நாம் இன்னும் உரைக்காமல் ஜேய் ஜேய் போட்டு கொண்டு இருக்கிறோம்.

தர்காவிற்கு போ, தேவாலயத்திற்கு போ கோவிலிலுக்கு போ அது உனது தனிப்பட்ட உரிமை ஆனால் அதை அரசு வீட்டில் ஏன் செய்தாய் என்பதுதான் இங்கு பத்திரிக்கை வைக்கும் கேள்வி. பெரியார் போன்றவர்கள் பிறந்து வளர்ந்த பூமியில் இன்னமும் மூட நம்பிக்கைகள் தலைவிரித்தாடுகிறது. ஆனால் மராட்டியத்தில் அப்படி அல்ல இன்றும் 90 % மராட்டிய குடும்ப திருமணங்களில் பண்டிதர்கள் வெளியே ஒருபுறம் மாப்பிள்ளையின் நன்பர்கள் புடைசூழ மறுபுறம் மனப்பெண்ணின் தோழிகள் புடைசூழ திருமன வைபவம் நடந்தேரும். இவ்வளவு முன்னேறிய ஒரு சமூதாயத்தில் பாபாக்களை அழைத்து வந்து காலுக்கு தண்ணீர் ஊற்றி( அசோக் சவானின் மனைவி
இந்த வைபவத்தில் கலந்து கொள்ளவில்லை) அந்த தண்ணிரை அரசு வீடெங்கும் தெளித்து என்ன காமேடி செய்கிறீர் அசோக் இளமையான முதல் மந்திரி படித்த முதல் மந்திரி என பெயர் எடுத்த நீங்கள் செய்த இந்த காரியம் ஓட்டளித்த ஒவ்வொரு மக்களின் மனதை புண்படுத்திவிட்டது.
விலாஸ் ராவ் தேஷ்முக் கடந்த வருடம் இதே மாதம் மக்கள் இறந்து கிடக்கும் போது கூட அரிதாரம் பூசி படமெடுக்கும் ராம் கோபால் என்னும் ஒருவரை அழைத்து கொண்டு லைவ் லேக்கேசன் பார்க்க எலும்புகூடாக கிடந்த தாஜ் ஓட்டலுக்கு அழைத்து சென்றார். இந்த ஒரு நிகழ்விற்காக அவரை பதவியில் இருந்து தூக்கவைத்தது பத்திரிக்கைகள் ஆனால் உங்கள் கட்சி தலைமை அவரை டில்லி அழைத்து விட்டது. நீங்கள் செய்த இந்த காரியமே உங்களை வீட்டிற்கு வழிகாட்டும் ஒரு கருவியாக அமைந்துவிடும் அப்போது அந்த பாபா வந்து உங்களுக்கு ஆட்சி வழங்குகிறாரா என்று பார்ப்போம்.
மக்களின் வரிப்பணத்தில் கட்டிய பாலத்தை புணித படுத்தினாராம், அந்த பாலம் கட்ட இந்த பாபா எத்தனை கோடிகள் நன்கொடை வழங்கினார். இன்னும் ஒரு பாலம் பணி பாதியில் ஆமைவேகத்தில் நடக்கிறதே அதற்கு தன்னிடம் உள்ள மில்லியன் கணக்கான டாலரில் இருந்து கொஞ்சம் கொடுத்தால் அவரது பெயரை வைத்து பாபா பாலம் என்போம் ஆனால் ஒன்றுமே செய்யாமல் கட்டி முடிந்து பாலம் திறந்து 6 மாதம் ஆன பிறகு வந்து புணித படுத்தி செல்ல இவர் யார்??? கல்வியறிவு பரவலாக இருந்தும் பெரியார் போன்ற அறிஞர்கள் பிறந்த ஒரு மாநிலத்தில் மக்கள் இன்னும் இது போன்ற காரியம் செய்கின்றனர்.
ஆனால் முற்போக்கு எண்ணம் கொண்ட மராட்டியர்கள் வாழும் மண்ணில் அதன் முதல் மந்திரியாக நீங்கள் செய்யும் இந்த காரியம் உங்கள் பதவிக்கு வேட்டு வைக்கும் முதல் அம்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக