21 டிச., 2009

பாட்டிற்கு எனக்கு ராசி இல்லை: (ஆர் ஆர் பாட்டில்) மராட்டிய மாநில உள்த்துறை மந்திரி





  நவீன மராட்டிய மாநிலம் உருவாக காரணமாக இருந்த மராட்டியத்தின்  முதல்-மந்திரி திரு.யஷ்வந்த்ராவ் சவான், மும்பையில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் செண்டரில் இவரது 25-ம் ஆண்டு நினைவு தினம் நடைபெற்றது.

யஷ்வந்த்ராவ் பற்றிய சிறு குறிப்பு:

                                 சாதாரன குடும்பத்தில் பிறந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மராட்டிய மாநிலத்தில் உரிமைக்காக போராடி 1960-ஒன்றுபட்ட மராட்டிய மாநிலம் உருவாக முக்கிய காரணமாக திகழ்ந்தார். மாநிலத்தின் முதலாவது முதல் மந்திரியாக பதவியேற்றவர். தன்னுடைய முதல் மந்திரி பதவியில் இருந்தபோது மகாராஷ்டிரா பேரில் மட்டும் மகாராஷ்டிரா அல்ல இது மகான்களுடைய ராஜ்ஜியம் இங்கு தான் சமூகத்தில் பல துன்பங்களுக்கு இடையே உழன்றுகொண்டு இருந்த அடித்தள மக்களுக்கு உரிமைகளை பெற்றுகொடுக்க முயன்ற துக்காராம் மகாராஜ் தோன்றினார். கோலி குண்டுகளாய சிதரிகிடந்த மராட்டிய ராஜ்ஜியத்தின் எல்லைகளை நிர்ணயித்து பெஷ்வா, சுல்த்தான், மற்றும் பெரும் நிலச்ஜமீந்தார்களிடம் இருந்து மராட்டிய மக்களை மீட்டு மராட்டியர்களுக்கு என பெரும் சாம்ராஜ்ஜியம் படைத்த சாம்ராட் சத்ரபதி சிவாஜி மகராஜ் பிறந்த மண், இந்த தலைவர்களுக்கு எல்லாம் பெருமை சேர்க்கும் விதத்திலும் இந்தியா மட்டுமல்ல உலகமே போற்றும் உத்தம தலைவர் டாக்டர் அம்பேத்காரை தந்த மண், அதனால் இது மாகான்களின் தேசம் மகாதேசம்(மகாராஷ்டிரம்) என்ற பெயரை தாங்கி நிற்கிறது.

                      மராட்டியத்தின் இந்த பெருமையை உலகம் எங்கும் அறிய செய்யவேண்டும் என்றால் இந்த மண்ணின் பெருமையை பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கோடு அனைத்து துறைகளிலும் தனிப்பட்ட கவனம் செலுத்தினார்.

 கல்வி, விவசாயம், தனிநபர் நலம், கலை, தொழில் வளர்ச்சி, பொருளாதாரம், அடித்தள கட்டமைப்பு, போன்ற அனைத்து துறைகளிலும் யஷ்வந்த் ராவ் சவான் அவர்கள் கவனம் செலுத்தி நவீன மாராட்டியத்திற்கு அடித்தளமிட்டார். அவர் வகுத்த பாதையில் தான் வசந்த்ராவ் சவான்,சரத்பவார், விலாஸ் ராவ் மற்றும் தற்போதைய முதல் மந்திரி அசோக்சவான் அவர்கள் சென்று மராட்டியத்தை உருவாக்கி வருகிறார்கள். யஷ்வந்த் ராவின் நினைவு தினமான நவம்பர் 25-ஐ ஒவ்வொரு வருடமும் மிகசிறந்த முறையில் கொண்டாடுவது மட்டுமின்றி அவரது பெயரில் கலை , கல்வி, தொழில், அறிவியல் போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு பாராட்டு வழங்கி யஷ்வந்த் ராவ் பெயரில் பட்டம் வழங்கி பெருமை படுத்துகின்றனர்.

2009-ம் வருட யஷ்வந்த் ராவ் நினைவு தினத்தன்று யஷ்வந்த் ராவ் சவான் மையத்தில் உள்ள அரங்கில் வைத்து மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பிரபல இந்துஸ்தானி இசை பாடகி திருமதி கிஷோரி அமேர்கருக்கு யஷ்வந்த்ராவ் பெயரில் பட்டம் வழங்கி சிறப்பித்தனர்.

சரத்பவார் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் இந்த வருடம் குளிர்கால கூட்ட தொடர் நடைபெறுவதால் சரத்பவார் அவர்கள் கலந்துகொள்ள வில்லை, அவருக்கு பதிலாக மராட்டிய மாநில துணைமுதல் மந்திரி சஜன் புஜ்பால், உள்துறை மந்திரி ஆர் ஆர் அபா பாட்டில், மற்றும் முன்னாள் தலைமை நீதிபதி சுஜாதா மேனன், மராட்டிய மாநில தேசியவாத கட்சி சட்டமன்ற தலைவர் அருன் குஜராத்தி மற்றும் யஷ்வந்த்ராவ் சவான் மையத்தின் செயற்குழு உறுப்பினர்கள் உசைன் தள்வாய் யஷ்வந்த் ராவ் மையத்தின் துணைத்தலைவர், மையத்தின் நிர்வாகி ச.க காளே ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவை துவக்கிவைத்து  யஷ்வந்த்ராவ் சவான் மைய செயளாளர் அருன் குஜராத்தி பேசிய போது யஷ்வந்த் ராவ் சவான் அவர்கள் மராட்டியத்தின் வளர்ச்சியை தனது மனதில் கொண்டு தனது பணிக்காலத்தின் இறுதிவரை பணிபுரிந்தார். அவர் ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் ஈடுபாடு கொண்டவரில்லை, மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து துறையிலும் அவர் தனிப்பட்ட கவனம் செலுத்தினார். அவர் நட்டுவைத்த மராட்டிய மரம் இன்று வளர்ந்து பலன் தந்துகொண்டு இருக்கிறது. அன்னாரின் நினைவு தினத்தில் கலைஉலகில் புகழ்பெற்ற திருமதி கிஷோரி

அமர்கருக்கும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவருக்கும் பட்டமும் பாராட்டும் வழங்குவதில் பெருமை கொள்கிறேன். இசை என்பது மனிதரின் மனங்களில் உள்ள இன்னல்களை களைந்து அமைதியை ஏற்படுத்தும் ஒரு மிகச்சிறந்த சாதனம் இசை இசைஉலகில் சாதனைபடைத்த கிஷோரி அமர்கருக்கு வாழ்நாள் சேவைக்கு இந்த விருது வழங்குவதில் பெருமை அடைகிறேன்” இவ்வாறு அருன் குஜராத்தில் கூறினார்.



                    கல்வி துறை யஷ்வந்த்ராவ் சவான் விருது இந்த வருடம் மும்பை பல்கலைகழகத்தில் சட்ட மேற்படிப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு பராட்டுகளுடன் ரூ.10000 கான காசோலையையும் உள்துறை மந்திரி ஆர்.ஆர்.அபா பாட்டில் வழங்கினார். அதன் பிறகு பேசிய ஆர்.ஆர்.பாட்டில் எப்போழுதும் போல தன்னுடைய பேச்சினால் அரங்கில் கூடியிருந்த பலரின் உள்ளம் கவர்ந்தார், அவரது பேச்சில் சில பகுதிகள் “ துணைமுதல் மந்திரி சஜன் புஜ்பால் அவர்கலுக்கு, சட்டமன்ற தேசியவாத கட்சி தலைவர் அருன் குஜராத்தி அவர்களுக்கும், முன்னாள் நீதிபதி சுஜாதா மனோகர் அவர்களுக்கும் மற்றும் மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும், விழாவிற்கு வருகைதந்திருக்கும் அன்பர்களுக்கும் பத்திரிக்கை தோழர்களுக்கு எனது வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன். அரசியல் களத்தில் இசை என்பது எங்களுக்கு அதிக தொலைவில் தெரிகிறது. சமயம் கிடைக்கும் போது தொலைக்காட்சி மட்டும் தான் இது போன்ற விழாக்களின் போது யாராவது பாடினால் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து கேட்கும் வாய்ப்பு கிடைக்கும், ஆரம்ப காலங்களில் எனது வீட்டில் ஒரு ரேடியோ பெட்டி இருக்கும் நான் 8-ம் வகுப்பு படிக்கும் போது அந்த ரேடியோ பெட்டியை எனது மூத்த சகோதரர் வாங்கி வந்தார். சாமானியத்தில் சில நாட்கள் நன்றாக படித்து கொண்டிருந்தால் எங்கள் யாருக்கும் அந்த ரேடியோ பெட்டி கிடைக்காது அப்பா, அல்லது அண்ணா அவர்களின் கையில் தான் அது ஒலித்து கொண்டு இருக்கும், திடிரென்று அதில் சத்தம் சரியாக வரவில்லை, அதனால் அதை வீட்டின் ஒரு மூலையில் தூக்கி எறிய அதுதான் எனது முதல் இசை தோழனாக மாறியது, வயல்வெளிக்கு தூக்கிசென்று முதலில் அதை பிரித்து மிகபெரிய ஆராய்ச்சி செய்த பிறகு வெறும் சத்தம் மட்டும் கேட்க ஆரம்பித்த உடன் நானும் எனது தோழர்களும் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை, அன்றில் இருந்து பாட்டு வருகிறதோ அந்த ரேடியோ எங்கள் கையில் பட்டு பல இன்னல்களை அடைந்தது, சில நேரங்களில் நன்றாக பாடிக்கொண்டு இருக்கும் பிறகு இரைச்சல்வரும் உடனே இடது வலது என்று தட்டும் போது சில சமயங்களில் பாட ஆரம்பிக்கும், அந்த ரேடியோ பெட்டிக்கென்று என்னிடம் பள்ளி மாணவர்கள் நன்பர்களாக மாறினர். இத்தனைக்கும் அது பாடாத ரேடியோ பெட்டி,

                      கல்லூரி முடிந்து அரசியலுக்கு வந்த பிறகு ஒரு முறை விமானத்தில் பயனம் செய்து கொண்டிருந்த போது அருகில் உள்ள ஒருவர் பாடல் கேட்டுகொண்டு இருந்தார், நானும் கேட்கலாம் என்ற நினைப்பில் விமான பணிப்பெண்ணிடம் எனக்கும்  காதில் மாட்டி கேட்ப்பானை கொடுத்தால் நானும் பாடல்களை ரசிப்பேன் என்றேன், அந்த பணிப்பெண்ணும்  ஹெட்போனை கொண்டு வர அதை இனைத்தும் முதலில் ஒன்றும் கேட்கவில்லை, விமான பணிப்பென்னிடம் ஒன்றும் கேட்கவில்லை மேடம் என்றேன், அவரும் முதலில் லேசாக தட்டி பார்த்தார்,( எனக்கு அதை கண்ட்தும் சிறுவயது சிறிய வயது  ரேடியோ பெட்டி நினைவில் வந்தது) பிறகு வேறு ஒன்றைகொண்டு வர சென்றவர், வெகுநேரம் கழித்து இன்னோரு ஹெட்போனை கொண்டுவந்தார், அதை இணைத்து காதில் மாட்டி பாடல் கேட்க போகும் நேரத்தில் பாடல் நின்றுவிட்டது,

பைலட்டின் அறிவிப்பு இறங்கும் இடம் வந்துவிட்டது, என அறிக்கை வர ஏமாந்த முகத்துடன் திரும்பினேன், இறங்கும் போது அந்த பணிப்பெண் என்னிடம் மன்னிப்பு கேட்டாள், அதற்கு நான் எனக்கு பாட்டிற்கு சிறியவயதில் இருந்தே ராசி இல்லை மேடம் என்று சொல்லிவிட்டேன். இருப்பினும் இசை என்பது மனதிற்கு அமைதிகொடுக்கு ஒரு அருமருந்து, சட்ட மேற்படிப்பில் நல்ல மதிப்பெண் பெற்று இன்று பரிசு பெற்ற மாணவருக்கு எனது பாராட்டை தெரிவித்து கொள்கிரேன். நானும் சட்டம் பயின்றவந்தான் எனது மதிப்பெண்களை இந்த மேடையில் கூற முடியாது, வகுப்பில் ஆசிரியர் இல்லாத போது மட்டும் தான் நான் அதிகம் சென்று இருக்கிறேன்.  நல்ல மதிப்பெண் பெற்று இருந்தால் இன்று என்னை இந்த மேடையில் யாரும் பார்த்திருக்க முடியாது, யாராருக்கு என்ன எழுதி இருக்கிறதோ ஆனால் எனக்கு இப்படி எழுதி இருக்கிறது. சட்டக்கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் வகுப்பில் சென்று அமர்ந்திருந்தேன், ஆசிரியர் வந்தார் பாடம் நடத்திவிட்டு சென்றுவிட்டார், நான் ஒன்றும் புரியாமல் அருகில் உள்ள மாணவரை கேட்டேன் அந்த வகுப்பு மூன்றாம் ஆண்டு சட்ட வகுப்பு. நான் முதலாம் ஆண்டு வகுப்பிற்கு சென்றபோது வகுப்பு முடிந்து எல்லோரும் வீட்டிற்கு சென்றுவிட்டார்கள். இவர் என்னை போல் இல்லாமல் முதல் நாளே சரியான வகுப்பிற்கு சென்று அமர்ந்து படித்து இருக்கிறார். யஷ்வாந்த்ராவ் சவான் சாகேபை பொருத்தவரை இந்திய இளைஞர்கள் அனைவருக்கும் ஒரு முன்னோடி , மராட்டியம் மாகான்களின் ராஜ்ஜியம் தான் ஆனால் இங்கு எந்த ஒரு மகான்களையும் பணிபுரிய விடுவதில்லை, ஒருவர் முன்சென்றால் மற்றோருவர் நண்டுபோல் இருந்து பின்னால் இழுத்து விடும் வேலைகள் மராட்டியத்தில் அதிகம் உண்டு அதனால் தான் அம்பேதகர் போன்ற மகான்களின் பணி இன்றும் முழுமையடையாமல் இருக்கிறது இவ்வாறு உள்த்துறை மந்திரி ஆர்.ஆர்.ஆபா பாட்டில் கூறினார்.

இவர் பேச ஆரம்பித்தில் இருந்து பேச்சு முடியும் வரை கூட்டம் முழுவதும் சிரிப்பலை ஒலித்துகொண்டே இருந்தது. மராட்டியம் போன்ற பெரிய மாநிலத்தில் உள்த்துறை மந்திரிபதவியில் இருந்துகொண்டு இறுக்கமான சூழலில் கூட இவ்வளவு நகைச்சுவையாக பேசும் கலை ஆர்.ஆர் பாட்டிலுக்கே உரித்தான ஒன்று ஆகும்.

இதனை அடுத்து பேசிய மராட்டிய துணைமுதல் மந்திரி சஜன் புஜ்பால்  “ நான் மும்பை மேயராக இருக்கும் போது ஒரு முறை மத்திய பிரதேச அரசு கிஷோரி அம்ரேக்கர் அம்மாவிற்கு 1 லட்ச ரூபாய் பரிசு கொடுத்தது. நான் மிகவும் ஆச்சர்யபட்டுவிட்டேன் ஒரு மராட்டிய பாடகிக்கு வேறுமாநிலம் பரிசு வழங்குகிறது நாம் ஏன் சும்மா இருக்கவேண்டும் என்று உடனே கமிட்டி ஒன்றை அமைத்து மராட்டியத்தில் புகழ்பெற்ற பாடகர்களை உற்சாகபடுத்தும் நோக்கில் மும்பை மாநகராட்சியில் கமிட்டி ஒன்றை அமைத்தேன். அரசியலில் இசை என்பது தூரமானது என்று உள்த்துறை மந்திரி குறிப்பிட்டு இருந்தார். அது உண்மைதான் அனைத்து தரப்பு மக்களின் நிறைகுறைகளை நிறைவேற்றும் பொறுப்பில் இருக்கும் எங்களுக்கு இசை கேட்க நேரம் இருப்பதில்லை, ஆனால் மக்களின் துயரம் களைய இனிய இசை வழங்கு  இசைக்கலைஞர்களுக்கு பரிசு வழங்குவதில் நாங்கள் பெருமை அடைகிறோம். இன்று என்ன பாடல்கள் இசைக்கின்றனர் என்றே தெரியவில்லை, கோலி மாரோ பேஜே மே என்கிறார்கள், கல்லாஸ் என்கிறார்கள், இசை என்பது மூளையில் ஏறி நரம்புகள் வழியாக நினைவில் கலந்து உடலுக்கு அமைதியை தருகிறது. இது போன்ற பாடல்கள் கேட்கும் பொழுது மூளை செயலிழந்து போய்விடும் போல் இருக்கிறது. பாடல்வரிகளை தேடவேண்டியுள்ளது.

அப்படியே தேடிகிடைத்தாலும் அதன் அர்த்தம் தெரியவில்லை டிக்னரியில் இல்லாதா வார்த்தைகள் எல்லாம் பாடல்களாக இருக்கிறது. ரப்ஜிக் ரப்ஜிக் ரங் இந்த மூன்று வரிகள் பாடல் முழுவதும் ஒருபாடகர் பாடி இருக்கிறார், அதற்கு விளக்கம் என்ன வென்று யாராது சொல்வார்களா, இது போன்ற பாடல்கள் வலம் வரும் காலத்திலும் கிஷோரி அம்ரேர்கர் அவர்களின் இந்துஸ்தானிய இசை தனித்து விளங்குகிறது என்றால் அது அந்த இசைக்கு இருக்கும் தனி மரியாதை அம்மையாருக்கு இந்த விருது வழங்குவதில் நான் பெருமை அடைகிறேன்” இவ்வாறு துணைமுதல் மந்திரி சஜன்புஜ்பபல் கூறினார்.

ரூ 2 லட்சமும் பராட்டு பத்திரமும் இந்துஸ்தானிய இசை அமைப்பாளர் கிஷோர்அம்ரேகருக்கு துணைமுதல் மந்திரி சஜன்புஜ்பால் வழங்கி கவுரவித்தார்.                   

19 டிச., 2009

எபிசோட் நம்பர் 2



  ஃபகிம், அன்சாரி மும்பை தாக்குதல் முடிந்த நான்காவதுவாரம், உத்திரபிரதேசத்தில் வைத்து கைது செய்யபட்டனர். இருவரிடன் இருந்து பெற்ற கையெழுத்தும், சுட்டு கொல்லபட்ட தீவிரவாதிகளிடம் இருந்து பெற்ற சில கையெழுத்து வரைபடங்களும் ஒத்து போனது. நவம்பர் முதல் ஜனவரி இரண்டாம் தேதிவரை கதையின் கரு கிடைக்காமல் அல்லாடிகொண்டு இருந்த பாதுகாப்பு துறையினருக்கு(மும்பை காவல்த்துறை இதர) ஃபாகிம், அன்சாரி மூலம் கரு கிடைத்தது. உடனே கதை ஆரம்பமானது. முன்னுடை-லஷ்கர் எ தொய்யபா- நீண்ட கால திட்டம்- இந்திய பொருளாதாரம்-மும்பை- கடல்வழி-பணய கைதி-கொலைகள்-சுபம்.

கிர்காவ் கடற்கரையில் இஸ்மாயில் கொல்லப்பட்டது, ஒரே ஒருதீவிரவாதி அஸ்மல் கசாப் பிடிபட்டது, புரியாத மெட்ரோ தியேட்டர் அருகில் ஒரு காரை கடத்தி செல்கின்றனர். கிர்காவ் கடற்கரையில் போலீசாரால் அந்த கார் வழிமறிக்கபடுகிறது. காரில் இருந்தும் துப்பாக்கி சூடு வெளியில் போலீசார் துப்பாக்கி சூடு இறுதியில் கார் நிற்கிறது. சில வினாடி அமைதிக்கு பிறகு ஹெட்கான்ஸ்டபிள் ஓம்ளே காரின் கதவை திறக்கிறார். கசாப் ஒம்ளேவை சுட்டுகொல்கிறான். அதன் பிறகு அவனை சுடாமல் (பொன்னே பூவே) என போலீசார் கைது செய்கிறார்கள் சரி அவனை உயிரோடு பிடித்தது பாராட்ட கூடிய விடயம்.

கசாப் எப்படி உயிர் பிழைத்தான் என்பது மில்லியன் டாலர் கேள்வி ஒன்று காரில் ஏறிய உடனே முன்னால் நன்றாக உடலை முன்சிட்டின் இடையில் ஒளிந்திருக்க வேண்டும். இதற்கு குறைந்தது 5 நிமிடமாவது பிடிக்கும், அதுவும் கசாப் போன்று ஒருவன் முன்புறத்தில் ஒளிவது இயலாத காரியம், அப்படியே அவள் உயிர் பிழைக்க ஒளிந்தால் உடன் வரும் இஸ்மாயில் சும்மா விடுவானா!!!!

கர்கரே மற்றும் மூன்று போலீஸ் உயரதிகாரிகள் மரணம் , கசாப் உயிருடன் பிடிபட்டது எல்லாம் முள்ளிவாய்க்கால் மர்மம்.
ஒருவருடம் கோர்ட்விசாரனை நேற்றுடன் முடிந்துவிட்டது. நாளையில் இருந்து வாக்கு மூலம் பெறப்படும் அதாவது இதை இதை நீ சொன்னாய் இதெல்லாம் சரியா என்று குற்றவாளியிடம் கேட்கபடும்.
இந்த நிலையில் அக்டோபர் 3 தேதி மும்பை தாக்குதல் பார்ட் 2 சிகாகோவில் துவங்குகிறது. ஆம் டேவின் கோல்மன் ஹெட்லி மற்றும் தன்வர் ரானா என்ற இரண்டு அமேரிக்க, கனடா நாட்டு குடியுறிமை பெற்ற பாகிஸ்தானியர்களின் மூலம்,
பல முறை மும்பை மற்றும் இந்தியாவின் பல நகரங்களுக்கு வந்திருக்கிறார்கள். இங்கு டிராவல் நிறுவனம் ஒன்றை நடத்தி இருக்கிறார்கள். பலரை பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கும் இந்தியாவில் இருந்து பல அயல்நாடுகளுக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள்.
அதாவது மும்பையில் தாஜ், சி எஸ் டி, ஒபராய் மற்றும் நரிமன் ஹவுஸ் போன்ற இடங்களை காணொலி படம் எடுத்து இருக்கிறார்கள். அதாவது மும்பை தாக்குதலின் மூளை இவர்கள் தான் ஆரம்ப கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. அப்படி என்றால் இவர்களை பற்றி கசாபிற்கு தெரியாதா அல்லது அவனிடம் மும்பை பற்றி தகவல் தந்தவர்கள் வேறுயார் என்று  விசாரிப்பவர்கள் கேட்கவில்லையா,
ஒரு நாளைக்கு கசாபிற்கான செலவு 23 ஆயிரம்,தவிர 3 ஷிப்ட் திபெத் எல்லை காவல்படை போலீசார், இரண்டு சிறப்பு போலீஸ் உயரதிகாரி, இரண்டு சிறப்பு மருத்துவர், ஒரு சமையல்காரர், (குளிர்சாதன அறை-இது யூகம் மட்டுமே) 5 கண்காணிப்பு காமிரா(சிசிடிவி), இதர இதர இதர,,,,,
  இதில் மூன்று முறை மயக்க சோதனை செய்யபட்டதாம் அதில் அவன் பல உண்மைகளை சொன்னானாம், அப்படி என்றால் டேவிட் ஹெட்லி , தன்வர் ரானே பற்றி ஒன்றும் சொல்லவில்லையா? அல்லது கேட்கவில்லையா? முக்கியமான ஒன்று தீவிரவாதிகளுக்கு டேவிட் ஹெட்லி எடுத்த மும்பை விடியோ படங்கள் காட்டபட்டது. இது சமீபத்திய உண்மை,
டேவிட் ஹெட்லி மற்றும் தன்வர் ரானே மூலமாக மும்பை தாக்குதல் தொடரில் இரண்டாம் பாகம் ஆரம்பித்து இருக்கிறது. இதுவும் டிவி மெகா தொடர்போல இழுத்துசெல்லும் என்று தெரிகிறது.
நான் முன்பே குறிப்பிட்டது போன்று இனி கசாபிற்கு ராஜா போக வாழ்க்கைதான், விசாரனை மீண்டும் புதிய அத்தியாயத்தில் துவங்க இருக்கிறது.
அசோக் காம்டேவின் மனைவி வினிதா காம்டே தனது புத்தகமான கடைசி குண்டு(the last bullet)  என்ற புத்தகத்தில் இறுதியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அதாவது “பாதி உள்ளே பாதி வெளியே இருந்து தயாரிக்கபட்ட திட்டம் மும்பை தாக்குதல்” டேவிட் ஹெட்லிக்கு உதவியவர்கள் என்று இந்தியாவில் இதுவரை யாரும் கைது செய்யபடவில்லை, அல்லது அவர்கள் காப்பாற்றபடுகிறார்கள்.ஒரு கசப்பான உன்மைகள் விரைவில் வெளிவரும் அது மும்பை தாக்குதல் மூன்றாம் எபிசோட்டாக இருந்தாலும் இருக்கலாம்.
கசாப் கோர்ட்டில் சொன்ன சில வாக்குமூலம்:- மும்பை தாக்குதல் நடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அவனை ஜுஹு ரோட்டில் வைத்து மும்பை போலீசார் கைது செய்தனர்.
:- மும்பைக்கு திரைப்படத்தில் நடிக்கும் நோக்கத்தில் கடந்த 6 மாதமாக மும்பையில் தங்கி இருந்தேன்.
:- நான் பாஸ்போடர்டுடன் கைது செய்யபட்டேன்.
:- எனது பாஸ்போட்டை போலீசார் கிழித்து போட்டு விட்டனர்.
:- நான் எ.கே 47 ஐ பார்த்ததே கிடையாது
:- டேவிட் ஹெட்லி உடன் மூன்று வெள்ளைக்காரர்கள் பகிஸ்தானில் என்னை சந்தித்தனர்.
:- அவர்கள் டிராவல் ஏஜெண்ட் என்று என்னிடம் சொல்லி இருந்தனர்.
:- பத்திரிக்கையில் உள்ள படத்தில் இருப்பவன் என்னை போல் உருவம் கொண்டவன்.
:- அது நான் அல்ல
:- எனக்கு வயது 22
:- ஆனால் கோர்ட் என்னை முதலில் 17 வயது என்று சொன்னது பிறகு 20 வயது என்று சொல்கிறது.
:- மும்பை போலீசார் என்னை வற்புறுத்தி வாக்குமூலம் பெறவைத்தார்கள்.
:- திரைப்படம் நடிப்பதற்காக நான் பலரை சந்தித்து இருக்கிறேன்.
எனக்கு வாய்ப்பு கொடுத்தால் அனைவரின் பெயரையும் சொல்லுவேன்.
  இன்னும் என்ன என்ன கூத்துக்கள் காத்து இருக்கின்றதோ