26 நவ., 2009

மும்பை 26/11 என்ற எனது புத்தகத்தில் இருந்து (1)

  தர்காவிற்கு செல்ல இருந்த குடும்பம் தனது தந்தையை இழந்தது.
மும்பை குர்லாவை சேர்ந்த முகமது ஜேக்காப் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை நகரம். பிழைப்பதற்காக மும்பை வந்த இவர் வருமானவரித்துறை கண்சல்டாக இருந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் இவரது மூத்த சகோதரி, சகோதரியின் மகன் யாக்கோபு, தனது மனைவி ஒரு வயது குழந்தையுடன் சி.எஸ்.டி ரெயில் நிலையம் வந்தார்கள். இவர்கள் அன்று இரவு சென்னை மெயிலில் கர்னாடகா மாநிலத்தில் உள்ள குல்பர்கா தர்காவிற்கு செல்ல இருந்தனர். இவர்களது குழந்தை பிறந்த உடன் தர்காவிற்கு வருவதாக வேண்டிக் கொண்டனர். ரெயில் முன்பதிவு கிடைக்க பல நாட்களுக்கு முன்பே முயற்சி செய்தனர். ஆனால் முன்பதிவு கிடைக்காததால் உடன் டிக்கேட்டிலேயே பயணம் செய்ய முடிவு செய்தனர்.
இதனால் விரைவில் மும்பை சி.எஸ்.டி ரெயில் நிலையம் வந்து பயணிகள் அமரும் இடத்தில் காத்திருந்தனர். தனது தந்தை சகோதரி மற்றும் தனது மனைவி குழந்தைகளை அங்கு அமர வைத்து விட்டு வெளியில் சென்று சாப்பிட
பொருட்கள் வாங்கி வரலாம் என்று நினைத்து தனது மருமகனுடன் வெளியே சென்றார். வெளியில் சென்ற சிறிது நேரத்தில் ரெயில் நிலையத்தில் இருந்து பலர் அலறி அடித்து கொண்டு ஓடிவந்தனர். நாங்களும் ஏதோவிபரீதம் நடந்து விட்டது என்று நினைத்து அங்கு செல்ல முயன்றால் யாரும் எங்களை அங்கு விடவில்லை. எங்கு
பார்த்தலும் மரண ஓலம் எனது மனைவியும் சகோதரியும் நாங்கள் உட்கார வைத்த இடத்தில் இல்லை. அவர்கள் சில வினாடிகளுக்கு முன்பு தான் குழந்தையை எடுத்துக்கொன்டு அருகில் உள்ள பாத்ரூமிற்குள் நுழைந்தார்கள். அந்த நேரம் பார்த்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் எங்களது தந்தையின் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து கீழே விழுந்து கிடந்தார். இதை கண்டதும் எனது சகோதரியின் மகன் எனது தந்தையை காப்பாற்ற ஓடினான். இவனை கண்டதும் அங்கு நின்றுகொண்டிருந்த தீவிரவாதிகள் அவனையும் சுட்டனர். தீவிரவாதிகள் சுட்டதில் எனது சகோதரி மகனின் முதுகு தண்டுவடத்தில் குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் மும்பை ஜே.ஜே மருத்துவமனையில் சேர்க்கபட்டனர். எனது தந்தை மருத்துவமனையில் சேர்க்கபடும்
முன்பே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இவ்வாறு முகம்மது ஜோக்கப் கூறினார்.

வெட்கம் கெட்ட உலகம்

 

  மும்பை தாக்குதல் நேரடி அனுபவத்தால் வெதனையின் உச்சத்தில் இருந்து இருக்கிறேன்,

 மும்பை மாநகராட்சி இரண்டு நாட்கள் கழித்து பிரதமர் வருகிறார் அதற்கு சிறப்பு அனுமதி வாங்கவேண்டும் என்ற நினைப்பில் மாநகராட்சி பத்திரிக்கையாளர் சங்கத்தில் அமர்ந்திருந்த போது திடிரென விளக்குகள் அனைத்தும் அனைக்கபட்டு விட்டது. நாங்கள் அமர்ந்திருக்கு இடம் உள்பகுதியில் அமந்திருந்ததால் வெளியில் நடப்பது எதுவும் தெரியாது. இருட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் மொபைல் வெளிச்சத்தில் கதவை திறந்த போது பாதுகாவலர்கள் யாரும் வெளியே செல்லவேண்டாம் என்றும், சி எஸ் டி யில் இருவர் துப்பாக்கியால் சுடுகிறார்கள்
என்றும் கூவினர். வளாகத்தில் வரும் போது லெசாக சத்தம் கேட்டது. அனைவர் முகத்திலும் பயத்தின் ரேகை தெரிந்ததுயு
வெகுநேரம் கழித்து போலீஸ் சைரன் சத்தம் எல்லாம் குறைந்த பிறகு சரியாக 10:40 கீ ழே வந்தால் சி.எஸ்.டியில் ரத்தகளரி
யாரையும் உள்ளே நுழையவிடவில்லை, பல அதிகாரிகள் இறந்தாகவும் தகவல் ஆனால் தூரத்தில் இருந்து பார்த்தேன்
இரத்தால் உரைந்த உடலங்கள்,

  தாக்குதல் நடந்த ஓட்டல் நிர்வாகம் சில்பா செட்டியில் திருமன அழைப்பிதழை விட அதிக செலவில் அழைப்பிதழ் அடித்து கொண்டாடுகிறது. இரண்டு ஓட்டல் நிர்வாகமும் இலவச விளம்பரம் தேடுவதற்கு உலகில் உள்ள அனைத்து பத்திரிகைகளுக்கும் தகவல் தருகிறது.
டி.வி க்களோ திரைக்கதை வசனம் எழுதி வினாடிக்கு வினாடி மொபைல் போன்கள், அழகு சாமான்கள், வாகனங்கள் போன்ற விளம்பரங்களை பாதியாக போட்டு பாதியில் மும்பை நிகழ்வு, எல்லாவற்றையும் மிஞ்சும் அளவிற்கு ஐடியா
செய்தது இன்று இரவு ஐடியா மொபைலில் பேசப்படும் பொழுது அதில் வரும் பணமெல்லாம் பாரதிய போலீஸ் போர்ஸிற்கு செல்லுமாம் ( அப்படி ஒரு போர்ஸ் இருக்கிறதா????)
  பிரதம மந்திரியோ மும்பைதாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு தண்டனை தந்தே தீரூவோம் என்கிறார்.
முதலில் நாட்டின் பொருளாதோரத்தோடு விளையாடிய மதுகோடா, ராஜா, போன்றவர்களை தண்டியுங்கள், மும்பையை இனி நாங்களே பாதுகாத்துகொள்கிறோம்,

வெட்கம் கெட்ட மனிதர்கள்
 

25 நவ., 2009

மும்பையில் மரவன் புலவு சச்சிதானந்தம் ஐயாவுடன்



 மும்பை,24.
   ஜெரிமெரி தமிழ் சங்கத்தின் சார்பாக தாராவி புத்தக அறிமுக விழாவிற்கு பிரபலங்களை அழைப்பதிலும் அதற்காக ஆயத்த பணிகளில் ஒரு புறம் இருக்க மராட்டிய அரசின் சிறப்பு டெஃபன்ஸ் பீராஸிக்க்யூட்டர் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் வழக்கறிஞர் (தமிழர்தான்)திரு சுகுமாரன் ஐயா அவர்கள் வெள்ளிக்கிழமை இரவு என்னிடன் போனில் மரவன் புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள் மும்பை வருகை புரிந்துள்ளார். சயானின் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருப்பதாகவும் உங்களை சந்திக்க வேண்டும் என்றும் கூறினார்.
 சாயானின் கடந்த வெள்ளி அன்று சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மின்னஞ்சல்களில் அறிமுகமாகி இருந்த போதும் நேரில் சந்தித்தது இல்லை. அதே நேரத்தில் புகைப்படம் கூட பார்த்தது இல்லை, ஆனால் அவரது காந்தாளகம் புத்தக நிலையத்தில் இருந்து அவர் எழுதிய பல புத்தகங்களை அள்ளிகொண்டு சென்று இருக்கிறேன். அவரது புத்தகத்தில் உள்ள சிறப்புகள் சிறிய புத்தகமாக இருந்தாலும் அதிக தகவல்கள் இருக்கும் மக்களிடன் போய் சேரும் தன்மை இது போன்ற புத்தகத்திற்கு உண்டு, கிழக்கு பத்ரி சார் அவர்களும் இதே பாணியை கடைபிடித்து தான் வெற்றி பெறுகிறார் என்பது எனது கணிப்பு.
 ஈழத்தமிழர்களுக்காக அவ்வப்போது குரல் கொடுத்து வரும் சிவசேனாவின் தலைவர் பாலாசாகிப் தாக்கரேவை சந்திக்க வந்திருப்பதாக கூறினார். ஆனால் அவர் வந்திருந்த சமயம், சிவசேனாவினர் ஐ.பி.என் லோக்மத் என்ற செய்தி நிறுவனத்தை அடித்து நெருக்கி இருந்தனர். சச்சின் டெண்டுல்கர் என்ற கிரிக்கேட் வீரருடனும் சில வார்த்தை போரில் இருந்ததால், தாக்கரேவின் இல்லம் கொஞ்சம் பரபரப்பாகவே இருந்தது.வெள்ளிக்கிழமை மாலை சந்திக்க நேரம் கேட்டு சென்ற போது திங்கள் அன்று பார்க்கலாம் என்று தாக்கரே வின் உதவியாளர் ரவி மாத்ரே கூறிஇருந்தார். சனிக்கிழமை அவருடன் உலக தமிழ் மாநாட்டில் மும்பை பற்றி தகவல் புத்தகம் வெளியிடவேண்டும் என்றும் அதற்கான சில ஆவனங்களை எழுதி தருமாறும் அது குறித்து ஆலோசனை நடத்தினோம்.
ஞாயிறு அன்று தாராவி புத்தக அறிமுக விழா ஜெரிமெரி தமிழ் சங்கத்தில் நடைபெற்றது. அன்று பகலில் இருந்தே நான் பிரமுகர்களை அழைக்கவும் அதற்காக என்னையும் தயார் படுத்தி கொண்டு இருந்தேன். மாலை மும்பை மலாட் பகுதியில் வெறு ஒரு நிகழ்ச்சியை முடித்து விட்டு இரவு 9 மணி அளவில் உலக தமிழர் பேரமைப்பு தலைமை செயளாலர் திரு பத்மநாபன் ஐயா அவர்களுடன் விழாவிற்கு வருகை தந்திருந்தார். விழாவிற்கு வந்த தாராவி பற்றியும் தான் அறிந்த தகவல்களையும் ஈழத்தமிழர்கள் மற்றும் தாராவி தமிழர்கள் பற்றியும் ஒப்புமை ஒன்றை குறிப்பிட்டு இருந்தார். இரவு நிகழ்ச்சி முடிந்த பிறகு மறுநாள் திங்கள் அன்று பாலா சாகிப்தாக்கரேவை சந்திக்க வேண்டியது பற்றியும் அதற்காக ஏற்பாடுகள் பற்றியும் பேசிவிட்டு விடைபெற்றேன்.
திங்கள் அன்று மீண்டும் காலையில் அவரை சந்தித்து பாலாசாகிப் வீட்டிற்கு விரைந்தோம், இன்னும் அவரது வீடு பரபரப்பான சூழலில் தான் காணபட்டது. வீட்டிற்கு சென்ற பிறகு காவலாளிகளிடம் போராடவேண்டி இருந்தது. மீட்டிங் என்று எங்களை உள்ளே விடவே இல்லை, ஆனால் இறுதியாக தெரிந்தது பெரியவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அண்ணன் எழுந்திரிப்பார் திண்ணை எப்போ காலியாகும் என்ற நிலையில் முதலாம் நிலை தலைவர்கள், இரண்டாம் நிலை தலைவர்கள் போட்டியில் கட்சி நிலை இருந்தது. பெரியவரை சந்திக்கமுடியாது என்ற நிலை வந்த பிறகு உத்தவ் தாக்கரேவை சந்திக்க முயற்சி செய்தேன், ஆனால் ராஜ் தாக்கரே போன்று எந்த வேகம் காட்டாதா உத்தவ் நாங்கள் அனுப்பிய கடித்தை பார்த்து விட்டு தற்போதைய அரசியல் சூழலில் இது பற்றி ஒன்றும் செய்யமுடியாது என்று நிராசையுடன் பதில் சொல்லிவிட்டார். வெறுவழியில்லாமல்  கடிதமாவது அவர்களது கைகளில் போய் சேர்ந்ததே என்ற நிம்மதியில் காலாநகரை விட்டு வெளியே வந்தோம், மாட்டுங்கா லேபர் கேம்பில் மதிய உணவு உண்டுவிட்டு, இரண்டு பேரையும் அழைத்து கொண்டு சாகித்திய அகதாமி சென்றேன்.
சாகித்திய அகடாமியில் பணிபுரிந்து வரும் தமிழரான ராஜி அம்மா அவர்களுக்கு இருவரையும் அறிமுக படுத்தி வைத்தேன். இலக்கியம் மற்றும் பல விடயங்கள் முக்கியமாக சச்சிதானந்தம் ஐயா அவர்கள் பன்னிரு திருமறைகள் மொழிமாற்றம் பற்றி கணணியில் ராஜி மேடத்திற்கு விவரித்து கொண்டு இருந்தார். தன்னுடைய பணியிலும் பொறுமையாக சுமார் அரை மணிநேரம் பொருமையாக விளக்கத்தை கேட்டுகொண்டு இருந்தார். மராட்டி மொழிமாற்றம் பற்றி பேசிவிட்டு மேலும் சில புத்தகங்கள் வாங்க மும்பை சி எஸ் டி புறப்பட்டோம், செல்லும் போது ரெயிலில் புறப்படலாம் என்று நினைத்த போது நேரம் ஆகிவிடும் என்பதால் மகிழூந்தில் புறப்பட்டோம் பேர்தான் மகிழூந்து ஆனால் மகிழ்ச்சியாக செல்லமுடியாது. முதலில் பெரியவர்கள் வண்டியில் உள்ளே அமர்வதற்கே சிறு போராட்டம் நடத்த வேண்டும், அதன் பிறகு கால்களை முழுவதுமாக நீட்ட முடியாது, இன்னும் பல இருப்பிலும் அது கருப்பு மஞ்சள் மகிழூந்து , சி எஸ் டியில் பல புத்தகடைகள் ஏறி இறங்கியதும்,சி எஸ் டி வந்து சேர்ந்து கட்டிட அமைப்பும், அந்த கட்டிடத்தை கட்டிய 18-ம் நூற்றாண்டின் தமிழர்களின் திறமை பற்றியும் மதுரைமீனாட்சி அம்மன் கோவிலில் காணப்பட்ட கலை நுணுக்கத்தை காண்பித்து அங்கிருந்த மாடல் வி.டி(சி.எஸ்.டி) பில்டிங்கையும் (1850-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து வந்த எஞ்சீனியர் ஒருவர் செய்த மாடல்)அவரிடம் காண்பித்தேன்.

இறுதியாக பத்மநாபன் ஐயா அவர்களின் விருப்பபடி இந்தியாவின் தலைவாயில் (கேட் வே ஆப் இந்தியா) பார்க்க சென்றோம் அங்கிருந்து நினைவு பதிப்பிற்காக புகைப்படம் எடுத்து கொண்டு வந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடங்கள் போன்றவற்றை பார்வையிட்டு வந்தோம். நேரம் சரியாக 6:30 இரவு 8:30 மணிக்கு தாதாரில் இருந்து விரைவு தொடர்வண்டியில் சென்னை திரும்ப வேண்டும் அந்த நேரத்தில் டாக்ஸி எதுவும் கிடைக்கவில்லை, நேரம் ஆக ஆக எனக்கு பதட்டம் அதிகம் ஆகி கொண்டே போனது எங்கே வண்டி தவறவிட்டுவிடுவோமோ என்ற பதட்டம் இருக்க சச்சிதானந்தம் ஐயாவோ நிதானமாக ரெயிலில் தேவைப்படும் உணவு (நானும் தாஜ், கிராண்ட் ஹையாத், லெ மரிடைன்,தாரா போன்ற ஓட்டல்களிலுல் பிரிட்டீஸ் பெட்ரோலியத்தில் பணிபுரிந்த போதும் சரி பத்திரிக்கை துறையில் பல விழாக்களின் போதும் சென்று இருக்கிறேன், ஆனால் ஐயா வாங்கிய உணவு வகையை முதல் முதலாக கேள்விபட்டதும் மட்டுமில்லாமல் முதல் முதலாக பார்க்கவும் செய்தேன் ஹமாஸ் ஃபலாஃபலாஸ் இந்திய உணவு என்று ஐயா சொன்னார்கள் ஆனால் எனக்கு என்னவோ அது இத்தாலிய உணவு வகையோ என்று குழம்பி இருந்தேன்) வாங்கி கொண்டு அதன் கொலபாவில் உள்ள உணவுவகம் ஒன்றில் நாங்கள் மூவரும் சாப்பிட்டு விட்டு புறப்பட்டோம்
அதன் பிறகு நடந்தவைகள் எல்லாம் நிமிடம் தவறினாலும் தாதரில் தொடர்வண்டி தவறவிடுவோம், சரியக 7:20 வரை கொலாபாவில் எங்களுக்கு டாக்ஸி கிடைக்கவில்லை, அந்த நேரம் பார்த்து தமிழர் ஒருவர் தனது வணிடியில் எங்களை அழைத்து சி.எஸ்.டி நிலையம் விட்டு விட வேக வேகமாக ஓட்டமும் நடையுமாக சி.எஸ்.டி வந்து சேர்ந்தோம், எங்களது அவசரம் ஒரு புறம் இருந்தாலும் அதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு மும்பை தனது அவசரத்தில் இயங்கி கொண்டு இருந்தது. வினாடிகள் கூட எங்களுக்கு தாமதமாக கூடாது, நெருக்கடியில் புறநகர் தொடர்  வண்டியில் ஏறினால் தாதரில் இறங்க முடியாது, நான் இறங்கி விடுவேன் ஆனால் பெரியவர்களான இரண்டு பேரும் நேராக தானா கொண்டு செல்லபடுவார்கள், அதனால் நிதானமாக யோசித்து ஊனமுற்றோருக்காக ஒதுக்கபட்ட பெட்டியில் ஏறி அமர்ந்துகொண்டோம். மும்பையில் பத்திரிக்கையாளர்கள் அவசரத்திற்கு புறநகர் தொடர்வண்டியில் மட்டும் பயணம் செய்யலாம் என்ற ஒரு விதி முறை இருக்கிறது,இதில் என்ன வென்றால் மூன்று பேருமே பத்திரிக்கையாளர்கள் தான், நான் மராட்டிய அரசு , பத்மநாபன் ஐயா அவர்கள் தமிழக , சச்சிதானந்தம் ஐயா அவர்கள் ஈழத்து பத்திரிக்கையாளர்கள், அதனால் நீண்டவரிசையில் டிக்கேட் வாங்காமல் விரைவு வண்டியில் அமர்ந்துவிட்டோம், வண்டியில் அமர்ந்த போது நேரம் சரியாக 7:50 புறநகர் வண்டி கிளம்பிய சில விநாடிகளில் சிக்னலில் நின்றுவிட மனதில் அச்சம் குடியேற துவங்கியது, ஆதன் பிறகு ரெயில் சரியாக 8:03 தாதர் நிலையம் நின்றது, ரெயில் நிலையத்தில் நாடோடி, கனேசன், அவரது நன்பர்கள், செந்தில் அவரது துனைவியாருடனும் குழந்தையுடனும் வழியனுப்ப வருகை தந்திருந்தார்.
அவர்களை தொடர்வண்டியில் அமர்த்திய உடன் எனக்கு மனதில் நிம்மதி குடிகொண்டது. சில நிமிட பேச்சுகளுக்கு பிறகு ரெயில் புறப்பட்டது.  இந்த முதியவர்களை இறுதிநேரத்தில் நிறைய நடக்கவிட்டு விட்டேன் என்ற ஒரு பழி இன்னும் எனது மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. ரெயில் வராமல் டாக்ஸியில் வந்திருந்தால் தாதருக்கு 9 மணிக்குதான் வந்திருப்போம். மறுநாள் மீண்டும் வழக்கம் போல் எனது பணியை துவங்கினேன் ஆனால் முன்பை விட நிறைய பொறுப்புகள் நிறைந்த ஒரு தமிழனாக

தாராவி புத்தகவெளியீட்டு விழா




மும்பை தாக்குதலில் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியில் கடந்த ஆண்டு எனது நினைவுகளை எனது அனுபவங்களை மரவன் புலவு சச்சிதானந்தம் மற்றும் பத்மநாபன் ஐயாவிடன் பகிர்ந்துகொண்டபோது




   மும்பையில் ஞாயிறு அன்று நடந்த தாராவி புத்தகவெளியீட்டு விழா

  மும்பை ஜெரிமெரி தமிழ் சங்கத்தின் சார்பாக சரவணா ராஜேந்திரன் எழுதிய தாராவி என்ற புத்தக அறிமுக விழா ஞாயிறு அன்று மாலை 7 மணிக்கு நடைபெற்றது. விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை மாநகராட்சி விருது பெற்ற தமிழறிஞர் ஐயா சின்னசாமி அவர்கள் பாட விழா விமர்சையாக துவங்கியது

         ஜெரிமேரி தமிழ் சங்கத்தின் செயளாளர் திரு. வ.இரா.தமிழ் நேசன் விழாவிற்கு கலந்துகொள்ள வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார்.

தலைமை ஏற்று பேசிய ஜெரிமெரி தமிழ் சங்க முன்னாள் தலைவர் திரு.பொ வெங்கடாசலம் தாராவி புத்தகம் பற்றிய பேசிய போது “ தாராவி புத்தகம் தாராவி பற்றியது மட்டுமல்ல மும்பையில் உள்ள அனைத்து வறுமை நிலையில் வாழும் மக்களின் பிரதிபலிப்பு. தாராவி புத்தகத்தில் உள்ளது போலவே மும்பையில் உள்ள பெரும்பாலான குடிசைபகுதிகளின் நிலை இருக்கிறது.

            சிறுவயதில் மும்பையில் இருந்து வரும் பலர்  ஊரில் கழிக்கும்  குறுகிய நாட்களிலும்  பகட்டுத்தனமாக ஒரு நாடக வாழ்க்கை வாழ்ந்து கிராமத்து மக்களை மும்பை என்பது சுவர்க்கம் போல் படம் காட்டுவார்கள். ஆனால் மும்பை வந்த பிறகு இது சுவர்க்கம் அல்ல நரகம் என்று தெரியும், தாராவியை பெறுத்த வரை தமிழர்கள் அதிகம் வாழ்ந்தாலும் அனைத்து பிராந்திய மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள தொழிற்கூடங்களில் அயராது உழைத்து வந்த வருமானத்தில் அழகான மும்பையை உறுவாக்கினார்கள். இவர்களின் உழைப்பில் முதலாளிகளின் வாழ்க்கை தரம் உயர்ந்தது. பலவருட போராட்ட வாழ்க்கையில் இந்த மக்களின் வாழ்க்கைதரம் இன்னும் உயரவில்லை,

             தாராவியை பற்றிய இந்த புத்தகம் நல்ல முன்னோட்டமாக இருந்தாலும் இன்னும் பல தகவல்கள் தரவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்” இவ்வாறு திரு.பெ.வெங்கடாசலம் அவர்கள் கூறினார்கள்.



                தாராவி புத்தகத்திற்கு ஆய்வுறை வழங்கி பேசிய தாராவியின் மூத்தவழக்கரிஞரும் முன்னாள் ஆசிரியரும், போல்ட் இந்தியா பத்திரிக்கையின் ஆசிரியருமாகிய திரு இரா.ராஜமணி அவர்கள் பேசியபோது தாராவியை பற்றி பல அருமையாக கருத்துக்களை அவருடைய அனுபவங்கள் மூலமாக பகிர்ந்து கொண்டார்கள்.

                 தாராவிக்கும் தமிழுக்கும் மிக நீண்ட கால தொடர்பு உண்டு என்பதை சரவணா ராஜேந்திரன் பல வரலாற்று சான்றிதழ்களுடன் விளக்கி இருக்கிறார். இருப்பினும் இந்த புத்தத்தில் மும்பை வாழ் தமிழர்களை கலை களஞ்சியன்களை பதிவு செய்யதவறிவிட்டார். இருந்த போதிலும் இந்த புத்தகம் தாராவி தமிழர்களுக்கு ஒரு சிறந்த முன்னுரையாக எடுத்து கொள்ளாம். வி.கே மேனன் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டி இட்டார். அவரை எதிர்த்து சிவசேனா முதல் முதலாக போட்டி இட்டது.

               சிவ சேனாவின் வேட்பாளர் அந்த தேர்தலில் இழந்தார். தோல்வி அடைந்தார். வி.கே மேனன் தனது வெற்றிக்கும் மக்களுக்கு நன்றி சொல்ல தாராவி பகுதிக்கு வருகை புரிந்தார். அந்த நேரத்தில் முதல் முதலாக தாராவியில் உள்ள பல வாடிகளுக்கு அவர் செனறு பார்வை இடுகிறார். அந்த சிறு இடத்தில் பல நபர்கள் தங்கி இருப்பதையும் மனிதர்கள் வாழ வழியில்லாத ஒரு குறுகிய இடத்தில் 4,5 நபர்கள் வசிப்பதையும் அவர்கள் சந்தோசமாக இருப்பதையும் கண்டு வியந்து போனார். இந்த தாராவி தமிழர்களின் வாழ்க்கையை கண்டும் அவர்கள் சிறிய அறையில் அடுக்கு அடுக்கு படுக்கையில் படுத்து உறங்குவதை வைத்துதான் ரெயில்வேயில் சைடு பெர்த் டிசைன் செய்யபட்டது.

                                   மும்பை வி.டி ரெயில் நிலையத்தில்  படுக்கை வசதி கொண்ட முதல் ரெயில் பாம்பே-சிக்கந்திரா பாத் எக்ஸ்பிரஸ் விடப்பட்ட போது ரெயில்வேத்துறை அமைச்சர் இதை கூறினார். இந்திய ரெயில்களில் பெர்த் வசதி லண்டனையோ அல்லது வேறு எந்த நாட்டின் தொழில் நுட்பத்தை கண்டோ செய்யவில்லை, முழுக்க முழுக்க தாராவி தமிழரின் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டுதான் பெர்த் வசதி உருவாக்கபட்டு இருக்கிறது.

                         மும்பையில் பல பகுதிகளில் முக்கியமாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கணபதி சிலைகள் வைப்பது பிரச்சனைக்குறியதாக இருந்தது.இந்த தடைகளை எதிர்த்து தாராவி கிராஸ் ரோட்டில் கணேசர் கோவில் அமைத்து வழிபட்டு வந்தனர். கணசர் ஊர்வலத்திற்கு பல பிரச்சனைகள் வந்தபோது நட்புனர்வுடன் அந்த பிரச்சனைகளை அனுகி இருதரப்பினருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் கணேசன் ஊர்வலம் நடத்தியவர்கள் தாராவி தமிழர்கள், பாபர் மசூதி இடிக்கபட்டபோதும் அதன் தாக்கத்தால் மத கலவரம் நடந்த போதும் தமிழகத்தில் அமைதி விளைந்தது போல் தாராவியிலும் அமைதிகாத்து சமூக நல்லிலக்கத்திற்கு தாராவி தமிழர்கள் உதாரணமாக அமைந்திருந்தனர் இவ்வாறு வழக்கறிஞர் இராசாமனி கூறினார்.

                                தாராவியில் முதல் தமிழ் பள்ளி ஆரம்பிக்கும் பொழுது அதனை பதிவு செய்த பெருமை ஐயா ராசாமணி அவர்களையே சாரும்.இவர் தாராவி பற்றிய 50 பதிவுகளை கட்டுரைகளாக தொகுத்து வைத்திருப்பதாகவும் அந்த தொகுப்புகளை புத்தகங்களாக கொண்டு வரும் ஆவலையும் கூறி இருந்தார். விரைவில் தாராவி 2 என்ற புத்தகம் வெளிவரவேண்டும் இதில் மேலும் பல தகவல்கள் இருக்கவேண்டும் என்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தார்.



                                        மற்றுமொரு ஆய்வாளர் கவிஞர் ஆ ஜெய காண்டீபன் பேசிய போது” தாராவி புத்தகம் தமிழர்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டிருந்தார், ஒரு சில எழுத்து பிழைகளை தவிர்த்து விட்டு பார்க்கும் போது இது எதிர்கால தமிழர்களின் வாழ்க்கையில்  சிறந்த ஆவனமாக கருதபடும் என்றார். தாராவியில் உள்ள பல தமிழர்கள் தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொண்டு வாழ்ந்து வருகின்றனர். தற்போது தாராவி மேம்பாடு அடைந்த வருகிறது. தாராவியை சுற்றிலும் உள்ள போக்குவரத்துவசதிகளை பற்றி அவர் குறிப்பிட்டு இருந்தார். பூகோள ரீதியாக சுற்றிலும் எளிதில் போக்குவரத்து வசதிகளை கொண்டதாக இருந்தாலும் தாராவியிலும் ஒரு ரெயில் நிலையம் வரவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.



               விழாவில் பேசிய மும்பை மாநகராட்சி பத்திரிக்கையாளர் சங்க தலைவர் திரு விஸ்னு சோனாவானே பேசியபோது  “எனக்கு தமிழ் எழுதவும் பேசவும் தெரியாது இங்கு  பேசிய பலர் என்ன பேசினார்கள் என்று தெரியாவிட்டாலும் தாராவி பற்றிய பல உண்மைகளை நாங்களும் பத்திரிக்கையாளர் என்ற முறையில் கண்டு உணர்ந்து வருகிறோம். அரசுகள் தாராவியை ஏழ்மை நிறைந்த குடிசைப்பகுதியாகவே உலகிற்கு காட்டி வருகிறது. குடிசைகள் இருக்கும் வரை அரசுகளுக்கு இதை காட்டியே உலக வங்கியிடம் வளர்ச்சி என்ற பெயரில் பணம் வாங்கி கொண்டு இருக்கவேண்டும். தாராவி தமிழர்களின் வாழ்க்கை இன்று பல வசதிகள் நிறைந்தாக இருந்தாலும், சாதாரணமாக இருக்கவேண்டிய வசதிகள் கூட தாராவியில் இல்லை, முக்கியமாக உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்ட சுகாதார வசதிகள், வாழ்விடங்களுக்கு ஏற்ற ஆரம்ப கட்ட வசதிகள் கூட இல்லாத நிலையில் நூற்றாண்டுகளாக வாழ்ந்துகொண்டு வருகிறார்கள்.

                 தற்போது பல வசதிகள் பெருகிவிட்டாலும் அந்த குறுகிய பகுதியிலேயே மக்கள் வசித்து வருகின்றனர். அரசு செக்டார் திட்டம் என்ற பெயரில் மக்களை கடந்த சில வருடமாக அலைக்கழித்து வருகிறது. சர்வே என்ற பெயரில் ஒரு திட்டம் தீட்டுகிறார்கள். அதன் பிறகு அவர்களே தங்களின் திட்டங்களை திறும்ப பெற்றுகொண்டு மீண்டும் ஒரு சர்வே எடுக்கிறார்கள்,

                   தாராவியில் உள்ள படித்த பெண்கள் அனைவரும் இனைந்து வாழும் உரிமைகளை முழுமையாக பெற போராடவேண்டும், இன்று நமக்கு கிடைத்தது அவ்வளவுதான் என்று நாம் நினைத்து கொண்டிருக்கும் வகையில் அரசுகள் நமக்கு கிடைக்ககூடிய பல வசதிகளை திசைதிருப்பிவிடுகிறது. இதனால் யார் யாரோ பலன் அடைகிறார்கள். பெண்களினால் மாற்றங்களை கொண்டு வர முடியும் பெண்கள் தங்களின் வலிமைகளை வெளிப்படுத்த வேண்டும் மராட்டிய பெண்களை போல் தங்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை துணிச்சலுடன் எதிர்த்து தங்களது உரிமைகளை பிறர் தங்களுக்கு முன்னாலேயே அனுபவித்துவருவதை ஒரு காலும் விட்டு விடக்கூடாது.

                தாராவி தமிழர்கள் தங்களுடைய கூட்டு புழுவாழ்க்கையை உடைத்து பிறமக்களுடன் கலக்க வேண்டும் தங்களது பறிக்கபடும் உரிமைகள் பற்றி உலகிற்கு எடுத்துகாட்டவேண்டிய பணி உங்களுக்கு இருக்கிறது. மும்பை பல கலாச்சாரத்தை தன்னுள் எடுத்து கொண்டு இருக்கிறது. இங்கு ஒருவருக்கு துண்பம் என்றால் பலர் ஒன்று சேர்ந்து நிலையை மாற்ற முயற்சிப்பார்கள், முதலில் நாம் நிலையை பற்றி தனக்கு அருகில் உள்ளவர்களுக்காகவாது தெரிவிக்க வேண்டும் அதை விட்டு விட்டு தங்களுக்குள்ளேயே விவாதித்துகொண்டு விளம்பர பிரியர்களின் வலையில் விழுந்து அவர்களின் பிரிவினைபேச்சுக்கு உட்பட்டு தங்களுக்கு உள்ளேயே பிரிவினைகளை ஏற்படுத்தி வாழ்ந்துவருவதாலேயே இதுவரை தாராவியில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் வரவில்லை அப்படியே வந்தாலும் அது தமிழர்கள் அல்லாதா பிற மொழியினர் வசிக்கும்  தாராவி குடியிறுப்புகளில் என்பதையும் இங்கே குறிப்பிடுகிறேன் என மும்பை மாநராட்சி பத்திரிக்கையாளர் சங்க தலைவர் விஷ்னு சோனாவானே குறிப்பிட்டு இருந்தார்.



                முன்னிலை வகித்து பேசிய இணை தலைமை ஆட்சியாளர் திரு. சம்போதி பேசியதாவது “ தேவையில்லாத பகுதிகளை செழுமைபடுத்தி அவற்றில் குடியிருப்புகளை அமைத்து வசிப்பது தாராவி தமிழர்களின் சிறப்பியல்புகளாகும் ஆனால் பெரிய பெரிய பில்டர்கள் நன்னீர் குளங்களை எல்லாம் மண்மேடாக்கி அங்கு பிளாடுகளை போட்டு விற்பனை செய்துவருகின்றனர். இவற்றை அரசு கண்டு கொள்வதில்லை, மாறாக இவர்களின் திட்டங்களுக்கு எந்த ஒரு எதிர்விவாதமும் இல்லாமல் அனுமதி அளிப்பதும், ஏழைமக்களின் வீடுகளை வருடத்திற்கு ஒருமுறை இடித்து விரட்டுவதும் தேர்தல் வரும் போது அவர்களுக்கு வீடுகள் கட்டிதருவேன்  என்று ஆசை வார்த்தை கூறி அவர்களை ஏமாற்றுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. தாராவி மட்டுமல்ல மும்பை முழுவதுமே இதே போன்று ஒரு நிலை ஏற்பட்டுவருகிறது. இதை நாம் மாற்றி அமைக்க வேண்டும் நம் உரிமைகளை வாக்கு சீட்டின் மூலம் வெளிப்படுத்த வேண்டும், இந்த நாட்டில் வாழும்  மக்கள் அனைவரும் ஒரு குடியரசு தலைவருக்கு கிடைக்கும் அனைத்து உரிமைகளையும்  பெற்று வாழ வழிவகை உள்ளது.

              அதனால் தான் முதல் குடிமகன் என்று கூட நாம் ஜனாதிபதியை குறிப்பிடுகின்றோம். முதல் குடிமகன் என்றாலும் கடைசி குடிமகன் என்றாலும் உரிமைகள் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும், இங்கு அப்படி நடைபெறுவதில்லை, அதிகாரம் உள்ளவர்கள் அதிகாரம் இல்லாவர்களிடம் இருந்து பிடிங்கி வாழ்கின்றனர். இதை எதிர்த்து கேட்க துணிச்சல் இருந்தும் யாருக்கே நமக்கு கிடைத்து போதும் என்ற நிலையில் வாழ்கின்றனர். இவ்வாறு சம்போதி அவர்கள் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

                 இதனை அடுத்து பேசிய மும்பை பெண்கவிஞர் புதிய மாதவி அவர்கள் தாராவி பற்றிய தன்னுடைய எண்ணபாட்டை வெளிப்படுத்தி இருந்தார். அவர் கூறியதாவது “தாராவி என்னுடைய தாய் வீடு நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் தாராவியில் தான் அரசு வங்கியில் அதிகாரியாக பணியாற்றிய போதும் யாரும் என்னிடம் எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டால் நான் தைரியமாக நான் தாராவியில் இருக்கிறேன் என்று அப்போதே கூறி வந்தேன், தாராவி காந்தி கண்ட இந்தியாவின் நகரங்களில் மும்பையில் பல இடங்களில் பெண்கள் நடமாட முடியாது பாதுகாப்பற்ற தன்மை உண்டு ஆனால் தாராவியில் இரவு 12 மணிக்குகூட ஒரு பெண் அவசரதேவைக்கு கடைவீதிக்கு சென்றுவரமுடியும் அந்த அளவிற்கு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் தாராவி, தாராவியில் பெண்களுக்கு எதிரான வண்கொடுமைகள் பற்றி அவ்வளவாக கேள்வி பட்டதே இல்லை, வீடுகளுக்குள் ஏற்படும் பிரச்சனைகள் பல பத்திரிக்கைவாயிலாக அறிந்துகொண்ட போதும் இன்றுவரை தாராவியில் பொது இடத்தில் பெண்களுக்கு பிரச்சனைகள் வந்ததில்லை.

                    தாராவியில் எந்த இரு மத , சாதியினரும் ஒன்று கூடி கைகோர்த்து செல்வதை காணலாம், எனக்கு முன்பு பேசிய வக்கீல் ராசாமணி அவர்கள் கூறியது போல் தான் தாராவி தமிழர்களின் சமூக நல்லுரவு இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது” எனது தனது பேச்சில் குறிப்பிட்டு இருந்தார்இதனை அடுத்து பேசிய கே ஆர் மணி அவர்கள் தாராவியில் தமிழர்கள் குறித்து பல தகவல்களை ஐயா ராசாமணி அவர்களின் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்தது, இவரின் பதிவுகளை விரைவில் புத்தகமாக கொண்டு வரவேண்டும் என்று தனது எண்ணப்பாட்டை வெளிப்படுத்தினார்.

  விழாவின் இறுதி நேரத்தில் மரவன் புலவு க சச்சிதானந்தம் ஐயா அவர்கள் வருகை தந்து சிறப்பித்திருந்தார்.

இறுதி நேரமாகையால் அவரும் அவருடன் வந்திருந்த ஐயா உலகதமிழர்பேரவை செயளாளர் பத்மநாபன் அவர்களுன் அதிகம் உரைநிகழ்த்த முடியவில்லை


ஏற்புரையின் போது நூலாசிரியர் சரவணா ராஜேந்திரன் கூறியதாவது “ மதுரையில் பள்ளி இறுதியாண்டுகள் படித்துவிட்டு கல்லூரிபடிப்பிற்காக மும்பை வந்தேன். மும்பையில் இந்தி மற்றும் மராட்டி மொழி புதிதாக தெரிந்தாலும் உள்ளத்தில் உற்சாகமேற்று பயின்றதன் காரணமாக மராட்டி மொழியில் கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் ஆண்டே நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தேன். இந்த உற்சாக மராட்டிய மொழியில் உள்ள பல செய்திகளை தமிழில் மொழி பெயர்க்கும் ஆவலை என்னிடம் சேர்த்தது.கல்லூரி வாழ்க்கை  முடிந்ததும் மும்பை தமிழ் டைம்ஸில் கட்டுரைகள் எழுதிவந்ததேன். 1999-முதல் இணையங்களில் எழுதும் பழக்கம் ஏற்பட்டது, தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதிவந்த போது பல பெரியவர்களின் நட்புறவு கிடைத்தது. அப்படி கிடைத்த நட்பின் காரணமாக திரு மணி அவர்களின் அறிமுகம், நான் அலுவல் காரணமாக வட நாடு சென்றபோதஎனக்கு கிடைத்த ஒரு பாடத்தின் மூலம் இமயத்தில் உள்ள அமர்நாத் என்ற குகை பனிலிங்க கோவிலுக்கு செல்லும் ஆர்வம் மிகுந்தது . மண்ணில் இருந்து வின் நோக்கிய அந்த அற்புதமான திகில் மிகுந்த ஆன்மீக பயணம் பல ஆண்டுகளாக கட்டுரைகள் எழுதி வந்த எனக்கு ஒரு பயண புத்தகம் எழுதும் ஆர்வத்தை தூண்டியது. திரு மணி அவர்களின் மூலம் கிழக்கு பதிப்பகத்தின் நிறுவனர் பத்ரிசார் அவர்களின் நட்பு கிடைத்தும் எனது அமர்நாத் யாத்திரை புத்தக வடிவம் பெற்றது.



2008-ம் ஆண்டு அமர் நாத் யாத்திரை புத்தக வடிவில் வந்தது. இந்த இடைவெளியில் நான்  வருடங்களாக பணிபுரிந்து வந்த பிரிட்டீஸ் பெட்ரோலியம் நிறுவன பணியை துறந்து முழுநேர பத்திரிக்கையாளனாக மாறினேன். இந்த நிலையில் தான் மும்பை தாக்குதல் நடைபெற அந்த தாக்குதல் முழு புத்தகமாக கொண்டுவரும் எண்ணத்திற்கு பத்ரி சார் அவர்கள் வழிவகுத்தார், கிழக்குபதிப்பததின் தலைமை நூலாசிரியரும் பிரபல எழுத்தாளருமான திரு.பா ராகவன் சார் அவர்களின் உதவியுடன், பத்திரிக்கைகளை வாரபத்திரிக்கைகளில் பல அரசியல் கட்டுரைகள் , அரசியல் தலைப்பில் பல நூல்கள் எழுதிய திரு முத்துகுமார் அவர்களின் ஆலோசனையின் பேரில் பல தலைப்புகளில் புத்தகங்கள் எழுதிகொண்டு இருக்கிறேன். அந்த சங்கிலி தொடரில் ஆரம்ப நூல்கள் தான் சிவசேனா, உங்கள் கைகளில் தவழும் தாராவி. எழுத எழுந்த ஆர்வம் பல ஆயிரம் கிலோ மீட்டர் கடந்தும் ஒரு குட்டிதமிழகமாக மாறியதுதான். இதுவரை தாராவி பற்றி பல கட்டுரைகள் வந்தாலும் முழுவடிவமாக அதை பற்றி ஒரு பதிவு வெளியானதில்லை, இந்த குறையை தீர்த்துவைக்கும் நோக்கத்தில் வெளியானதுதான் இந்த தாராவி, தராவி பற்றி எழுதும் போது தாராவி மட்டுமல்ல நெல்லை, பூனா, போன்ற நகரங்களுக்கு சென்று தாராவி பற்றிய பல தகவல்களை திரட்டி எழுதி அதை முழுவடிவம் கொடுத்து எழுதியது மட்டுமல்லாமால் ஆதாரமாக மாநகர ஆவனங்கள், மற்றும் வரலாற்று புத்தகங்கள் வாயிலாக கொண்டு சேர்த்து கோர்வையாக எழுதியத்தான் இந்த தாராவி புத்தகம். புத்தகத்தை பற்றி பலர் குறிப்பிடும் போது எனது உள்ளம் நிறைவடைகிறது. இன்னும் பல தகவல்களை சேர்த்து விரைவில் தாராவி இரண்டு என்ற புத்தகம் வெளியிடுவேன் என்று கூறிகொண்டு இந்த புத்தக அறிமுக விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்த ஜெரிமேரி தமிழ் சங்க செயலாளர் திரு தமிழ் நேசன் அவர்களுக்கும், வருகை தந்த மரவன் புலவு சச்சிதானந்தம் அவர்களுக்கும், உலகதமிழர் பேரவை செயளாளர் திரு பத்மநாபன் ஐயா அவர்களுக்கும், ஜெரிமேரி தமிழ் சங்க நன்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை கூறிக்கொண்டு எனது பேச்சை முடிக்கிறேன். நன்றி வணக்கம்



                விழாவிற்கு ஜெரிமேரி சங்க தலைவர் வின்செண்ட் பால், தாராவி குறும்பட தயாரிப்பாளர் மதியழகன் சுப்பையா, ஜெரிமெரி தமிழ் சங்க தலைவர் கோ.சினிவாசகம், துணைத்தலைவர் இல முருகன், கவிஞர் கிங்பெல்,முன்னாள் செயலாளர் ஜெரிமேரி தமிழ்சங்கம் திரு ஓ.எம் காதார், தமிழ் காப்போம் இயக்க செயலாளர் இறை.ச.ராஜேந்திரன், கவிஞர் வழக்கறிஞர் பூலாங்குளம் ஜே.சுகுமாரன், ஜெரிமேரி தமிழ் சங்க முன்னாள் தலைவர் எஸ் லட்சுமனன், தமிழ் காப்போம் இயக்க பொருளாளர் திரு ப அந்தோணி , தமிழ் காப்போம் துணைசெயலாளர் திரு பால்வண்ணன் மற்றும் தமிழ் அறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் லக்‌ஷ்மி புத்திரன்,மூத்த பத்திரிக்கையாளர் சந்திரகாந்த் மகாதேவ் லிங்காயத், பத்திரிக்கையாளர் ஆசிப் அலி  பத்திரிக்கை அன்பர்கள்  பெரும் திரளாக வந்திருந்து தாராவி நூல் அறிமுகவிழாவில் கலந்துகொண்டனர்.






உலக தமிழர் பேரவை செயளாளர் திரு பத்மநாபன் அவர்களுடன் மும்பை மாநகராட்சி பத்திரிக்கையாளர் சங்கதலைவர் விஷ்னு சோனாவானே

   மும்பை மாவட்ட இணை ஆட்சியாளர் திரு சம்போதி காக்டே அவர்களுடன் மரவன் புலவு சச்சிதானந்தம்
   மொழி தெரியாவிட்டாலும் எனது அழைப்பை ஏற்று நிகழ்ச்சிக்கு ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் வாழ்த்துரை வழங்கிய மும்பை மாநகராட்சி பத்திரிக்கையாளர் சங்க தலவர் திரு விஷ்னு சோனாவானே

18 நவ., 2009

தாராவி புத்தக அறிமுக விழா.



அன்புடையீர் வரும் 22/11/09 ஞாயிறு அன்று மும்பையில் உள்ள ஜெரிமெரி தமிழ் சங்கத்தில் சரவணா ராஜெந்திரன் எழுதிய தாராவி தமிழ் புத்தக அறிமுக விழா நடைபெற இருக்கிறது.

   மும்பையில் உள்ள அன்பர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
  தமிழ்பிரஸ் இன்போ மும்பை
மும்பையில் உள்ள தமிழ்   எழுத்துலக பிரமுகர்களுடன்
சிறப்பு விருந்தினராக
Mr.Vishnu Sonavane
Chief of Municipal corporation of Greater mumbai Press Club

Mr. Abbas
Zee News Political editor

Mr.Dharmendra Jore
Hindustan times Editorial
Dy Chief of political bureau

Madam. Neha Parek
Times Group

Ashif ali
MCGM Correspondent
Uttar bhumi (hindi News Paper)

Madam. Ajanta vave
editor  Lakshdeep Marathi news paper

Arun
Lokmat Marathi News paper

Sashi
Mantralya press club (Govt of Maharashtra)

Mr. Sambothi
jay bharat


ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.

7 நவ., 2009

முடிவுக்கு வந்த தெருக்கூத்து



மராட்டிய மாநிலத்தில் கடந்த 15 நாட்களாக நடந்து வந்த உனக்கு எத்தனை எனக்கு இத்தனை என்ற தெருக்கூத்து அரசியல் நாடகம் இன்று கவர்னரிடம் எம் எல் ஏக்கள் ஆதரவு கடிதம் கொடுத்தவுடன் முடிவிற்கு வந்தது. வெள்ளிகிழமை மாலை சரியாக 5:20 மணி அளவில் முதல் மந்திரி அசோக்சவான், துணைமுதல் மந்திரி சஜன் புஜ்பால், காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் மாணிக்ராவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஆர் ஆர் பாட்டில் மற்றும் மும்பை பிரதேச காங் தலைவர் கிருபா சங்கர் சிங் மற்றும் பெரிய தலைவர்கள் புடைசூழ கவர்னர் மாளிகைக்கு சென்றனர். கவர்னர் மாளிகையில் கவர்னர் எஸ் சீ சமீரை சந்தித்து கூட்டனி எம் எல் ஏக்களில் 144 உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கும் கடிதத்தை முதல் மந்திரி அசோக் சவான் வழங்கினார்.  கவர்னரை சந்தித்துவிட்டு வெளியே வந்த முதல் மந்திரி அசோக்சவான் மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டனிக்கு அழைப்புவிடுமாறு கூறினோம். கூட்டனியின் 144 எம் எல் ஏக்கள் மற்றும் சுயோட்சைகளின் ஆதரவு கடிதங்களை கவர்னரிடம் தந்து இருக்கிறோம் எங்களுக்கு 170 எம் எல் ஏக்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
நாளை மாலை ஆட்சி கட்டிலில் அமர்வோம் என்றார்.





 தேசியவாத காங்கிரஸிற்கு உள்த்துறை மந்திரி பதவி சென்று உள்ளது என தெரிகிறது. நிதி அர்பன் டிவிலோப்மெண்ட் சாலை மேம்பாட்டு போன்ற முக்கியதுறைகளும் தேசியவாத காங்கிரஸ் பெற்று உள்ளதாக தெரிகிறது. இன்று மாலை டில்லி சென்ற அசோக்சவான் 2009 புதிய பார்முலாவை உறுவாக்கினோம் என்று கூறினார். ஆனால் மும்பையில் சற்று நேரத்திற்கு முன்பு பேசிய சஜன் புஜ்பால் 1999 பார்முலேவே பின்பற்ற பட்டுள்ளது என்றும் 23-20 என்பது அவர்கள் சொல்கிறார்கள். இருப்பினும் நாங்கள் கேட்ட துறைகள் எங்களுக்கு கிடைத்துவிட்டது என்றார்.
இது மராட்டியத்தின் வளர்ச்சியில் எங்கள் பங்கை அதிகரிக்கவே அன்றி எதிர்கட்சியினர் சொல்வது போல் தனிப்பட்ட முறையில் ஆதாயம் பெறுவதற்காக இல்லை என்றார்

பா எல்லாம் இருந்தும் தவமிருந்து பெற்ற குழந்தையால் நிம்மதி இழந்து தவிக்கும் தந்தையின் கதை


 அப்”””பா ”””   எல்லொரும் எதிர்பார்ப்பது போல் இது ஹாலிவுட்டில் இருந்து திருடபட்ட கதை அல்ல, நம்மை சுற்றி நிகழும் நிகழ்வை படம் பிடித்து தர முயன்றிருகின்றார்கள்.
கதை வெளியானதற்கும் தமிழ் பிரஸ் இன்போவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இதற்காக தமிழ் பிரஸ் இன்போ மும்பை பொருப்பேற்காது என்றும் இது பிளாக்கர்ஸ் சட்டவிதிப்படி பதிக்கபட்டது என்பதையும் இங்கு தெரிவித்து கொள்கிறோம்
தமிழ் பிரஸ் இன்போ-மும்பை
02225463659


                     சிறுவயதில் நாம் நம்முடன் பள்ளிக்கூடங்களில் படிக்கும் சில ஊனமுற்ற சிறுவர்களை கண்டிருக்கிறோம் ஆனால் இவற்றில் சில ஊனங்கள் வித்தியாசமானவைகளாக இருக்கும். ஆம் நன்றாக பார்ப்பதற்கு தோற்றமளிப்பார் ஆனால் கடுமையான மன நோயாளியாக இருப்பார். குருடு, செவிடு, முடம் போன்றவற்றை விட வித்தியாசமான ஊனமுற்றோர்களை நாம் பார்த்திருக்கிறோம்.
                   
                     அதில் உள்ள ஒற்றுமை என்ன வென்றால் இந்த வித்தியாசமான வர்கள் அனைவரும் பெரிய பிரபல் வழக்கறிஞர்கள், போலீஸ் அதிகாரிகள், மற்றும் அதிகார பலம் வாய்ந்த அதிகாரிகளின்  குழந்தைகளாக இருப்பதுதான். நம்முல் பலர் சொல்ல கேட்டு இருக்கிறோம் எத்தனை பேரின் வாயில் விழுந்தானோ அதுதான் அந்த சாபம் தான் இப்படி குழந்தையாக பிறந்து இருக்கிறது என்பார்கள்.
                     கதை இந்த வரியை மையமாக வைத்துதான் நகர்கிறது. நகரின் சுமாரான பிரபலமான ஒருவர் சில வருடங்களிலெயே பெரும் பணக்காராக மாறிவிடுகிறார். பிறகு அரசியலில் நுழைய அவருக்கு செல்வம் நான்கு புறம் இருந்தும் கொட்ட ஆரம்பிக்கிறது. வாழ்க்கை மகிழ்ச்சி என்னும் கடலில் ஆனந்தமாக போய்க்கொண்டு இருக்கும் போது ஆனந்ததிற்கே மகுடம் சூட்டும் சம்பவம் போல் பிரபலத்தின் மனைவி கருத்தரிக்கிறாள். 10 மாதமும் சந்தொசம் வெட்கம் பூரிப்பு என சென்று கொண்டிருந்த நாட்கள் ஆண்குழந்தை ஒன்றை பெற்றெடுக்கும் வரை நீடிக்கிறது. குழந்தை பிற குழந்தைகளைவிட பிறக்கும் போதே வயதான தோற்றத்தில் பிறந்து விடுகிறது. வீட்டில் அன்றில் இருந்து நிம்மதி இழந்து தவிக்கின்றனர். அபிசேக் குழந்தையின் தந்தையாக நடித்து இருக்கிறார். அமிதாப் பச்சன் 13 வயது பொரோகிரியாவால் பாதிக்கபட்ட குழந்தையாக நடித்து இருக்கிறார்.
                            பரேஸ் ராவல் அபிசேக்கின் உதவியாளர் இவர் மூலம் குழந்தையை எங்கேயாவது போட்டு விட்டு வாருங்கள் என்று கூறுகிறார். ஆனால் குழந்தையின் அன்னை வித்யா பாலன் குழந்தையை இறுதிவரை வளர்க்க உறுதிபூண்டு குழந்தையின் எதிர்காலத்திற்காக தனது வாழ்க்கையை மாற்றி அமைக்கிறார். இறுதியில்ம் அபிசேக்கும் மனம் திருந்தி குழந்தையின் எதிர்காலத்திற்காக இருவருமாக சேர்ந்து மருத்துவம், மற்றும் இது போன்ற நோயால் பாதிக்கபட்ட குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பாடுபடுகின்றனர்.
இசை இளையராஜா இவரது இசையில்(சீனி கம்) லயித்த அமிதாப் அப்”””பா””” வில் நீங்கள் தான் இசை அமைக்கவேண்டும் என்று கேட்டுகொண்டதற்கு இனங்க சிறப்பாக இசை அமைத்துள்ளார்.



6 நவ., 2009

சூடு போட்ட பிறகு சுறுசுறுப்பான மும்பை போலீசார்

                                    மும்பை போலீஸ் தாராவி சிறுவனின் விசயத்தில் மட்டும் தாமதமாக ந்டவடிக்கை எடுத்தது என்று நினைக்க வேண்டாம், வருடக்கணக்கில் காணாமல்போன குழந்தையை மும்பை உயர் நீதி மன்றத்தின் திட்டு கிடைத்த உடன் 6 நாட்களுக்குள் கண்டுபிடித்து கொடுத்த தமாஸும் நடந்து இருக்கிறது.


                                மும்பை புறநகர் உல்லாஸ் நகரில் வசித்து வருபவர் பிரிதி சூக், 26 இவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றும் 5 வயது ஆண்குழந்தையுடன் வசித்து வருகிறார். கடந்த வருடம் குழந்தையை பார்கவேண்டும் மும்பை ஹாஜி அலில் பார்க்கிற்கு வா என்று அவரது  முன்னாள் கணவர் கூறியவுடன், கோர்ட்டின் உத்தரவின் படியும் குழந்தையை அழைத்து சென்றார். ஹாஜி அலி பார்க்கில் குழந்தையுடன் சிறிது நேரம்  பேசிக்கொண்டு இருப்பது போல் இருந்த அவரது முன்னாள் கணவர் திடிரென குழந்தையை தூக்கி கொண்டு காரில் சென்றுவிட்டார். சில விநாடிகளில் நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த பிரிதி மஹாலட்சுமி போலீஸில் புகார் செய்தார், போலீசார் அந்த புகாரை பெற்றுகொள்ள மறுத்து கொஞ்ச நாள் குழந்தை அவரது அப்பாவிடமும் இருக்கட்டுமே என்று சமாதானம் பேச முயன்றனர்.










                          இதனை அடுத்து உல்லாஸ்நகர் போலீஸில் புகார் செய்தார். உல்லாஸ்நகர் போலீசார் முதலில் புகாரை ஏற்க மறுத்து சமாதானம் பேச முயன்றனர். ஆனால் பிரிதி தன் நிலையில் பிடிவாதமாக இருந்ததால், குழந்தை காணாமல் போனதாக எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். அதன் பிறகு தான் பிரச்சனை தொடங்கியது. கணவரும் அவர்களது உறவினர்களும் போனிலும் நேரிலும் மிரட்ட துவங்கினர். பிரிதி பல முறை இது குறித்து புகார் கூறியும் பலனில்லை. போலீசார் குழந்தை வெளிநாடு சென்று விட்டது என்றுவேறு சப்பை காரணம் சொல்லி இருக்கிறது. இந்த சம்பவத்தால் போலீசாரின் மீது நம்பிக்கை இழந்து மும்பை உயர் நீதி மன்றத்தை அனுகினார். பிரிதியின் புகாரை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் போலீஸ் உயரதிகாரியை நேராக கோர்ட்டிற்கு வரவழைத்து 11 மாதங்களாக குழந்தையை கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் குழந்தையின் தாயிடம் எங்களால் குழந்தையை கண்டுபிடிக்க முடியாது மன்னித்து விடுங்கள் என்று எழுதி கொடுக்க வேண்டியதுதானே என்று காட்டமாக உத்தரவிட சூடு வாங்கி கொண்ட போலீஸ் அடுத்த 7 வது நாளே குழந்தையை கண்டு பிடித்து கோர்ட்டின் மூலம் தாயாரிடம் ஒப்படைத்து.


PIC-மராட்டிய மாநில தலைமை காவல்த்துறை அதிகாரி எ என் ராய், மும்பை காவல்துறை ஆனையர் டி சிவானந்தம்

சனிக்கிழமை நல்ல முக்கூர்த்தம் இழுபறி முடிவிற்கு வந்தது





            முழுமையான வெற்றி யாரிடமும் ஆதரவு கொடு என்று தொங்கவேண்டிய அவசியம் இல்லை, ஒன்றாக இனைந்து 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த கூட்டனி ஆனால் மந்திரி பதவிகளில் இந்த முறை நீயா நானா, ஆரம்பித்து வைத்தவர் வேறு யாரும் அல்ல மாநில முதல் மந்திரி, டில்லியில் அசோக்சவான் மராட்டிய மாநில முதல் மந்திரி என அறிவிக்கபட்டது, அவர் பத்திரிக்கையாளர்களிடன் கொடுத்த பேட்டியில் ” இம்முறை நாங் கள் அதிக இடத்தில் வெற்றி பெற்றுவிட்டோம், அதனால் எங்களுக்கு உள்த்துறை மற்றும் சில முக்கியமான மந்திரி பதவிகளை எடுத்துகொள்வோம் என ஸ்டேட்மெண்ட் விட விடயம் சூடு பிடித்து, டில்லியில் கொடுத்த இந்த பேட்டியின் எதிர்வினை மும்பையில் துணைமுதல் மந்திரி தேர்தெடுக்கும் போது தெரிந்தது, உள்த்துறை தேசியவாத காங்கிரஸ் 10 வருடங்களாக தன்னிடம் வைத்துள்ளது. இரண்டு முறை காங்கிரசை விட அதிக இடம் கிடைத்தும் முதல் மந்திரி பதவியை விட்டு கொடுத்த தேசிய வாத காங்கிரஸ் முதல் மந்திரியின் இந்த பேச்சால் கோபமுற்றது, விளைவு 15 நாட்களாக இன்னும் ஆட்சியில் அமர முடியவில்லை. காங்கிரஸ் தேசியவாத காங்கிரசின் குடுமி பிடி சண்டையில் தோல்வியில் துவண்டு இருந்து ஜய ஜய கோஷ்டிகளும்(காவிகளுக்கு) உற்சாகத்தை அளித்துவிட்டது. தங்களுடைய கடமையை லேட்டாக புரிந்து கொண்ட காவிகள்(சிவசேனா-பாரதிய ஜனதா) நேற்று மாநில கவர்னர் எஸ்.சி சமீரை சந்தித்து மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும் என்று முறையிட்டது. இது எதிர்கட்சிகளின் கடமையும் கூட் எதிர்கட்சிகளின் கோரிக்கையை பரிசீலித்த கவர்னர் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் இரண்டிற்கும் 48 மணிநேர கெடு கொடுத்து அதற்கு ஆட்சி அமைக்க முன்வராவிட்டால் சட்ட ரீதியாக அனுகப்படும் என்று அறிக்கை விடுத்ததும். இரண்டு கட்சிகளும் தாமதமாக உணர்ந்து கொண்டது இரண்டு கட்சிகளும் இன்னும் தங்களுக்குள் சமாதானமாகவில்லை இருப்பினும் நிலமை கைமீறி செல்கிறது. பிரபுல் பாட்டீல் நாங்கள் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் என்று அறிக்கைவிட்டார். 1999 பார்முலாவே பின்பற்றபடும் என்று அறிக்கைவிட்டார்.  சனிக்கிழமை காலை 11 மணி அளவில் விதான் பவனில் பதவி ஏற்புவிழா நடைபெறும் என்று தெரிகிறது. இந்த நிலையில் டில்லியில் இன்னும் விவாதம் முடிவடைந்ததாக தெரியவில்லை பிரபா ராவ், விலாஸ்ராவ் தேஷ்முக், நாராயன் ரானே மற்றும் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோருடன்  சோனியா காந்தி ஏ கே அண்டோனி ஆலோசனை நடத்தினார். தேசிய வாத காங்கிரசார் பிடிவாதத்தை குறைப்பதாக தெரியவில்லை நிலமை மீறி போவதை கண்ட சோனியா தேசியவாத காங்கிரசார் கேட்கும் மந்திரி பதவியில் இரண்டை விட்டு கொடுத்து இருக்கிறார். நகர்புற மற்றும் கிராம வளர்ச்சித்துறை, மற்றும் நெடுஞ்சாலைத்துறை போன்றவைகள் தேசியவாத காங்கிரசிடமே இருக்கபோகிறது. உள்ததுறை மட்டும் காங்கிரசார் வசம் இருக்கபோவதாக தெரிகிறது, நேற்று மும்பை வந்த அசோக்சவானும் இதை உறுதி படுத்தியது போல் தெரிகிறது, இந்த நிலையில் காங்கிரசில் மந்திரி பதவிக்கு காத்திருந்த சிலரை சமாதான படுத்த வேண்டி இருப்பதால் காங்கிரஸ் மந்திரிகள் இரண்டு பாகமாக பங்கேற்பார்கள் என்றும் தேசியவாத காங்கிரசார் ஒரே நேரத்தில் பதவி ஏற்பார்கள் என்றும் தகவல் வருகிறது. இன்று(வ்ள்ளி)மாலை  5 மணி அளவில் அசோக்சவான் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க கடிதம் வழங்குவார். இருந்த போது டில்லி நிலமை இன்னும்  சீராகவில்லை என்றே தெரிகிறது. வரும் நாட்களில் தேசிய வாதகாங்கிரசிற்குள்ளும் காங்கிரஸிற்குள்ளும் புகைச்சல் வரும் என்றே தெரிகிறது.

BEST ALWAYS BEST


               மும்பை மாநகரின் உயிரோட்டத்திற்கு புறநகர் ரெயில் மற்றும் உள்ளூர் பேருந்து இரண்டும் முக்கிய காரணியாக அமைகின்றன. மும்பை மாநகர பேருந்து நிர்வாகம் மும்பை மாநகராட்சியின் கீழ் இயங்மும் மும்பை மாநகர் மின்சார விநியோகம் மற்றும் போக்குவரத்து கழகமாகும். (இதை தான் சுறுக்கமாக Bombay electric sublay and transport) BEST  இதன் வருடாந்திர பட்ஜெட் உலகின் முக்கிய பேருந்து கழக பட்ஜெட்டுகளில் ஒன்றாகும். சுமார் 100 கோடிபெருமான பட்ஜெட் அமுலாக்கும் நிறுவனமான பெஸ்ட் 2010 ஆண்டிற்கான பட்ஜெட்டை நெற்று வெளியிட்டது. பேரூந்து கட்டண உயர்வு இல்லை, இது இந்த பட்ஜெட்டின் ஹைலைட்டாகும், மேலும் மும்பை தூரப்புறநகரான தகிசரில் இருந்து சர்ச் கேட்வரை எக்ஸ்பிரஸ் பஸ் அறிமுக படுத்தி இருக்கிறது. அடிக்கடி நடக்கும் ரெயில் விபத்து மற்றும் தீவிரவாத தாக்குதல் போன்ற காரணங்களால் பெஸ்ட் பஸ்ஸிற்கு சுமார் 8 புதிய பயணிகள் கிடைத்து இருக்கின்றனர். கடந்த வருடம் மட்டும் 60க்கும் மேற்பட்ட புதிய வழித்தடங்கள் விடப்பட்டு இருக்கின்றன. 80 கோடிக்கான பட்ஜெட் அறிக்கையை வெளியிட்டு பேசிய பெஸ்ட் கமிசனர் கோபர்கடே பெஸ்ட் பஸ்களின் தரம் மற்றும் சேவையால் பயணிகளின் வரத்து அதிகமாகி இருக்கிறது. 2005-ற் முன்பு இருந்த மந்தமான நிலை மாறி கடந்த 3 வருடமாக பெஸ்ட் லாபகரமாக மாறிவுள்ளது இதன் காரனமாக பயணிகளுக்கு பல வசதிகள் செய்து கொடுத்து இருக்கிறோம். மோனோ ரயில் மற்றும், மெட்ரோ ரெயில் வந்தால்  பெஸ்ட் சேவை பாதிக்கபடுமா என்ற கேள்விக்கு “ மோனோ ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் சேவை துவங்கினால் அதன் ஆரம்ப இடத்தில் இருந்து பல பேருந்துகள் விடவும் எங்களிடம் திட்டம் இருக்கிறது. இதன் மூலம் இரண்டு நிறுவனங்களுமே நல்ல பயன்பெறும் என்றார். மேலும் பெஸ்ட் பஸ்களுக்கான சிறப்பு வழித்தடம் நெடுங்சாலைகளில் அமைக்கப்படுவது குறித்து அவர் பேசுகையில் இதன் மூலம் தூரித சேவை, டிராபிக்கில் சிக்காமல் செல்வது, மற்றும் விபத்து போன்றவற்றை தவிர்க்க முடியும், என்றார்.
கனடாவில் உள்ளது போல் நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய பேருந்து அடுத்த வருடத்தில் இருந்து விடப்படும் என்றும் குறைந்த தூரம் செல்லக்கூடிய இந்த பேரூந்து விரைவில் சோதனை ஓட்டம் விடப்டும் என்றும் இந்த பேரூந்தை தனியார் நிர்வாகிப்பார்கள் என்றும் கூறினார். நகரில் பல இடங்களில் மின்சாரம் திருட்டு அதிகரித்து இருப்பதாகவும் இதை கட்டுபடுத்த மூன்று சிறப்பு குழுக்கள் அமைக்கபடும் என்று கூறினார்.
கடந்த 4 வருடமாக பெஸ்ட் பேருந்துகளில் விலை ஏற்றபடவில்லை என்பதும் இங்கே குறிப்பிடதக்கது.
மேலதிக தகவலுக்கு பெஸ்ட்டின் இணையதளத்தை பார்வையிடவும் http://www.bestundertaking.com







தமிழ் பிரஸ் இன்போ கார்பரேட் விங்
TPI-Mumbai 
09029512535    

5 நவ., 2009

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்



 கடந்த வாரம் மும்பை தாராவியில் தமிழ் சிறுவன் அந்த பகுதியில் வாழும் இளைஞர் ஒருவரால் பாலியல் வண்முறைக்கு உள்ளானது அனைவருக்கும் தெரிந்ததே, காலை 10 30 மணி அளவில் அந்த சிறுவனின் பெற்றோர்கள் தாராவி போலீசில் புகார் கூறி உள்ளனர். முதலில் எப் ஐ ஆர் கூட பதிவு செய்யாமல் குற்றமிழைத்த இளைஞனை அழைத்துவந்து பேச்சுக்கு மிரட்டி விட்டு லாக்கப்பில் கூட வைக்காமல் அங்கிருந்த அமர் பலகையில் அமரவைத்துவிட்டு அதிகாரி வரம்பில் உள்ள ஒருவர் ரவுண்டிற்கு சென்றுவிட்டார். அந்த பகுதியில் உள்ள சில பெரித தலைகள் வந்து காவலர்களிடம் கொடுக்கால் வாங்கல் செய்ய சிறுவனின் பெற்றோரை அழைத்து சமாதானம் பேசி இருக்கிறார்கள். சிறுவனின் அன்னையின் சகோதரர் அந்த பகுதியில் உள்ள தமிழ் பெரிய மனிதர்களிடம் செல்ல (தேர்தல் தான் முடிந்து விட்டதே) நான் அந்த வேலையில் பிசி, எனக்குதெரிந்த போலீஸ் ஆபீசர் ஊரில் இல்லை என்று மழுப்பலான பதில் சொல்லி நழுவிட்டனர். மாலை 3 மணிவரை எப் ஐ ஆர் பதியவே இல்லை, முதல் மந்திரி பிறந்தநாள் விழாவிற்கு சென்று கொண்டிருந்த எனக்கு திரு செந்தில் போன் செய்தார். இப்படி பிரச்சனை சரவணா போலீசார் எப் ஐ ஆர் பதிவு செய்யாமல் சமாதானமாக போக சொல்கிறார்கள் நேரம் ஆக ஆக மிரட்டவும் செய்கிறார்கள், குற்றவாளியை இன்னும் விசாரிக்க கூட இல்லை, என்றார்.

                       முதலில் எனக்கு தெரிந்த கிரைம் பத்திரிக்கையாளர்களிடம் இது குறித்து பேசினேன். பிரபல மாலை பத்திரிக்கை ஒன்று நேரடியாக தாராவி போலீஸ் ஸ்டேசனில் பேச செய்தி எப்படி பத்திரிக்கை நிருபர்களுக்கு சென்றது என்று மீண்டும் மிரட்டல் விட நேரம் இரவு 9 ஆகிவிட்டது அப்பொழுது கூட எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் இருக்கவும், மேலிடத்தில் சொல்வதை தவிர வேறுவழியில்லாமல் போய் விட்டது.

                 மேலிடத்தில் இருந்து இது குறித்து கேட்டவுடன் இரவு காவல் உயரதிகாரி குற்றவாளி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளார். அதாவது புகார் கூறிய 18 மணிநேரம் கழித்து,,,,,,,, மறுநாள் மும்பையில் உள்ள அத்தனை பத்திரிக்கையிலும் இந்தி, ஆங்கிலம், மராட்டி,குஜராத்தி) . சிறுவனுக்கு நடந்த கொடுமைபற்றி செய்திகள் வர தாராவி காவல் நிலையம் தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டது,  இரவு முழுவதும் ஏன் சிறுவனையும் அவரது தந்தையையும் காவல் நிலையத்தில்வைத்திருந்தீர்கள் என்று கேட்டதற்கு பகலில் உள்ள அதிகாரி பதில் சொல்வார் என்று சொல்லிவிட்டார்.
             
                         காலையில் முக்கிய டெலிவிசன் சேனல்கள் தாராவி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட பையனிடம் நேரடியாக பேட்டி அளிக்க கூடாது என்று நினைப்பில் தாராவி போலீசார் சிறுவனை நாக்பாடா போலீஸ் மருத்துவமனைக்கு சிறுவனை பரிசோதனைக்கு கொண்டு சென்று விட்டார்கள். இறுதியாக குற்றவாளி நவம்பர் 2 தேதிவரை போலீஸ் காவலில் அடைக்கபட்டார்.குற்றவாளி இந்த மாநிலத்தை  சேர்ந்தவர் என்பதால் போலீசார் கொஞ்சம் தளர்வாகவே இருந்தனர். தற்போது குற்றவாளி போலீஸ் ரிமாண்ட் முடிந்து டோம்பிவிலி சிறையில் அடைக்கபட்டுள்ளார். அந்த பகுதியில் உள்ள சில சமூக சேவை நிறுவனங்கள் பாதிக்கபட்ட சிறுவனின் பெற்றோர்களிடன் சமாதானம் பேச முயன்றனர்.

குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுக்கவேண்டும் என்ற நோக்கமல்ல இனி மேலும் யாரும் தமிழர் மீது கைவைக்க சிந்திக்க வேண்டும் என்பதும் இனிமேலும் இது போன்ற குற்றங்களை செய்யும் முன்பு குற்றவாளி சட்டத்தின் மீது பயப்படவேண்டும் என்பதே எமது நோக்கம்.

சிறுவன் சிறிது பயந்தது போல் காணப்படுகிறான்,
சிறுவனின் பெற்றோர்கள் 3 நாட்கள் மும்பை சயான் மருத்துவமனையில் வைத்திருந்தார்கள். இதனால் நஷ்ட ஈடு கேட்கலாம் என்று தெரிந்த வழக்கறிஞர்களிடன் ஆலோசனை கேட்டு இருக்கிறேன்.

செய்தி ஒலிபரப்பான சேனல் கள்
Zee TV, AJ Tak, E Tv (marathi) Star News, News 24, Zee 24 thaas (Marathi)



21-year-old school dropout held for sodomising boy in Matunga

Thursday, October 29, 2009 2:19 IST


Mumbai: Officers of the Shahu Nagar police station have arrested a 21-year-old school dropout on Wednesday for allegedly sodomising a six-year-old boy at Matunga Labour Camp.
click here

Senthil Kumar, 32, the victim's uncle, said, "My nephew is a Std I student in a Bandra school. On October 26, he told his mother [Kavita] that he wanted to reveal something important if she did not scold or beat him. After his mother assured him, the boy revealed that their neighbour Nikesh Balid took him to his home in the afternoon four days ago on the pretext of playing games and sodomised him," said Kumar.

The victim's parents then lodged a complaint with the Shahu Nagar police against Nikesh on Tuesday, said Kumar. "We have arrested Balid on Tuesday. He was booked under sections 377 (unnatural offences) and 504 (intentional insult with intent to provoke breach of the peace) of the IPC," said senior inspector Waman Ghadigaonkar.

Incidentally, when the victim's father Kalidas went to the police station along with the boy to lodge complaint around 11.30 am on Tuesday, they were asked to sit at the police station throughout the day and also spent entire night in the police station. On Wednesday morning, the victim was sent to Nagpada police hospital for medical check-up.

Senior inspector Ghadigaonkar refused to comment on the matter.








4 நவ., 2009

விடியாத இரவுகள்












செவ்வாய் 3/11   காலை மிகவும் பரபரப்பாக துவங்கியது. டில்லியில் சோனியா சரத்பவார் இடையே நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து விட்டதாகவும், இன்று  மாலைக்குள் அசோக்சவான், மற்றும் சஜன் புஜ்பால் முதலில் பதவி ஏற்பார்கள் பிறகு மற்றவர்கள் ஏற்பார்கள் என்றே யாரோ பி டி ஐ க்கு போட்டு கொடுக்க அதன் காரணமாக இரவில் செய்தி அனைத்து பத்திரிக்கைகளிலும் அச்சேறியது இது குறித்து டில்லியில் இருந்த அசோக் சவானிடம் கேட்டபோது எப்போழுதும் போல் மேலிடம் என்று சொல்லி போனை வைத்துவிட்டார். அவரது உற்சாகமற்ற பதிலே சொல்லிவிட்டது இன்னும் பிரச்சனைகள் தீரவில்லை என்று இருப்பினும் டில்லி மும்பை இரண்டுமே பரபரப்பில் இருந்தது. காலை முதலே விமான போக்குவரத்து துறை காபினெட் மந்திரியும் தேசியவாத காங்கிரஸ் கட்சி மராட்டிய மாநில பொருட்பாளருமான பிரபுல் பாய்படேல் வீட்டில் பரபரப்பு தொற்றிகொண்டது.
டில்லியில் அவரது வீட்டின் முன்பு மீடியாக்கள் கூட்டம் அதிகமாகிவிட்டது. இன்று சட்டமன்ற கூட்டத்தொடரின் முடிவு நாள் இன்று புதிய உறுப்பினர்கள் பதவி யேற்று புதிய கூட்டதொடருக்கான அட்டவனை தயாரிக்க வேண்டும் ஆனால் காங்கிரசும் தேசிய வாத காங்கிரசும் இன்னும்  தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டு இருக்கிறது. சரியாக11 மணிக்கு வெளியே வந்த படேல் துணைமுதல் மந்திரியாக சஜன் புஜ்பால் இன்று பதவி ஏற்கமாட்டார். அதே நேரத்தில் அசோக் சவான் முதல் மந்திரி பதவி ஏற்கும் போது நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம் என்றுகூறிவிட்டு சென்றுவிட்டார்.
டில்லியில் உள்ள மராட்டிய சதனில் கொஞ்சம் டென்சனுடனேயே முதல் மந்திரி அசோக்சவான் காணபட்டார். சாயிபாபா ரெயிட் அன்னை போட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன் உடனே மும்பை கிளம்பிவிட்டார். 

         இதில் ஒற்றுமை என்ன வென்றால் பாரத திருநாட்டின் அனைத்து பெரிய கட்சிகளின் அலுவலகங்களுமே நேற்று பரபரப்பாக காணப்பட்டது. கர்நாடகாவில் பதவி எனக்கு என ரெட்டி பிரதர்ஸ் மல்லுகட்டுகிறார்களாம், அதனால் பஞ்சாயத்து பாரதிய ஜனதா தலைமை அலுவலகத்தில், மாவோயிஸ்டுகளால் பிரச்சனை என்றால் எகஸ்ரா தலைவலி போல் மம்தா குடைச்சல் அதனால் சிவப்பு தோழர்கள் தலைமை அலுவலகத்திலும் பரபரப்பு,
சரத பவாரிடம் சோனியா சொன்னதாக சில பாயிண்டுகள் கசிந்தன.
1 உளதுறை எங்களுக்குதான் அதில் நாங்கள் விட்டு கொடுக்கமாட்டோம், அதற்கு பதிலாக வருமான வரித்துறை எடுத்துகொள்ளுங்கள்(நாராயன் ரானே ராமராஜன் லெவலுக்கு போய்ட்டார் பாவம்)
2, பில்டர் மூலமாக வருமானம் வரும் எந்த ஒரு துறையும் தயவு செய்து கேட்டு விட்டாதீர்கள்,தேர்தலில் அதிகம் செலவழித்து விட்டீர்கள் அது எங்களுக்கும் தெரியும் ஆனால் நாங்கள் தேசிய கட்சி புரிந்து கொள்ளூங்கள்,

சரத்பவாரின் பதில்: நோ மேடம் தயவு செய்து எங்களுக்கு மேலே சொன்ன இரண்டும் வேண்டும் இல்லை என்றால் நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்போம்,

சோனியா: இன்று கடைசி நாள் இன்று கவர்னரிடம் கடிதம் தரவேண்டும் பிடிவாதம் பிடிக்காதீர்கள்,

சரத்பவார்: கடந்த முறை நாங்கள் அதிக எம் எல் ஏ வைத்திருந்தும் உங்களுக்கு முதல் மந்திரி பதவி கொடுத்தோம் இந்த முறை எங்களுக்காக நீங்கள் விட்டு கொடுங்கள் என்றார்.

ஆனால் விலாஸ் ராவ், சுஷில் குமார் ஷிண்டே, போன்ற மராட்டிய தலைவர்கள் சோனியாவிடம் மேடம் அவர்கள்

வழிக்கு வருவார்கள் அதனால் நமது பிடியை தளரவிடவேண்டாம் என்று சொல்லிவிட மேடம் சரி நாளைக்கு போசலாம் என்று எந்த ஒரு முடிவும் சொல்லாமல் சோனிய உடனே சென்று விட்டார்.

மும்பை:
ஓட்டு போட்ட மக்கள் எதுவுமே அறியாமல் அவர்கள் அவர்கள் வேலையை பார்த்து கொண்டு பரபரப்பாக எப்போழுதும் போல் ஓடிக்கொண்டு இருந்தனர். மீடியாக்கள் காலையில் இருந்தே காந்தி பவர், தேசிய வாத காங்கிரஸ் அலுவலகம், போன் செய்த வாறு இருந்தது. இன்று எப்படியாவது முதல் மந்திரி துணை மந்திரி பதவி யேற்றுவிடுவார்களா? என்ற கேள்வி மட்டும் தான் அனைவரிடத்திலும்அசோக் சவான் சாமானியத்தில் போனில் வரவில்லை, அவரது இரண்டு உதவியாளர்களுமே சாப் டில்லி துன் போல்தோஸ் ஆகே(சார் டில்லி வலாக்களுடம் பேசிகொண்டு இருக்கிறார்)
மாணிக்ராவ் தாக்கூர் போனை எடுத்தவுடன் எங்க தரப்பில் நோ ரெட் சிக்னல் என்றார்ஆர் ஆர் பாட்டில் தன்னுடைய பாணியில் நிதானமாக பதில் கூறினார், மாலை வரை காத்திருங்கள் (இவர் நாளை வெளிவரும் பேப்பர் செய்தி கொடுப்பார்)
அசோக் சவான் மற்றும் சஜன் புஜ்பாலை கவர்னர் ஆலோசனைக்கு அழைக்க கிடைத்த வண்டியில் தொத்தி கொண்டு எல்லோரும் (மீடியாஸ்) மலபார் ஹில் கவர்னர் அலுவலகம் செல்ல அங்கு அசோக் சவான் ஏற்கனவே உள்ளே சென்று இருந்தால் பல மீடியாங்கள் அங்கும் குழுமி இருந்தனர். சுமார் 20 நிமிடம் கழித்து வெளியே வந்தவரிடம் கேள்வி கேட்ட போது விரைவில் நாங்கள் ஆட்சி அமைப்போம், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கவர்னர் கேட்டறிந்தார் என்றார் இதைவிட வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு வேறு எந்த கேள்விக்கும் பதில் நஹி.









அசோக் சவான் சென்ற் சில நிமிடங்களில் சஜன் புஜ்பால் புன்னகையுடன் கவர்னர் மாளிகையில் சென்றவர் பவுன்ஸ் ஆன டென்னீஸ் பந்து போல் புன்னகை மாராமல் வெளியே வந்தார். அவரிடம் கேள்வி கேட்டமுற்பட்ட போது ராம் டேக் வரசொல்லி அவரது உதவியாளர் சொல்லிவிட்டு சிவப்பு பலுப்பு போட்ட காரில் பறந்துவிட்டார்.
ராம் டேக் உணவு இடைவேளைக்கு பிறகு அரசியல் சூறாவளி மையம் கொண்ட துணைமுதல் மந்திரியின் அரசு வீடுஅனைவருக்கும் சமோசா டீ பரிமாறிகொண்டு இருந்தனர். எப்போதும் போல் எல்லோருடனும் பேசிக்கொண்டு அடிக்கடி டில்லியில் இருந்து வரும் போனில் பேசிக்கொண்டும் இருந்தார். இது அவரது வழக்கமான ஸ்டைல் தனியாக வீட்டில் இருந்து விட்டு மீடியாக்களை மணிநேரம் காக்கவைக்க மாட்டார். எல்லோருடனும் கலகலப்பாக பேசிக்கொண்டு நலன் விசாரித்துகொண்டு நிருபர்களிடம் இருக்கும் டென்ஸனை குறைப்பதில் கில்லாடி,
சிறிது நேரத்தில் எல்லோரையுன் கூப்பிட்டு நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தர தயாராகி விட்டோம் என்று தடாலடியாக குண்டு போட்டார்.

பிரச்சனை இன்னும் மிகவும் மோசமாகிவிட்டது என்று தெரிந்து விட்டது.
காங்கிரஸ் கட்சி அலுவலகம காந்திபவன் 


மாணிக்ராவ் தாக்கூர் நிதானமாக பேசினார் எங்கள் தரப்பில் எந்த ஒரு தடையும் இல்லை, டில்லியில் பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக நடந்து கொண்டு இருக்கிறது. இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்றார்.நாளையாவது ஆட்சி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு கவர்னரிடம் பேசி இருக்கிறோம் என்ற சொதப்பலாக பதில்சொல்லி விட்டு சென்று விட்டார். இன்றைய சூரியனும் மராட்டிய அரசியல் பற்றி மரைன் டிரைவில் டி வி மீடியாக்கள் ஏதும் பேசுவார்கள் அதை கேட்டு விட்டு நிம்மதியாக தூங்கலாம் என்று மேகத்தை எல்லாம் விலக்கி விட்டு காத்திருந்தான் பாவம் ஏமாற்றத்துடன் தூங்க சென்று விட்டான். எப்படியும் இந்த வாரத்திற்குள் ஆட்டம் முடிவிற்கு வந்து விடும் என்று தெரிகிறது.

ராஜ் தாக்கரே ஏதோ பரபரப்பு ஏற்படுத்தில் ஒருவாரம் பேப்பரில் ஸ்டேட் மெண்ட் விடலாம் என்று நினைத்தார் ஆனால் காங்கிரஸ் தேசிய வாத காங்கிரஸ் கட்சிகளின் லடாயின் முன்பு இவரது மராட்டி ஸ்பீக்கிங் ஸ்டேட்மெண்ட் புஸ்வானமாக போனதால் மீண்டும் பாந்திராவில் ஏதோ பேசினார்.
சிவசேனா பாரதிய சனதா சுறுசுறுப்பு அடைந்து விட்டது. 3 வருடங்களுக்கு பிறகு சிவாலயம்(சிவசேனா தலைமை அலுவலகத்திற்கு) பாலாசாகிப் தாக்கரே ஜி வருகை தந்தார். புதிய உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு பேசிக்கொண்டு இருந்தார். இனி களத்தில் இறங்க வேண்டியது தான் என்ற முடிவிற்கு வந்துவிட்டார் போலும் புலி குகையை விட்டு வெளியே வந்துவிட்டது. இனி களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும்





3 நவ., 2009

யாருக்கு என்ன வேண்டும்(புதிய பாலிவுட் திரைப்படம்)



மும்பை, நவம்பர்.4
கூட்டனியால் ஆட்சியின் போது குடைச்சல் வரும் இது இந்த காலத்தில் சகஜமாகிவிட்டது. நரசிம்மராவ் காலத்தில் ஆரம்பித்த இந்த குடைச்சல் மாநிலங்களிலும் பரவி வருகிறது. இந்த குடைச்சல்களை கொடுத்து எடுத்து சமாதான படுத்திவிடுவார்கள்(அதற்காகத்தானே குடைச்சல்கள் வருகிறது). மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் முன்பே வித்தியாசமான குடைச்சல் ஆரம்பித்து விட்டார்கள்.
சரத் ராவ் அண்ட் சோனியா பிரசண்ட்:- யாருக்கு என்ன வேண்டும்இயக்கம் மற்றும் நடிப்பு:- அசோக்சவான் சஜன் புஜ்பால்
இசை:- ராஜ் தாக்கரே அண்ட் 13 எம் எல் ஏ ,
மற்றும் துணை நடிகர்களாக நடிகர்கள் 228 எம் எல் ஏக்கள் நடிக்கும் யாருக்கு என்ன வேண்டும்
காமடியன்கள்:- அபு ஆஸிம், ரமேஸ் வாங்களோ
ரிலீஸ் தேதி இன்று ஆகவேண்டியது ஆனால் சில ஏரியாக்கள் இன்னும் சரியாக செட்டில் ஆகாததால் இன்னும் இழுபறி 
திரைக்கதை
            கடந்த 10 வருடமாக மராட்டிய மாநிலத்தை தங்கள் வசம் வைத்திருந்த மராட்டா மாவீரர்கள்(காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்) மீண்டும் கடுமையான போருக்கு பிறகு (மாலை நேரங்களில் எதிரனி படைக்குள் மாறுவேடத்தில் புகுந்து அனைவருக்கும்  சாராயம் வாங்கி கொடுத்து மறுநாள் போரின் போது அவர்களுக்குளேயே மோதி விட்டு பார்க்கும் வேலைகளை கண்ட எதிர்படைகள் (சிவசேனா பாரதிய சனதா) களத்தைவிட்டு விலகிவிட்டது. மூன்றாம் அணியோ போருக்கான ஆயுதங்கள் எதுவும் கொண்டு வராமல் இரண்டு அணியினரிடம் கிடைத்தை வாங்கி கொண்டு களத்தின் ஓரம் நின்று வேடிக்கை பார்த்த காரணத்தால் முழுமையான வெற்றி காங்கிரஸ் தேசியவாத காங்கிஸ் கிடைத்தாக அறிவிக்கபட்டது.

        ஆட்சி அமைக்கும் பொழுது வில்லன் நாராயன் ரானே திடிரென திருந்தி ஹீரோவிற்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கி விடுகிரார். இதனால் வில்லன் இல்லாமல் படம் சுவாரஜ்யமாக இல்லை என்று நினைத்து தங்களுக்கு உள்ளேயே வில்லனாக மாறி படத்தை சுவாரஜ்யமாக்க முயன்றனர். ஆனால் படத்தின் திடீர் திருப்பமான வில்லன் பாத்திரத்தில் சுவாரஜ்யம் வருவதற்காக தங்களுக்கு உள்ளேயே போர் செய்து வருகின்றனர்,


           இருவருக்கும் இரண்டு மந்திரி பதவியில் குறி ஒன்று ஒன்று உள்த்துறை மற்றொன்று அர்பன் டிவிலோப்மெண்ட் எனப்படும் வளர்ச்சி துறை உள்த்துறை தங்களின் மீது உள்ள குற்றங்களை மெல்ல மெல்ல நீக்கிவிட இரண்டாவது இந்த 5 வருடத்தில் அனைத்து எம் எல் ஏக்களும் பாரபட்சமின்றி பில்டர்களிடன் குறைந்தது 20 கோடியாவது பார்த்துவிடவேண்டியது என தேசிய வாத காங்கிரஸ் குறிவைக்க இதே காரணத்தை காட்டி காங்கிரஸும் நிற்கிறது.

                               இதனால் படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் பெட்டியில் அடங்கி இருக்கிறது. பணம் போட்டு திரைப்படம் வாங்கிய தொழில் அதிபர்கள் ரிலீஸ் செய்யமுடியாமல் தங்களின் பணி பாதிகபட்டு இருக்கின்றன. எப்போழுதும் போல் இந்த முறையும் இந்த படத்தை ஹிட் ஆக்கிவிட முயற்ச்சிக்கு ரசிக பொதுமக்கள் படம் ரீலீஸ் ஆவதற்கு தாமதாவதாம் வருத்ததில் இருக்கின்றனர்.
          படத்தயாரிப்பாளர்களின் பேச்சாளர் பிரபுல் பாய் படேல் என்பவர் சொல்லும் போது படம் விரைவில் ரிலீஸ் ஆகிவிடும் என்று மட்டும் கூறிவிட்டார். இப்படத்தின் இரண்டாம் ஹீரோ சஜன்புஜ்பாலை கேட்ட போது அவர் படம் ரிலீஸ் ஆவதில் எங்கள் தரப்பில் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் படம் ரிலீஸ் ஆகவிடமாட்டோம் என்றார். ரெயில்வே ஸ்டேசன் மற்றும் பொது இடங்களில் இசை அமைத்து பிரபலமான ராஜ் தாக்கரே குழுவினரின் இசை ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும் போல் தெரிகிறது. சமீபத்தில் இசை அமைப்பாளர் ராஜ் தாக்கரே தங்களது திகில் இசைக்குழுவினருடன் பேட்டி அளிக்கும் போது சட்ட மன்றத்தில் தப்பு, டவரா, டோல் இசை தான் முழங்க வேண்டும் அதை விட்டு விட்டு ஹிந்துஸ்தானி சங்கீதம் இசைத்தால் தோலை உரித்து டோல் செய்து அதில் இசை எழுப்புவோம் என அறிக்கை விட்டதும் இந்த திரைப்படத்தை பெரிதும் எதிர்ப்பாப்பிற்குள்ளாகி இருக்கிறது.

                 எப்படியும் இந்த வாரத்திற்கு ரிலீஸ் ஆகிவிடும் என தெரிகிறது படத்தில் அப் டு டேட் விமர்சனங்கள் உங்கள் தமிழ் பிரஸ் இன்போ-மும்பையில் மட்டும் நேரடி ஒலிபரப்பு