3 நவ., 2009

மராட்டிய மொழியில் மட்டும் தான் பதவி ஏற்க வேண்டு இல்லை என்றால்



மும்பை
மராட்டிய மாநில தேர்தல் முடிவுகள் வெளிவந்து பல நாட்கள் ஆகியும் ஆட்சி அமைக்க இன்னும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் முன்வரவில்லை மந்திரி பதவிகள் பங்கு போட்டுகொள்வதில் தண்ணீர் குழாய் சண்டை நடக்கிறது. இதனால் ஏற்பட்டுள்ள மந்தமான சூழ்நிலையை சுறுசுறுப்பாக்கி விட ராஜ் தாக்கரே புதிய தடாலடி ஸ்டேட்மெண்ட் ஒன்று விட்டுள்ளார்.
அதாவது மராட்டியில் மட்டும் பதவிபிரமானம் எடுத்து கொள்ள வேண்டும் என்றும் அப்படி மராட்டியில் பதவிபிரமாணம் எடுக்காவிட்டால் அவர்களை எடுக்கவைப்போம் அப்படி எடுக்காவிட்டால் அவர்களுக்கு அவர்கள் புரியும் மொழியில் புரியவைப்போம் எனறு தடாலடியாக உத்தவிட்டுள்ளார்.
இது நாள் வரை மும்பையில் வசிக்கும் வட இந்தியர்களுக்கு எதிராக மராட்டியர்களை பாதுகாப்போம் என்று கிளம்பியவர் தேர்தலில் தங்களது கட்சிக்கு 13 எம் எல் ஏ மற்றும் மாநில கட்சியாக அங்கீகாரம் கிடைத்தவுடன்
சட்டசபையிலும் தங்களது வட இந்தியர் விரோத போக்கை கடைபிடித்துள்ளார்.












சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் அபு ஆஸ்மி பிவண்டி மற்றும் கோவண்டி  இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் சமீபத்தில் எனக்கு மராட்டி தெரியாது நான் இந்தியில் தான் பதவி பிரமான எடுப்பேன்  என்று கூறியது தான் பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது.
மராட்டிய மாநிலத்தில் மராட்டியின் மட்டும் தான் பதவி பிரமானம் இல்லை என்றால் மாநிலத்தை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று மிரட்டும் தோனியில் நேற்று அறிக்கை விட்டார் நவநிர்மான் கட்சி தலைவர் ராஜ்தாக்கரே.
இது குறித்து அபு ஆஸ்மியிடம் கேட்டபோது எனக்கு தெரிந்த மொழியில் தான் நான் பதவி பிரமாணம் எடுப்பேன், ஹிந்தி பாரத தேசத்தின் ஆட்சி மொழி அந்த மொழியில் பதவி பிரமாணம் எடுப்பதில் தவறேதும் இல்லை நாம் இந்தியாவில் தான் இருக்கிறோம் மராட்டியமும் இந்தியாவில் தான் இருக்கிறது என்றார். பால் தாக்கரேவையும் மிரட்டும் பாணியில் அங்கிளுக்கு கடைசி காலம் நெருங்கி கொண்டு இருக்கிறது அதனால் அமைதியாக மீதமிருக்கும் காலத்தை கழியுங்கள் என்று சொல்லி சிவசேனாவையும் உசுப்பி விட்டு இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக