கிழக்கு பதிப்பகத்தின் பிரபல புத்தகம் குற்றத்தலை நகரம், அந்த புத்தகத்தில் மும்பை எப்படி மாபிய (கடத்தல்) கும்பல் மற்றும் ரவுடி கோஷ்டிகளின் பிடியில் சிக்கி சீரழிந்தது என்று சொல்லப்பட்டிருக்கும், அந்த புத்தகம் வெளிவந்து பிரபலமாகிகொண்டு இருந்த வேளையில் அந்த புத்தகத்தின் பக்கங்களில் மட்டும் தடுத்து வைத்து மும்பையை மட்டுமல்ல மராட்ட்டிய மாநிலத்தை விட்டே ரவுடிகளை ஓட ஓட விரட்டி அடித்த பெருமை திரு சிவானந்தம் அவர்களை சாரும்,
சுமார் 40 ஆண்டுகளாக மஸ்தான் முதல் தாவூத் தொடர்ந்து சோட்டா ராஜன் பூஜாரி என்று நீண்டு கொண்டு சென்ற குற்றத்தலைநகரின் பட்டியலை முடிவுக்கு கொண்டு வந்த பெருமை திரு சிவானந்தன் அவர்களை சாரும், 1975 ம் ஆண்டு ஐ பி எஸ் முடித்த உடன் மத்திய பிரதேசத்தில் சில ஆண்டு பணி புரிந்து விட்டு அதன் பிறகு மும்பை புறநகர் தானே என திறம்பட பணியாற்றி கடந்த வருடம் மும்பை மாநகர போலீஸ் கமிசனராக பதவி உயர்வு பெற்றார். அதன் பிறகு இன்று மராட்டிய மாநில தலைமை காவலதிகாரியாக மாநில முதல் மந்திரி அசோக்சாவான் மற்றும் உள்துறை மந்திரி ஆர் ஆர் ஆபா பாட்டில் அவர்களால் நியமனம் செய்யப்பட்டார்.
நேற்று இரவு வரை மந்திராலய வட்டங்களால் முன்னால் மும்பை கமிசனர் ஹசன் கபூர் அவர்கள் மராட்டிய மாநில தலைமை காவல்திகாரியாக நியமிக்க படுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டு கொண்டு இருக்கையில் சிவானந்தம் தெரிவு செய்யபட்டது காவல் துறை வட்டாரத்தை ஆச்சர்யத்தில ஆழ்த்தி விட்டது.
சிவானந்தம் சிறந்த தமிழறிஞர் என்பதும் இங்கே குறிப்பிட தக்கது.
திரு சிவானந்தம் அவர்கள் மராட்டிய மாநில தலைமை காவலதிகாரியாக பெறுப்பாற்றிருப்பது மும்பையில் மட்டும்மல்ல
மராட்டிய முழுவதும் வாழும் 20 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் பேசும் மக்கள் பெருமை படக்கூடிய விடயமாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக