இந்தியா வரும் 20 ஆண்டுகளுக்கு பரிபூரண வளர்ச்சி அடைய பல திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தவேண்டும் ஜார்ஜ் புஷ்
புதுடில்லியில் இருந்து சிறப்பு நேர்கானல் தமிழ் பிரஸ் இன்போவில் மட்டும்
ஹிந்துஸ்தான் டைம்ஸ் உலகதலைவர்கள் மாநாடு புதுடில்லியில் இன்றும் நாளையும் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உலகின் பல தலைவர்கள், பெரிய தொழில் அதிபர்கள் மற்றும் இந்திய பிரதமர், நிதி அமைச்சர், மற்றும் பல பொருளாதார. விஞ்ஞான அறிஞர்கள் கலந்து கொண்டு தங்களது
தீர்மாணங்களை தர விருக்கிறனர்.
மாநாட்டில் எதிர்கால வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு என்ற தலைப்பில் பேசுவதற்கு அமேரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஸ் புதுடில்லி வருகை தந்தார்.
முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் நமக்கு தந்த சிறப்பு நேர்கானலின் தமிழாக்கம் தமிழ் பிரஸ் இன்போவில் மட்டும்.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் நானும் இனைந்து புதிய சிந்தனைகளுடன் போரால் பாதிக்கபட்ட மக்களுக்காகவும், பொருளாதார சீரழிவுகளால் துன்பப்படும் வர்க்கங்களுக்காகவும், சுற்றுப்புற சூழலால் பாதிக்கபட்டு இன்னலுரும் உயிரினங்களுக்காகவும் பாடுபடபோகிறோம். உலகின் எதிர்கால போக்கில் இந்தியாவின் பங்கு அதிகம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தியா ஒரு சிறந்த நாடு, இந்தியாவில் உள்ள பேச்சு சுதந்திரம், மத சுதந்திரம், போன்றவை என்னை மிகவும் ஆச்சர்ய படவைக்கின்றன, இது ஒரு அமைதியான சமூதாயம் உருவாக நல்ல காரணிகள் ஆனால் எங்கேயோ சிலரின் ஆதிக்கம் தலையிடப்படுவதால் முழுமையான (சிஸ்டம்) நடைமுறையே பாதிக்கபடுகிறது. இந்தியாவின் எதிர்கால பார்வை மிகவும் பிரகாசமானது ஒவ்வொரு இந்திய குடிமகனிடம் இந்த அழுத்தம் இருப்பதை காண்கிறேன், வளர்ச்சி திட்டங்கள் பல உருவாக்கபடுக்கிறது. உருவாக்கபடும் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தபடும் போது இந்தியா வரும் 20 ஆண்டுகளில் பரிபூரண வளர்ச்சியை பெற்றுவிடும் என்பதில் ஐயமில்லை.
அணு ஆயுத கொள்கை
இந்தியா அணுஆயுத கொள்கை விடயத்தில் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தி வருகிறது. இந்தியா வளர்ந்து வரும் நாடு, சர்வதேச சமூகத்தில் அக்கரை கொண்டுள்ள நாடுகளில் முக்கியமான நாடாக விளங்கி வருகிறது. இதன் அணுஆயுத கொள்கை வளர்ந்து வரும் நாடுகளுக்கு இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதே வேளையில் பல நாடுகள் இந்தியாவின் அணுஆயுத கொள்கை நிலைப்பாட்டில் தங்கள் பக்கமாகவே இருக்கவேண்டும் என்று கருதுகின்றன. தங்களில் கொள்கைகளில் அவைகள் உறுதியை கடைபிடிப்பதால் இந்தியாவின் அணுஆயுத கொள்கைகள் சிறிது முரன்பாடாக தெரிகிறது. எதிர்காலத்தில் அனைத்து நாடுகளுமே அணுக்கொள்கைகளை ஆக்கபூர்வமான பாதைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்கின்றன. அணுசக்தியை ஆக்கபூர்வ பணிக்கு கொண்டுசெல்லும் சிறந்த வழிகாட்டியாக இந்தியா எதிர்காலத்தில் திகழும் என்பதில் சிறிதளவேனும் கூட ஐயமில்லை.
பொருளாதாரம்
இந்தியாவை பொருத்த வரை மனித வளம் இங்கு கொட்டிகிடக்கிறது. உலக நாடுகளில் பல மனித வளமின்றி தாங்களில் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் தினறி கொண்டு இருக்கும் காலகட்டம் இது ஆனால் இந்தியாவில் உள்ள அபரீதமான மனித வளம் உலக நாடுகளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக இருக்கும். இந்தியாவிற்காகவே G20 உருவாக்கபட்டது. G 8-ன் உறுப்பு நாடுகள் எதிர்வரும் காலத்திற்கேற்ப மாற்றம் கொண்டு வரவேண்டும். இதற்கு இந்தியாவின் துணைமிகவும் தேவைப்படுகிறது. இதன் காரணமாகவே G20 உருவாக்கபட்டு அதில் இந்தியாவின் பங்கு முதன்மையாக வைக்கபட்டு இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா தன்னில் பெரிய மாற்றம் கொண்டு உள்ளது, இது 100 ஆண்டுகளாக பல நாடுகள் காணாத மாற்றம் இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் பரவலான பொருளாதார கொள்கை மற்றும் மக்களின் ஒத்துழைப்பு. உலகில் மாறிவரும் பொருளாதார ஏற்றதாழ்வுகளை சீர் செய்ய இந்தியாவின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
சமூக நல்லினக்கம்
பல்வேறுபட்ட சமூகங்கள் கலந்திருக்கும் இந்த நாட்டில் நிறந்தர அமைதி ஒன்றை காலம் காலமாக உலகம் கண்டு வருகிறது. முக்கியமாக இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே கானப்படும் ஒற்றுமை உலக நாடுகளில் எங்கும் காணமுடியாத ஒன்று. இன்றும் பல நாடுகளில் ஒரு குறிப்பிட்ட மத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தும் அதே நேரத்தில் பிற மதங்களுக்கும் கொள்கை வடிவில் சில சுதந்திரங்கள் உண்டு ஆனால் அங்கு பெரும்பாண்மை மததிற்கு மட்டுமே முக்கியத்துவம் மற்ற மதங்களுக்கு கிடையாது ஆனால் இந்தியாவின் சட்ட அமைப்பு மிகவும் பாராட்டத்தக்கது, அனைத்து மதங்களுக்கு முக்கியத்துவம் ஒரு மதத்தின் பக்கம் மட்டும் நிற்காமல் நடுநிலையாக நிற்பது போன்றவை பாராடுதலுக்கு உரியவைகளாகும்
எதிர்வரும் காலங்களில் உலகின் வளர்ச்சிக்கு இந்தோ-அமேரிக்க சமூகங்கள் இரண்டும் முக்கியத்துவம் கொடுத்து கூட்டாக பாடுபடும் ஒபமா இந்த பாதை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்.
இவ்வாறு எமக்களித்த சிறப்பு நேர்கானலில் குறிப்பிட்டார்.
PIC- Shobhana Bhartia, chairperson HT Media Ltd
Former US president George W Bush with Vir Sanghvi
Thanks to
Arvid Yadav, T Narayan, Atul yadhav(HT Photographers )
Translated By Saravana Rajendran( TPI Mumbai)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக